டைனமிக் டர்ன் இன்டிகேட்டர்களுடன் தென்பட்ட 2024 டாடா நெக்ஸான்
published on ஜூலை 14, 2023 04:37 pm by tarun for டாடா நிக்சன்
- 382 Views
- ஒரு கருத்தை எழுதுக
2024 டாடா நெக்ஸான் தற்போதைய மாடலை விட பல பிரீமியம் அடிஷன்களை பெறும்
-
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் ஹையர்-எண்ட் வேரியன்ட்களில் டைனமிக் அல்லது சீக்வென்ஷியல் டர்ன் இண்டிகேட்டர்களைப் பெறும்.
-
முன்பு சாலையில் தென்பட்ட புதிய தோற்றக் வடிவமைப்பில் போனட் முழுவதும் பரவியுள்ள LED லைட் பார் அடங்கும்.
-
புதிய ஸ்டீயரிங் வீல் மற்றும் பெரிய டிஸ்பிளேகளுடன் கேபினும் சில மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது.
-
டாடாவின் புதிய 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; 1.5 லிட்டர் டீசல் யூனிட் தக்கவைக்கப்படும்.
எங்களிடம் ஃபேஸ்லிஃப்டட் டாடா நெக்ஸான் இன் புதிய மற்றும் பிரத்தியேகமான ஸ்பை ஷாட்கள் உள்ளன, இது புதிய மற்றும் சிறப்பான அம்சம் சேர்க்கட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறது. எஸ்யூவி இன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்களைக் கொண்டிருக்கும், இவை பொதுவாக பல பிரீமியம் கார்களில், குறிப்பாக ஆடம்பர பிராண்டுகளில் காணப்படுகின்றன. சப்காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் இந்த உயர்மட்ட அம்சத்தை முதலில் வழங்குவது டாடாவாகும்.
மற்ற முக்கிய வடிவமைப்பு மேம்படுத்தல்களில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பின்பக்க பம்ப்பர்கள், மிக முக்கியமான பூட் வடிவம், புதிய டெயில் லைட் வடிவமைப்பு மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகியவை அடங்கும். நெக்ஸான் வடிவமைப்பின் அடிப்படையில் ஒரு பெரிய மேக்ஓவருக்கு உட்பட்டிருக்கும், இது ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.
மேலும் காணவும்: கேமராவில் முதன்முதலாக படம்பிடிக்கப்பட்ட, ஃபேஸ்லிஃப்டட் டாடா நெக்ஸான் EV இன் முக்கிய விவரங்கள்
நெக்ஸானின் உட்புறமும் பல பிரீமியம் பாகங்களுடன் புதுப்பிக்கப்படும். அது , டாடா லோகோவைக் காட்டும் ஸ்போக்குகளுக்கான புதிய தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல் உடன் பேக்லிட் யூனிட்டைக் கொண்டிருக்கும். பெரிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம் மற்றும் நெக்ஸான் EV மேக்ஸ் டார்க் -லிருந்து புதிய 7- இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே ஆகியவை எஸ்யூவியின் வழக்கமான வேரியன்ட்களுக்கு ஸ்டாண்டர்டாக கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கிறோம்.
2024 நெக்ஸான் அதே 115PS 1.5-லிட்டர் டீசல் இன்ஜினுடன் தொடரும் என்றாலும், புதிய 1.2-லிட்டர் TGDI டர்போ-பெட்ரோல் யூனிட் வழங்கப்படலாம். இந்த இன்ஜின், ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் வெளியிடப்பட்டது மற்றும்125PS மற்றும் 225Nm அவுட்புட்டைக் கொடுக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய டர்போ-பெட்ரோல் இன்ஜினின் AMT ஆப்ஷனை டாடாவின் புதிய DCT (டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக்) மூலம் மாற்றலாம்.
மேலும் படிக்கவும்: பலமான உருமறைப்புடன் தனது உளவு அறிமுகத்தை செய்த டாடா கர்வ்
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் தற்போதைய பதிப்பை விட அதிக விலையைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கிறோம், இது ரூ.7.80 லட்சம் முதல் ரூ.14.50 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விற்பனை செய்யப்படுகிறது. கியா சோனெட்,மஹிந்திரா XUV V300,ரெனால்ட் கைகர் ,மாருதி சுஸூகி பிரெஸ்ஸா ,நிஸான் மேக்னைட் மற்றும் ஹீண்டாய் வென்யூ ஆகியவற்றுடன் அதன் போட்டி தொடரும்.
மேலும் படிக்கவும்: டாடா நெக்ஸான் AMT
0 out of 0 found this helpful