• English
  • Login / Register

ரூ. 9.84 லட்சத்தில் 2024 Magnite Geza ஸ்பெஷல் எடிஷன் வெளியிடப்பட்டது, CVT -யின் விலை இன்னும் குறைந்துள்ளது

published on மே 23, 2024 06:13 pm by samarth for நிசான் மக்னிதே

  • 105 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த ஸ்பெஷல் எடிஷன் டர்போ-பெட்ரோல் மற்றும் CVT ஆப்ஷனுடன் மட்டுமே கிடைக்கிறது. மேலும் பெரிய டச் ஸ்கிரீன் செட்டப்பையும் கொண்டுள்ளது.

Nissan Magnite Geza Special Edition Launched

குறைவான விலையில் பெட்ரோல்-ஆட்டோமெட்டிக் சப்-4m எஸ்யூவி -யை நீங்கள் தேடுகிறீர்களா உங்களுக்கு புதிதாக ஒரு ஆப்ஷன் உள்ளது. 2024 நிஸான் மேக்னைட் கெஸா ஸ்பெஷல் எடிஷன் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் பவர்டிரெய்னை இன்னும் விலை குறைவாக ரூ.9.84 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) -த்தில் கிடைக்கின்றது. இது 2023 ஆண்டில் வெளிவந்த மேக்னைட் கெஸா பதிப்பின் முதல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் உள்ளது. வெளிப்புறத்தில் எதுவும் மாறவில்லை அதே வேளையில் இந்த எடிஷன் உட்புறத்தில் சில புதிய வசதிகள் சில சேர்க்கப்பட்டுள்ளன.

வெளிப்புறம் 

Nissan Magnite Geza Special Edition Front
Nissan Magnite Geza Special Edition Rear

இந்த லிமிடெட் ரன் எடிஷன் சி-பில்லரில் உள்ள கெஸா எடிஷன் பேட்ஜை தவிர எஸ்யூவி -யின் வெளிப்புறத்தில் எந்த மாற்றமும் இல்லை. இது மேக்னைட் XV வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது. மற்றும் ஹாலோஜன் ஹெட்லைட்கள், LED DRL -கள் மற்றும் 16-இன்ச் அலாய் வீல்களுடன் வருகிறது.

உட்புறம் மற்றும் வசதிகள்

Nissan Magnite Geza Special Edition Touchscreen
Nissan Magnite Geza Special Edition JBL Speakers

வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் அறிமுகத்துடன் இந்த கெஸா பதிப்பு பல புதிய வசதிகளை பெற்றுள்ளது. ஒப்பிடுகையில் வழக்கமான மேக்னைட் வேரியன்ட்கள் Android Auto மற்றும் Apple CarPlay உடன் 8 இன்ச் டச் ஸ்கிரீனுடன் வருகின்றன. இந்த பதிப்பில் ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் மற்றும் ஆம்பியன்ட் லைட்ஸ் உள்ளன. இதை நிஸான் மொபைல் ஆப் மூலமாக கன்ட்ரோல் செய்யலாம். வாடிக்கையாளர்கள் கூடுதல் தொகையை செலுத்துவதன் மூலம் கூடுதலான பிரீமியம் பெய்ஜ் கலர் அப்ஹோல்ஸ்டரியையும் தேர்வு செய்யலாம். 

Nissan Magnite Geza Special Edition Cabin

இது மேக்னைட் XV வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது என்பதால் இது உயரத்தை சரி செய்து கொள்ளும் வகையிலான ஓட்டுநர் இருக்கை மற்றும் டிரைவருக்கான 7-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே போன்ற வசதிகளையும் பெறுகிறது. இதற்கிடையில் பாதுகாப்பு கருவியில் ரியர்வியூ கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் டூயல் முன் ஏர்பேக்குகள் ஆகியவை உள்ளன.

மேலும் பார்க்க: இந்த மே மாதம் ஒரு சப்காம்பாக்ட் SUV வீட்டிற்கு நீங்கள் எவ்வளவு காத்திருக்க வேண்டும் என்பது இங்கே

மேக்னைட் பவர் ட்ரெயின்கள்

நிஸான் மேக்னைட் கெஸா ஸ்பெஷல் எடிஷன் தொடர்ச்சியாக மாறக்கூடிய டிரான்ஸ்மிஷனுடன் ஒரே ஒரு 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் (சிவிடி) ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும். இந்த யூனிட் 100 PS மற்றும் 152 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. இதே இன்ஜின் மற்ற வேரியன்ட்களில் 5-ஸ்பீடு மேனுவல் உடன் கிடைக்கிறது. 72 PS மற்றும் 96 Nm என அவுட்புட்டை கொடுக்கும் 5-ஸ்பீடு MT மற்றும் AMT தேர்வுகளுடன் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் 1-லிட்டர் பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்தும் மற்ற மேக்னைட் வேரியன்ட்களும் இந்த காரில் உள்ளன.

போட்டியாளர்கள்

நிஸான் மேக்னைட் கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ, மாருதி சுஸூகி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO, ரெனால்ட் கைகர், சிட்ரோன் சி3, மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும். கூடுதலாக இது வரவிருக்கும் ஸ்கோடா சப்-4எம் எஸ்யூவி -க்கு நேருக்கு நேர் போட்டியிடும், இது 2025 -ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமாகலாம். 

மேலும் படிக்க: நிஸான் மேக்னட் AMT

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது நிசான் மக்னிதே

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience