Honda Elevate இனிமேல் அறிமுக விலையில் கிடைக்காது… Honda City -யின் விலையும் உயர்ந்துள்ளது
published on ஜனவரி 09, 2024 04:48 pm by rohit for ஹோண்டா எலிவேட்
- 444 Views
- ஒரு கருத்தை எழுதுக
எலிவேட்டின் விலை ரூ.58,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது, அதன் பேஸ் வேரியன்ட் அதிகபட்சமாக விலை உயர்ந்துள்ளது.
-
ஹோண்டா சிட்டியின் விலையை ஒரே மாதிரியாக ரூ.8,000 உயர்த்தியுள்ளது.
-
செடான் இப்போது விலை ரூ.11.71 லட்சம் முதல் ரூ.16.19 லட்சம் வரை விற்பனை செய்யப்படும் .
-
எஸ்யூவி -யின் விலை இப்போது ரூ.11.58 லட்சம் முதல் ரூ.16.40 லட்சம் வரை உள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் கார் தயாரிப்பாளர்கள் விலையில் கொடுக்கப்பட்டு வரும் சலுகைகளை முடிவுக்கு கொண்டி வருவது வழக்கம். மேலும் காரில் விலையையும் நிறுவனங்கள் உயர்த்தும். இதற்கு 2024 ஆண்டும் விதிவிலக்கல்ல. விலையை உயர்த்திய நிறுவனங்களின் பட்டியலில் சிட்ரோன் மற்றும் ஸ்கோடா -வுடன் ஹோண்டாவும் இப்போது உயர்ந்துள்ளது. ஹோண்டா சில மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளது. ஹோண்டா எலிவேட் எஸ்யூவி -க்கான அறிமுக விலை ஆஃபர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது மேலும் ஹோண்டாசிட்டி காரின் விலையையும் உயர்த்தியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட வேரியன்ட் வாரியான விலை விவரங்கள் இங்கே:
எலிவேட்
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
SV |
ரூ.11 லட்சம் |
ரூ.11.58 லட்சம் |
+ரூ.58,000 |
V |
ரூ.12.11 லட்சம் |
ரூ.12.31 லட்சம் |
+ரூ.20,000 |
V CVT |
ரூ.13.21 லட்சம் |
ரூ.13.41 லட்சம் |
+ரூ.20,000 |
VX |
ரூ.13.50 லட்சம் |
ரூ.13.70 லட்சம் |
+ரூ.20,000 |
VX CVT |
ரூ.14.60 லட்சம் |
ரூ.14.80 லட்சம் |
+ரூ.20,000 |
ZX |
ரூ.14.90 லட்சம் |
ரூ.15.10 லட்சம் |
+ரூ.20,000 |
ZX CVT |
ரூ.16 லட்சம் |
ரூ.16.20 லட்சம் |
+ரூ.20,000 |
ZX CVT DT |
ரூ.16.20 லட்சம் |
ரூ.16.40 லட்சம் |
+ரூ.20,000 |
-
ஹோண்டா எலிவேட் -ன் பேஸ் வேரியன்ட் ரூ.58,000 விலை உயர்ந்துள்ளது.
-
மீதமுள்ள வேரியன்ட்களின் விலையை ஹோண்டா ஒரே மாதிரியாக ரூ.20,000 உயர்த்தியுள்ளது.
இதையும் பார்க்கவும்: டிசம்பர் 2023ல் அதிகம் விற்பனையான முதல் 15 கார்களை பாருங்கள்
சிட்டி
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
SV |
ரூ.11.63 லட்சம் |
ரூ.11.71 லட்சம் |
+ரூ.8,000 |
V |
ரூ.12.51 லட்சம் |
ரூ.12.59 லட்சம் |
+ரூ.8,000 |
எலகன்ட் எடிஷன் |
ரூ.12.57 லட்சம் |
ரூ.12.65 லட்சம் |
+ரூ.8,000 |
எலகன்ட் எடிஷன் CVT |
ரூ.13.82 லட்சம் |
ரூ.13.90 லட்சம் |
+ரூ.8,000 |
V CVT |
ரூ.13.76 லட்சம் |
ரூ.13.84 லட்சம் |
+ரூ.8,000 |
VX |
ரூ.13.63 லட்சம் |
ரூ.13.71 லட்சம் |
+ரூ.8,000 |
VX CVT |
ரூ.14.88 லட்சம் |
ரூ.14.96 லட்சம் |
+ரூ.8,000 |
ZX |
ரூ.14.86 லட்சம் |
ரூ.14.94 லட்சம் |
+ரூ.8,000 |
ZX CVT |
ரூ.16.11 லட்சம் |
ரூ.16.19 லட்சம் |
+ரூ.8,000 |
-
ஹோண்டா சிட்டியின் விலை ஒரே மாதிரியாக ரூ.8,000 உயர்த்தப்பட்டுள்ளது.
-
செடானின் எலிகன்ட் எடிஷனும் விலை உயர்ந்துள்ளது.
எலிவேட் எஸ்யூவி மற்றும் சிட்டி செடான் மாடல்களின் விலையை மட்டுமே ஹோண்டா தற்போது உயர்த்தியிருந்தாலும், மீதமுள்ள மாடல்களுக்கும் விலையை விரைவில் உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற விலை உயர்வு தொடர்பான பற்றிய கூடுதல் விவரங்களுக்கு கார்தேக்கோ உடன் இணைந்திருங்கள்.
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) -க்கான விலை ஆகும்
மேலும் படிக்க: எலிவேட் ஆன் ரோடு விலை