டீலர்ஷிப்களை வந்தடைந்த 2024 Kia Sonet ஃபேஸ்லிஃப்ட் … நேரில் சென்று காரை பார்க்கலாம்
published on ஜனவரி 10, 2024 01:50 pm by shreyash for க்யா சோனெட்
- 485 Views
- ஒரு கருத்தை எழுதுக
கியா நிறுவனம் சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டிற்கான ஆர்டர்களை இப்போது ஏற்றுக்கொள்கிறது. மேலும் இதன் விலை விவரங்கள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கியா நிறுவனம் ஏற்கனவே சோனெட் ஃபேஸ்லிஃப்டை முழுமையாக அறிமுகம் செய்து விட்டது. ஆனால் அதன் விலை விவரங்கள் வெளியாகவில்லை. அது இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவி -யை அதிகாரப்பூர்வமாக ரூ.25,000 தொகையை செலுத்தி முன்பதிவு செய்யலாம். மேலும் இப்போது 2024 கியா சோனெட் யூனிட்கள் டீலர்ஷிப்களுக்கு வந்துள்ளதால் நேரில் சென்று நீங்கள் பார்க்கலாம்.
கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டின் டாப்-ஸ்பெக் ஜிடிஎக்ஸ்+ வேரியன்ட் இது என்பதை படம் காட்டுகின்றது. நீங்கள் இந்த காரை 3 டிரிம்களில் இருந்து தேர்வு செய்யலாம்: டெக் லைன், ஜிடி லைன் (மேலே படத்தில் உள்ளது) மற்றும் எக்ஸ்-லைன். புதுப்பிக்கப்பட்ட முன்பக்கம் மற்றும் நீளமான ஃபாங் வடிவ LED DRL -கள் ஆகியவை இந்த காரில் உள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்கள். கூடுதலாக, பம்பர் வடிவமைப்பும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது, மேலும் ஃபாக் லேம்ப் -களும் முன்பை விட இப்போது நேர்த்தியாக உள்ளன.
இதையும் பாருங்கள்: Honda Elevate இனிமேல் அறிமுக விலையில் கிடைக்காது… Honda City -யின் விலையும் உயர்ந்துள்ளது
பக்கவாட்டு தோற்றம் பற்றி பார்க்கப்போனால் பழைய பதிப்பைப் போலவே தெரிகிறது. புதுப்பிக்கப்பட்ட அலாய் வீல் வடிவமைப்பும் உள்ளது. பின்புறத்தில் சோனெட் ஃபேஸ்லிஃப்ட் இப்போது கனெக்ட்டட் LED டெயில்லைட்கள் மற்றும் புதிய வடிவிலான பின்புற பம்பர் ஆகியவற்றை பார்க்க முடிகின்றது.
கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டின் டேஷ்போர்டு அமைப்பு மாறாவில்லை. அப்டேட்கள் புதிய கிளைமேட் கன்ட்ரோல் பேனல் மற்றும் அப்ஹோல்ஸ்டரிக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. எஸ்யூவி -யில் உள்ள புதிய அம்சங்களில் 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகியவை அடங்கும். சோனெட் ஏற்கனவே சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது.
பாதுகாப்பைப் பொறுத்தவரை, 2024 சோனெட்டில் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் லேன்-கீப் அசிஸ்ட், ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் உள்ளிட்ட லெவல் 1 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை உள்ளன.
இதையும் பார்க்கவும்: சோதனை செய்யப்பட்டு வரும் Skoda Enyaq EV… இந்த ஆண்டு இந்தியாவில் வெளியாகிறதா ?
மேலே உள்ள படத்தில் இருப்பது, டீலர்ஷிப்புக்கு வந்த சோனெட் ஒரு டீசல்-ஆட்டோமெட்டிக் வேரியன்ட் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகும். இது 116 PS மற்றும் 250 Nm -அவுட்புட்டை கொடுக்கும் இது மூன்று டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது: 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 6-ஸ்பீடு iMT (கிளட்ச்லெஸ் மேனுவல்) மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன். மற்றொன்று 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட் (120 PS / 172 Nm) அவுட்புட்டை கொடுக்கும் இன்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (83 PS / 115 Nm) மற்றும் 6-ஸ்பீடு iMT (கிளட்ச்லெஸ் மேனுவல்) அல்லது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT) உடன் கொடுக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டின் விலை ரூ. 8 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மற்றும் மஹிந்திரா XUV300 ஆகிய கார்களுக்கு போட்டியாக தொடரும்.
மேலும் படிக்க: கியா சோனெட் ஆட்டோமெட்டிக்