Citroen Basalt -ன் அளவுகள் மற்றும் மைலேஜை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்
published on ஆகஸ்ட் 06, 2024 03:02 pm by dipan for சிட்ரோய்ன் பசால்ட்
- 35 Views
- ஒரு கருத்தை எழுதுக
பாசால்ட் ஆனது 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (82 PS/115 Nm) மற்றும் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (110 PS/205 Nm வரை) என இரண்டு ஆப்ஷன்களை வழங்குகிறது
-
சிட்ரோன் பாசால்ட் இந்தியாவில் கார் தயாரிப்பாளரின் முதல் எஸ்யூவி-கூபே டிசைன் ஆகும்.
-
தயாரிப்பு மாதிரியானது C3 ஏர்கிராஸை போன்ற டிசைனைக் கொண்டுள்ளது. V-வடிவ LED DRL-கள் மற்றும் ரேப்பரவுண்ட் LED டெயில் லைட்கள் ஆகியவற்றை பெறுகிறது.
-
இதில் LED புரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் 16-இன்ச் அலாய் வீல்கள் உள்ளன.
-
டூயல் டிஸ்ப்ளேகள் மற்றும் அதேபோன்று டிசைன் செய்யப்பட்ட ஏசி வென்ட்கள் உட்பட C3 ஏர்கிராஸுடன் கேபின் ஒற்றுமைகளைப் பகிர்ந்து கொள்கிறது.
-
பாதுகாப்பு அம்சங்களில் 6 ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் TPMS ஆகியவை அடங்கும்.
-
பாசால்ட் இரண்டு பெட்ரோல் இன்ஜின்களுடன் கிடைக்கும்: 1.2-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் மற்றும் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல்.
இந்தியாவில் பிரெஞ்சு கார் தயாரிப்பாளரின் முதல் எஸ்யூவி-கூபேவான சிட்ரோன் பாசால்ட் அதன் டிசைன் மற்றும் அம்சங்களைக் காட்டும் வகையில் அதன் ப்ரொடக்ஷன்-ஸ்பெக் வெர்ஷனில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் அறிமுகத்துடன் சிட்ரோன் எஸ்யூவி-கூபே பற்றிய சில முக்கிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டது. இந்தக் கட்டுரை, பாசால்ட்டின் டைமென்ஷன்கள் மற்றும் மைலேஜ் ஆகியவற்றை உள்ளடக்கியது. அதைப் பற்றி நீங்கள் கீழே தெரிந்து செய்யலாம்:
டைமென்ஷன்கள்
இந்த எஸ்யூவி கூபேயின் அளவுகள் பின்வருமாறு:
நீளம் |
4,352 மி.மீ |
அகலம் (ORVM-கள் இல்லாமல்) |
1,765 மி.மீ |
உயரம் (சுமை இன்றி) |
1,593 மி.மீ |
வீல்பேஸ் |
2,651 மி.மீ |
பூட் ஸ்பேஸ் |
470 லிட்டர் |
மேலும் படிக்க: இந்த விரிவான கேலரி மூலம் சிட்ரோன் பாசால்ட்டை ஆராயுங்கள்
இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் மைலேஜ்
சிட்ரோன் பாசால்ட் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களை வழங்குகிறது. அதன் விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் |
1.2 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் |
1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் |
|
பவர் |
82 PS |
110 PS |
110 PS |
டார்க் |
115 Nm |
190 Nm |
205 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீட் MT |
6-ஸ்பீட் MT |
6-ஸ்பீட் AT |
மைலேஜ் (கிளைம்டு) |
19 கிமீ/லி |
19.5 கிமீ/லி |
18.7 கிமீ/லி |
5-ஸ்பீடு மேனுவல் கொண்ட 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் லிட்டருக்கு 18 கிலோமீட்டர் வழங்குவதாகக் கூறப்படுகிறது. இதற்கு மாறாக, 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மேனுவலுடன் லிட்டருக்கு 19.5 கிலோமீட்டர் மைலேஜையும், ஆட்டோமேட்டிக் லிட்டருக்கு 18.7 கிலோமீட்டர் என்ற மைலேஜையும் கொண்டுள்ளது.
சிட்ரோன் பாசால்ட் பற்றிய ஒரு கண்ணோட்டம்
சிட்ரோன் பாசால்ட் எஸ்யூவி-கூபே என்பது பிரெஞ்சு கார் தயாரிப்பாளரின் ஐந்தாவது மாடல் ஆகும். இது V-வடிவ LED DRL-கள் மற்றும் இதே போன்ற பம்பர் டிசைன் உள்ளிட்ட டிசைன் கூறுகளை C3 ஏர்கிராஸ் உடன் பகிர்ந்து கொள்கிறது. இது கூபே-ஸ்டைல் ஸ்லோப்பிங் ரூஃப்லைன், டூயல்-டோன் அலாய் வீல்கள், ரேப்பரவுண்ட் LED டெயில் லைட்டுகள் மற்றும் சில்வர் ஸ்கிட் பிளேட் கொண்ட ரியர் பம்பர் போன்ற விஷயங்களை இந்த காரில் பார்க்க முடிகிறது.
உள்ளே, இது C3 ஏர்கிராஸை போன்ற டேஷ்போர்டு லேஅவுட், டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் மற்றும் ஒரே மாதிரியாக டிசைன் செய்யப்பட்ட ஏசி வென்ட்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளது.
இதில் 10.2-இன்ச் டச்ஸ்கிரீன், 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவற்றை உள்ளடக்கியது. பாதுகாப்பு அம்சங்கள் பொறுத்தவரை இதில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் TPMS) ஆகியவை உள்ளன.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
சிட்ரோன் பாசால்ட் காரின் விலை ரூ.10 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டாடா கர்வ் உடன் நேரடியாக போட்டியிடும். மற்றும் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் ஹோண்டா எலிவேட் போன்ற மாடல்களுக்கு ஒரு ஸ்டைலான மாற்றாக இது இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
0 out of 0 found this helpful