சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

பேஸ்-ஸ்பெக் டாடா பன்ச் EV மீடியம் ரேஞ்ச் vs மிட்-ஸ்பெக் டாடா டியாகோ EV லாங் ரேஞ்ச்: எது சிறந்தது?

published on ஜனவரி 25, 2024 03:19 pm by shreyash for டாடா பன்ச் EV

டாடா பன்ச் EV -யின் நடுத்தர அளவிலான பதிப்பு மற்றும் டாடா டியாகோ EV -யின் நீண்ட தூர வேரியன்ட் ஆகிய இரண்டும் 315 கிமீ வரை கிளைம்டு ரேஞ்சை வழங்குகிறது.

டாடா பன்ச் EV 10.99 லட்சம் ஆரம்ப விலையுடன் (அறிமுக, எக்ஸ்-ஷோரூம் இந்தியா) சமீபத்தில் எலக்ட்ரிக் கார் சந்தையில் நுழைந்தது. இந்த விலை ரேஞ்ச்பிற்குள், டாடாவின் சில எலக்ட்ரிக் கார்கள் உட்பட இன்னும் சில எலக்ட்ரிக் வாகன (EV) ஆப்ஷன்கள் உள்ளன. டியாகோ இவி என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக். குறிப்பிடத்தக்க வகையில், டியாகோ EV -யின் மிட்-ஸ்பெக் XZ+ நீண்ட தூர வேரியன்ட்டின் விலை பன்ச் இவி -யின் பேஸ்-ஸ்பெக் வேரியன்ட்டுக்கு நெருக்கமாக உள்ளது:

இந்த இரண்டு EV -களுக்கு இடையில் நீங்கள் தேர்வு செய்ய விரும்பினால், மிட்-ஸ்பெக் டியாகோ EV XZ+ லாங்-ரேஞ்ச் வேரியன்ட்டிற்கு மற்றும் பேஸ்-ஸ்பெக் மீடியம்-ரேஞ்ச் பன்ச் EV ஸ்மார்ட் வேரியன்ட் ஆகியவற்றின் விரிவான ஒப்பீடு இங்கே உள்ளது.

அளவீடுகள்

டாடா பன்ச் EV

டாடா டியாகோ EV

நீளம்

3857 மி.மீ

3769 மி.மீ

அகலம்

1742 மி.மீ

1677 மி.மீ

உயரம்

1633 மி.மீ

1536 மி.மீ

வீல்பேஸ்

2445 மி.மீ

2400 மி.மீ

கிரவுண்ட் கிளியரன்ஸ்

190 மி.மீ

165 மி.மீ

பூட் ஸ்பேஸ்

366 லிட்டர் (+14 லிட்டர் ஃப்ரங்க் ஸ்டோரேஜ்)

240 லிட்டர்

டாடா பன்ச் EV அனைத்து அம்சங்களிலும் டாடா டியாகோ EV ஐ விட பெரியது, மேலும் அதிக கேபின் இடத்தை வழங்கும். சாமான்கள் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுக்கு வரும்போது, ​​பன்ச் EV -யில் கூடுதலாக ஃப்ரங்க் ஸ்டோரேஜ் கிடைக்கும் (டாடா EV -யில் முதலில் கிடைக்கின்றது).

இதையும் பார்க்கவும்: Tata Punch EV லாங் ரேஞ்ச் vs Tata Nexon EV மிட் ரேஞ்ச்: எந்த எலக்ட்ரிக் SUV வாங்குவது?

பவர்டிரெயின்கள்

விவரங்கள்

டாடா பன்ச் EV ஸ்மார்ட் மிட் ரேஞ்ச்

டாடா டியாகோ EV XZ+ லாங் ரேஞ்ச்

பேட்டரி பேக்

25 kWh

24 kWh

பவர்

82 PS

75 PS

டார்க்

114 Nm

114 Nm

கிளைம்டு ரேஞ்ச்பு (MIDC)

315 கி.மீ

315 கி.மீ

இந்த இரண்டு EV -களும் ஒரே அளவிலான பேட்டரி பேக்குகளுடன் வருகின்றன, மேலும் இரண்டும் 315 கி.மீ தூரம் வரை செல்லும். இருப்பினும், பன்ச் EV கூடுதல் 7 PS ஆற்றலுடன் இன்னும் கொஞ்சம் செயல்திறனைக் கொண்டுள்ளது. இதற்கிடையில், டார்க் அவுட்புட் இரண்டு மாடல்களுக்கும் 114 Nm என சீராக உள்ளது.

சார்ஜிங்

சார்ஜர்

சார்ஜிங் நேரம்

டாடா பன்ச் EV MR

டாடா டியாகோ EV LR

50 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் (10-80 சதவீதம்)

56 நிமிடங்கள்

58 நிமிடங்கள்

7.2 kW AC (10-100 சதவீதம்)

N.A

3.6 மணிநேரம்

3.3kW AC/ 15A போர்ட்டபிள் சார்ஜர் (10-100 சதவீதம்)

9.4 மணிநேரம்

8.7 மணிநேரம்

அதன் பேஸ்-ஸ்பெக் ஸ்மார்ட் வேரியன்ட்டில், டாடா பன்ச் EV ஸ்டாண்டர்டான 3.3 kW AC சார்ஜருடன் வருகிறது, ஆனால் டியாகோ EV-யை விட சார்ஜ் செய்வதற்கு இன்னும் அதிக நேரம் எடுக்கும். ஒப்பிடுகையில், இந்த மிட்-ஸ்பெக் டியாகோ EV ஆனது ரூ. 50,000க்கு 7.2 kW சார்ஜரின் ஆப்ஷனுடன் வருகிறது, ஆனால் அந்த ஆப்ஷன் பன்ச் EV -ன் சிறிய பேட்டரியுடன் வழங்கப்படவில்லை.

இதையும் பார்க்கவும்: டாடா நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் கார்களின் அறிமுக விலை ஆஃபர் பிப்ரவரி மாதத்தோடு முடிவுக்கு வரவுள்ளது… கார்களின் விலையும் உயர்கிறது

வசதிகள்

வசதிகள்

டாடா பன்ச் EV ஸ்மார்ட் மிட் ரேஞ்ச்

டாடா டியாகோ EV XZ+ லாங் ரேஞ்ச்

வெளிப்புறம்

  • LED DRLகளுடன் LED ஹெட்லைட்கள்

  • 15 இன்ச் ஸ்டீல் வீல்ஸ்

  • LED DRL -களுடன் கூடிய ஹாலோஜன் புரொஜெக்டர் ஹெட்லைட்கள்

  • ஃபாக் லைட்ஸ்

  • 14-இன்ச் ஸ்டீல் வீல்ஸ் வித் ஸ்டைல்டு கவர்ஸ்

உட்புறம்

  • ஃபேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்டரி

  • ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்

  • கூல்டு க்ளோவ் பாக்ஸ்

  • இல்லுமினேட்டட் ஸ்டீயரிங்

  • ஃபேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்டரி

  • ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்

  • கூல்டு க்ளோவ் பாக்ஸ்

கம்ஃபோர்ட் வசதி

  • ஆட்டோமெட்டிக் ஏசி வித் டச் கன்ட்ரோல்

  • ஏர் பியூரிஃபையர்

  • முன்பக்க பவர் விண்டோஸ்

  • மல்டிமோட் ரீஜெனரேஷன் பிரேக்கிங்

  • டிரைவிங் மோட்கள் (சிட்டி ஸ்போர்ட்)

  • ஆட்டோமெட்டிக் ஏசி

  • நான்கு பவர் விண்டோஸ்

  • மல்டிமோட் ரீஜெனரேஷன் பிரேக்கிங்

  • டிரைவிங் மோட்கள் (சிட்டி ஸ்போர்ட்)

  • ஸ்டீயரிங் மவுன்டட் கன்ட்ரோல்கள்

  • க்ரூஸ் கன்ட்ரோல்

  • ஆட்டோ ஹெட்லைட்ஸ்

  • ரெயின் சென்ஸிங் வை

  • எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் ஆட்டோ ஃபோல்டபிள் ORVMS

இன்ஃபோடெயின்மென்ட்

  • செமி டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே

  • 7-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட்

  • வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆப்பிள் கார்ப்ளே

  • செமி டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே

  • 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம்

பாதுகாப்பு

  • 6 ஏர்பேக்ஸ்

  • எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC)

  • ஹில் ஹோல்ட் அசிஸ்ட்

  • ABS வித் EBD

  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்

  • ISFIX

  • பின்புற பார்க்கிங் சென்சார்கள்

  • டூயல் முன் ஏர்பேக்குகள்

  • ABS வித் EBD

  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்

  • சென்சார்கள் கொண்ட பின்புற பார்க்கிங் கேமரா

  • ரியர் வைப்பர் அண்ட் வாஷர்

விலையை பொறுத்தவரையில் வசதிகள் என்று வரும்போது, ​​டாடா டியாகோ EV ஆனது பன்ச் EV -யை விட கூடுதலான வசதிகளை கொண்டுள்ளது. இதில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோ ஹெட்லைட்கள், ரெயின் சென்ஸிங் வைப்பர்கள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை அடங்கும். இருப்பினும், டியாகோ EV -யில் இருந்து பன்ச் EV -யை வேறுபடுத்துவது 6 ஏர்பேக்ஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் உள்ளிட்ட கூடுதலான பாதுகாப்பு வசதிகள் ஆகும்.

பன்ச் EV -ன் ஸ்மார்ட் வேரியன்ட்டில் வெளிப்புறத்தில் LED ஹெட்லைட்கள் மற்றும் உட்புறத்தில் ஏர் பியூரிஃபையர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன, இவை இரண்டும் டியாகோ EV -யில் இல்லை.

விலை

டாடா பன்ச் EV ஸ்மார்ட் மீடியம் ரேஞ்ச்

டாடா டியாகோ EV XZ+ லாங் ரேஞ்ச்

ரூ.10.99 லட்சம் (அறிமுகம்)

ரூ.11.04 லட்சம்

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) -க்கான விலை ஆகும்

மிட்-ஸ்பெக் டாடா டியாகோ EV XZ+ லாங்-ரேஞ்ச் வேரியன்ட்டுடன் ஒப்பிடும்போது, ​​பேஸ்-ஸ்பெக் டாடா பன்ச் EV ஸ்மார்ட் வேரியன்ட் அதிக இட வசதி, செயல்திறன் மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது. இருப்பினும், வெறும் ரூ. 5,000 கூடுதலாக கொடுக்கும் போது, டியாகோ EV நடைமுறைக்கு ஏற்ற பல வசதிகளை வழங்குகிறது. எனவே, இந்த இரண்டில் எந்த EV -யை தேர்வு செய்வீர்கள்? கீழே உள்ள கமென்ட் பகுதியில் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: பன்ச் EV ஆட்டோமெட்டிக்

Share via

Write your Comment on Tata பன்ச் EV

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை