சோதனை செய்யப்பட்டு வரும் Skoda Enyaq EV… இந்த ஆண்டு இந்தியாவில் வெளியாகிறதா ?
published on ஜனவரி 10, 2024 12:06 pm by rohit for ஸ்கோடா enyaq
- 181 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஸ்கோடா நிறுவனம் என்யாக் iV எலக்ட்ரிக் கிராஸ்ஓவரை இந்தியாவிற்கு நேரடி இறக்குமதியாகக் கொண்டு வர வாய்ப்புள்ளது. இதன் விலை சுமார் ரூ.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கலாம்.
ஸ்கோடா - இப்போது வரை - அதன் உலகளாவிய மாடல்களை இந்தியாவிற்குக் கொண்டு வந்திருந்தாலும், இங்கே வளர்ந்து வரும் EV பிரிவில் இன்னும் கால் பதிக்கவில்லை. ஆனால் அது 2024 -ம் ஆண்டில் ஸ்கோடா என்யாக் iV காரின் வருகை மூலமாக மாறலாம். ஸ்கோடா இதை ஒரு CBU (முற்றிலும் கட்டமைக்கப்பட்ட யூனிட்) காராக விற்பனை செய்யலாம். தற்போது இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் ஸ்கோடா EV-யை பார்க்க முடிந்தது, அதுவும் எந்த மறைப்பும் இல்லாமல்!
ஸ்பை ஷாட்களில் கவனிக்கத்தக்க விஷயங்கள்?
ஸ்பாட் செய்யப்பட்ட மாடல் வொயிட் எக்ஸ்ட்டீரியர் நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டிருந்தது மற்றும் எதுவும் மறைக்கப்படவில்லை. இது குறிப்பாக அதன் ஆல்-எலக்ட்ரிக் தன்மைக்காக வடிவமைக்கப்பட்ட ஏரோ-குறிப்பிட்ட அலாய் வீல்களையும் கொண்டிருந்தது. கூபே போன்ற ரூஃப்லைன் மற்றும் நேர்த்தியான LED டெயில்லைட்கள் ஆகியவற்றையும் பார்க்க முடிந்தது.
எதிர்பார்க்கப்படும் கேபின் வசதிகள்
என்யாக் காரின் உட்புறத்தை எங்களால் பார்க்க முடியவில்லை என்றாலும், உலகளவில் விற்கப்படும் மாடல் ஒரு மினிமலிஸ்டிக் அமைப்பை கொண்டுள்ளது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்டை பொறுத்து பல தீம்களை பெறுகிறது. ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் 13-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் ஆகியவை எலக்ட்ரிக் கிராஸ்ஓவரில் வழங்கப்படலாம்.
பாதுகாப்பைப் பொறுத்தவரை, என்யாக் காரில் 9 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
மேலும் படிக்க: ஸ்கோடா நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் 1 லட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்துள்ளது
எலக்ட்ரிக் பவர்டிரெய்ன்கள்
இந்தியா-ஸ்பெக் என்யாக்கில் வழங்கப்படும் பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பற்றிய சரியான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. சர்வதேச அளவில், என்யாக் iV மூன்று பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது: 52 kWh, 58 kWh மற்றும் 77 kWh. சிறிய 52 kWh மற்றும் 58 kWh பேட்டரி பேக்குகள் ரியர் வீல் டிரைவ் உடன் மட்டுமே கிடைக்கின்றன. பெரிய 77 kWh பேட்டரி பேக் கொண்ட வேரியன்ட் 510 கிமீ வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரியர் வீல் டிரைவ் மற்றும் மற்றும் ஆல்-வீல் டிரைவ் ட்ரெய்ன்கள் இரண்டிலும் கிடைக்கின்றது.
இந்திய வெளியீடு மற்றும் விலை
சுமார் ரூ. 60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் ஸ்கோடா என்யாக் iV இந்தியாவில் செப்டம்பர் 2024 -க்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம். ஸ்கோடா EV ஹூண்டாய் ஐயோனிக் 5, கியா EV6, மற்றும் BMW i4 ஆகிய கார்களுடன் போட்டியிடும்.