சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்ட 5-டோர் Mahindra Thar … பின்புற தோற்றத்தை விரிவாகக் பார்க்க முடிந்தது

மஹிந்திரா தார் ராக்ஸ் க்காக பிப்ரவரி 09, 2024 11:58 am அன்று ansh ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

இந்த தார் புதிய கேபின் தீம், புதிய வசதிகள் மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வரும்.

  • தற்போதைய 3-டோர் மஹிந்திரா தாருடன் ஒப்பிடும்போது வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம்.

  • புதிய கேபின் தீமுடன் வரலாம்.

  • புதிய அம்சங்களில் பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவருக்கான ஆல் டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் ஆகியவை அடங்கும்.

  • விலை ரூ.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாடல்களில் 5-டோர் மஹிந்திரா தார் காரும் ஒன்று, இப்போது சோதனை செய்யப்பட்டு வருகின்றது. வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், உற்பத்திக்கு தயாராக உள்ள நிலையில் சோதனை கார்களின் அடிக்கடி தென்படுகின்றன. ஆகவே இதன் வெளியீடு விரைவில் இருக்கலாம் என தெரிகின்றது. மிக சமீபத்தில் பார்த்த யூனிட்டில், பெரிய தார் பின்புற பக்கம் படம் பிடிக்கப்பட்டுள்ளது, அதன் விவரங்கள் இங்கே.

வெளிப்புறம்

இது பின்புறத்தில் இருந்து பார்க்கும் போது இப்போதுள்ள 3-டோர் தார் போலவே உள்ளது. இது டெயில்கேட்டில் பொருத்தப்பட்ட ஸ்பேர் வீல், செங்குத்தாக உள்ள செவ்வக வடிவ LED டெயில் லைட்ஸ் மற்றும் பழைய காரில் உள்ளதை போன்ற பம்பர் ஆகியவற்றைப் பெறுகிறது.

மேலும் படிக்க: மாருதி ஜிம்னி vs மஹிந்திரா தார்: உங்களுக்கான தினசரி ஆஃப்ரோடர் எது

முன்பக்கம் வட்ட வடிவ ஹெட்லைட்கள் (இப்போது LED யூனிட்கள் ரிங்க்ஸ் போன்ற LED DRLகள்) மற்றும் பம்பர் வடிவமைப்பு கொண்ட 3-டோர் பதிப்பை போலவே உள்ளன. முன்பக்க கிரில் கொஞ்சம் மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், ஃபாக் லேம்ப்கள் இன்னும் ஹாலோஜன் யூனிட்களாகவே இருக்கின்றன.

பக்கவாட்டில் பின்பக்க பயணிகளின் வசதிக்காக 2 கூடுதல் டோர்கள் மற்றும் அதே அலாய் வீல் வடிவமைப்பை பார்க்க முடிகின்றது. இந்த கோணத்தில் இருந்து பார்க்கும் போது எஸ்யூவியின் நீண்ட வீல்பேஸை உங்களால் பார்க்க முடியும்.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

படத்தின் ஆதாரம்

மீண்டும் சாலையில் தென்பட்ட 5-டோர் மஹிந்திரா தார்… புதிய விவரங்கள் தெரிய வந்துள்ளன ,அதன்படி பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிரைவருக்கான ஆல் டிஜிட்டல் டிஸ்ப்ளே (இரண்டும் 10.25-இன்ச் யூனிட்டாக இருக்கலாம்) ஆகியவை கொடுக்கப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. இதைத் தவிர, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆப்பிள் கார்ப்ளே, சிங்கிள் பேனல் சன்ரூஃப், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், டைப்-சி சார்ஜிங் போர்ட்கள் மற்றும் ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம் ஆகியவையும் கொடுக்கப்படலாம்.

மேலும் படிக்க: மஹிந்திரா ஸ்கார்பியோ என் உற்பத்தி 1 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது

பாதுகாப்புக்காக , மஹிந்திரா எஸ்யூவி-யில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள், ISOFIX சைல்டு சீட் ஆங்கர்கள் மற்றும் பின்புற காட்சி கேமராவுடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5-டோர் தார் ஹையர் வேரியன்ட்களில் 360 டிகிரி கேமராவும் இடம்பெறலாம்.

பவர்டிரெய்ன்

2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின்: 5-டோர் மஹிந்திரா தார் அதன் 3-டோர் காரை போலவே அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வரும். இந்த இன்ஜின்கள் 3-டோர் பதிப்பில் 152 PS (பெட்ரோல்) மற்றும் 132 PS (டீசல்) அவுட்புட்டை கொடுக்கின்றன. இருப்பினும், 5-டோர் தாரில், அவை பெரும்பாலும் அதிகமாக ட்யூன் செய்யப்பட்ட நிலையில் கொடுக்கப்படலாம். மேலும் இந்த கார் ரியர்-வீல் டிரைவ் (RWD) மற்றும் 4-வீல் டிரைவ் (4WD) அமைப்புகளுடன் வரக்கூடும்.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

5-டோர் மஹிந்திரா தார் இந்த ஆண்டின் இறுதியில் ரூ.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இது மாருதி ஜிம்னி -க்கு ஒரு பிரீமியம் மாற்றாக இருக்கும் மற்றும் வரவிருக்கும் 5-டோர் ஃபோர்ஸ் கூர்க்கா காருக்கு ஒரு நேரடி போட்டியாளராக இருக்கும்.

மேலும் படிக்க: தார் ஆட்டோமெட்டிக்

Share via

Write your Comment on Mahindra தார் ROXX

J
joh
Feb 10, 2024, 10:59:32 AM

I spotted the 5 door Thar testing on Chennai new outer ring road yesterday 9th Feb 2024 at around 9 pm. It looks great

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.15.50 - 27.25 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15 - 26.50 லட்சம்*
புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.6.20 - 10.51 லட்சம்*
எலக்ட்ரிக்
Rs.48.90 - 54.90 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை