காஸ்மெட்டிக் அப்டேட்களுடன் Citroen Aircross Xplorer எடிஷன் வெளியீடு
சிட்ரோய்ன் aircross க்காக நவ 05, 2024 05:49 pm அன்று ansh ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 67 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஸ்டாண்டர்ட் லிமிடெட் எடிஷனை நீங்கள் தேர்வு செய்யலாம். அல்லது கூடுதல் கட்டணம் செலுத்தி பின் இருக்கைக்கான என்டர்டெயின்மென்ட் பேக்கேஜை தேர்வு செய்யலாம்.
முன்பு C3 ஏர்கிராஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்ட சிட்ரோன் ஏர்கிராஸ் காரின் புதிய லிமிடெட் ரன் ஸ்பெஷல் எடிஷன் எக்ஸ்புளோரர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த லிமிடெட் பதிப்பில் காஸ்மெட்டிக் அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் ஸ்டாண்டர்ட் பேக்கிற்கு ரூ. 24,000 கூடுதலாக செலுத்தி கூடுதலாக சில வசதிகளை பெறலாம். மேலும் ஆப்ஷனல் பேக்கிற்கு ரூ.51,700 -ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷன் மிட்-ஸ்பட் பிளஸ் மற்றும் டாப்-ஸ்பெக் மேக்ஸ் வேரியன்ட்களுடன் மட்டுமே கிடைக்கும்.
காஸ்மெட்டிக் அப்டேட் & புதிய வசதிகள்


இந்த சிறப்பு பதிப்புக்கு ஸ்டாண்டர்டர்டு பதிப்பை விட ரூ. 24,000 கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். ஸ்பெஷல் எடிஷன் காரின் வெளிப்புறத்தில் காக்கி கலர் இன்செர்ட்களுடன் பக்கவாட்டில் பாடி டீக்கால்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பிளாக் ஹூட் கார்னிஷ் வெளிப்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


உள்ளே இது இல்லுமினேட்டட் சைடு சில், ஃபுட்வெல் லைட்டிங் மற்றும் டாஷ்கேம் ஆகியவை உள்ளன. ஆப்ஷனல் பேக்குக்காக ரூ.51,700 கூடுதலாக செலுத்தினால் காஸ்மெட்டிக் மற்றும் சில புதிய வசதிகளுடன் டூயல்-போர்ட் அடாப்டருடன் பின்புற சீட் என்டெர்டெயின்மென்ட் பேக்கேஜ் கிடைக்கும்.
சிட்ரோன் ஏர்கிராஸ்: ஒரு பார்வை
ஏர்கிராஸ் 2 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது: 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் இன்ஜின் (82 PS மற்றும் 115 Nm), இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைக்கும். மற்றொன்று 1.2-லிட்டர் டர்போசார்ஜ்டு யூனிட் (110 PS மற்றும் 205 Nm வரை ) இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனை பெறுகிறது. இந்த இரண்டு இன்ஜின்களும் புதிய எக்ஸ்புளோரர் எடிஷனுடன் கிடைக்கும்.
இது 10.2-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஸ்டீயரிங் -கில் கொடுக்கப்பட்ட கன்ட்ரோல்களுடன் வருகிறது.
மேலும் படிக்க: Citroen Basalt மற்றும் Tata Nexon: விவரங்கள் ஒப்பீடு
6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் ரியர்வியூ கேமரா ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
விலை & போட்டியாளர்கள்
சிட்ரோன் ஏர் கிராஸ் காரின் விலை ரூ.8.49 லட்சத்தில் இருந்து ரூ.14.55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) வரை உள்ளது. இது ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், மற்றும் ஸ்கோடா குஷாக் போன்ற காம்பாக்ட் எஸ்யூவி -களுடன் போட்டியிடுகிறது.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: சிட்ரோன் ஏர்கிராஸ் ஆன் ரோடு விலை