• English
    • Login / Register

    வெளிப்புறம் மறைக்கப்படாத Tata Harrier EV முதன்முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது

    டாடா ஹெரியர் இவி க்காக மார்ச் 03, 2025 10:03 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 1 View
    • ஒரு கருத்தை எழுதுக

    டாடா ஹாரியர் EV ஆனது ஆல்-வீல் டிரைவ் (AWD) டிரைவ் டிரெய்ன் உடன் வரலாம். இது 500 கி.மீ -க்கு மேல் கிளைம்டு மைலேஜை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சோதனை கார் டூயல்-டோன் வொயிட் மற்றும் பிளாக் எக்ஸ்ட்டீரியர் ஷேடில் இருந்தது.

    • குளோஸ்டு கிரில், திருத்தப்பட்ட பம்ப்பர்கள் மற்றும் ஏரோடைனமிக் பாணியில் அலாய் வீல்கள் ஆகியவற்றை வெளிப்புறத்தில் பார்க்க முடிகிறது.

    • 12.3-இன்ச் டச்ஸ்கிரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஒரு பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பவர்டு டெயில்கேட் போன்ற வசதிகளை அப்படியே தக்க வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சாவியை பயன்படுத்தி காரை முன்னோக்கியும் பின்னோக்கியும் நகர்த்த அனுமதிக்கும் சம்மன் மோடும் இதில் உள்ளது

    • பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் லெவல்-2 ADAS ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

    • விலை ரூ.30 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டாடா ஹாரியர் EV ஆனது கடந்த ஜனவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் தயாரிப்புக்கு தயாராக உள்ள வடிவத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இது விரைவில் அறிமுகப்படுத்தப்பட தயாராக உள்ளது. அதற்கு முன்னதாக, ஆல் எலக்ட்ரிக் ஹாரியரின் மறைக்கப்படாத சோதனைக் கார் முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது 

    என்ன பார்க்க முடிகிறது?

    ஸ்பை ஷாட்களில் பார்த்தது போல், ஹாரியர் டூயல் டோன் வொயிட் மற்றும் பிளாக் பாடி கலரில் இருந்தது. வழக்கமான ஹாரியர் போன்ற ஒட்டுமொத்த வடிவத்தை அப்படியே இது தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஹாரியர் EV -ன் முன்பக்கம் டாடா நெக்ஸான் EV -யில் உள்ளதைப் போலவே குளோஸ்டு கிரில் மற்றும் புதிய வடிவிலான பம்பர் செங்குத்து ஸ்லேட்டுகளுடன் தனித்து தெரிகிறது. பக்க வாட்டில்ல் இருந்து பார்க்கையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஏரோடைனமிக் அலாய் வீல்களை பார்க்க முடிகிறது. ஆனால் முன்பக்க டோர்களில் ‘.EV’ பேட்ஜ் கொடுக்கப்படவில்லை. இது இறுதியாக தயாரிப்புக்கு தயாராக உள்ள கார்களில் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்புறம் வழக்கமான ஹாரியரை போலவே தோன்றினாலும் கூட EV என்பதை காட்டும் வகையில் பம்பர் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஹாரியர் EV -ன் உள்ளே என்ன இருக்கிறது என்பது பற்றிய ஒரு பார்வையும் எங்களுக்கு கிடைத்தது, மேலும் வழக்கமான டீசல் ஹாரியரை போலவே அதே 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் ஃபுளோட்டிங் டச் ஸ்கிரீன் யூனிட் உடன் 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீலுடன் இல்லுமினேட்டட் டாடா லோகோவுடன் இருப்பது போல் தெரிகிறது. ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டபோது, ​​ஹாரியர் EV -யின் டாஷ்போர்டை பற்றிய தெளிவான பார்வையை நாங்கள் ஏற்கனவே பெற்றுள்ளோம். மேலும் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும் வழக்கமான ஹாரியரின் வேரியன்ட் அடிப்படையிலான கலர் தீமுடன் ஒப்பிடும்போது, ​​ஹாரியர் EV ஆனது டூயல் -டோன் பிளாக் மற்றும் வொயிட் தீம் உடன் வருகிறது.

    எதிர்பார்க்கப்படும் பிற வசதிகள் 

    வழக்கமான ஹாரியரில் இருந்து 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் டூயல்-ஜோன் ஏசி போன்ற வசதிகளையும் ஹாரியர் EV கடன் வாங்கலாம். கூடுதலாக ஒரு சம்மன் மோடும் இதில் உள்ளது, இது சாவியை பயன்படுத்தி காரை முன்னோக்கி மற்றும் பின்னோக்கி நகர்த்த அனுமதிக்கிறது.

    இதில் பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்படலாம். 

    AWD (ஆல்-வீல்-டிரைவ்) செட்டப் உடன் வரலாம்

    பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் ஹாரியர் EV காட்சிப்படுத்தப்பட்டபோது டூயல் மோட்டார்கள் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் (AWD) டிரைவ் டிரெய்னுடன் இந்த காரை வழங்குவதாக ​​டாடா உறுதி செய்தது. டாடா ஹாரியர் EV ஒரு பெரிய பேட்டரி பேக்குடன் வரும் என்று எதிர்பார்க்கிறோம். இது சுமார் 500 கி.மீ -க்கும் அதிகமான ரேஞ்சை கொடுக்கலாம். ஆல்-வீல் டிரைவ் பதிப்பை தவிர சிங்கிள் மோட்டார் வேரியன்ட்டும் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். 

    எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

    டாடா ஹாரியர் EV விலை ரூ. 30 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மஹிந்திரா XEV 9e மற்றும் BYD அட்டோ 3 ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

    ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    பட ஆதாரம்

    was this article helpful ?

    Write your Comment on Tata ஹெரியர் EV

    explore மேலும் on டாடா ஹெரியர் இவி

    space Image

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

    • பிரபலமானவை
    • உபகமிங்
    ×
    We need your சிட்டி to customize your experience