• English
  • Login / Register

விற்பனைக்கு வந்தது புதிய 2024 Maruti Dzire

published on நவ 11, 2024 03:48 pm by shreyash for மாருதி டிசையர்

  • 82 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய வடிவமைப்பு மற்றும் இன்ஜின் மட்டுமின்றி 2024 டிசையர் ஆனது சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் 360-டிகிரி கேமரா போன்ற சில பிரிவில் முதலாவதாக கிடைக்கக்கூடிய வசதிகளுடன் வருகிறது.

  • புதிய LED லைட்டிங் செட்டப் மற்றும் 15-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் ஆகியவை உள்ளன.

  • உள்ளே இது ஸ்விஃப்ட் போன்ற டாஷ்போர்டு வடிவமைப்பு உள்ளது. ஆனால் பிளாக் மற்றும் பெய்ஜ் கலர் இன்ட்டீரியர் தீம் உள்ளது.

  • 9 இன்ச் டச்ஸ்கிரீன், ஆட்டோ ஏசி மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற வசதிகளுடன் வருகிறது.

  • பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை உள்ளன.

  • 5-ஸ்பீடு MT மற்றும் AMT ஆப்ஷன்களுடன் புதிய 1.2-லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

  • 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட குறைக்கப்பட்ட அவுட்புட் உடன் (70 PS/102 Nm) உடன் ஆப்ஷனலான CNG பவர்டிரெய்னையும் கிடைக்கும்.

  • இதன் விலை ரூ.6.79 லட்சம் முதல் ரூ.10.14 லட்சம் வரை (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா).

  • இது மாதாந்திர சந்தாவிலும் கிடைக்கிறது. மாதத்திற்கு ரூ. 18,248 முதல் திட்டங்கள் உள்ளன.

கடந்த வாரம் அறிமுகமான 2024 மாருதி டிசையர் இப்போது விற்பனைக்கு வந்துள்ளது. மாருதி இதன் விலை விவரங்களை  வெளியிட்டது. இதன் விலை ரூ.6.79 லட்சத்தில் இருந்து (அறிமுக, எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) தொடங்குகிறது. மாருதி புதிய டிசையரை LXi, VXi, ZXi மற்றும் ZXi பிளஸ் என 4 வேரியன்ட்களிலும் பெட்ரோல் மற்றும் CNG பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் விற்பனை செய்கிறது. 2024 டிசையரின் வேரியன்ட் வாரியான விலை விவரங்கள் இங்கே.

வேரியன்ட்

விலை

பெட்ரோல் மேனுவல்

LXi

ரூ.6.79 லட்சம்

VXI

ரூ.7.79 லட்சம்

ZXi

ரூ.8.89 லட்சம்

ZXi பிளஸ்

ரூ.9.69 லட்சம்

பெட்ரோல் ஏஎம்டி

VXi AMT

ரூ.8.24 லட்சம்

ZXi AMT

ரூ.9.34 லட்சம்

ZXi பிளஸ் AMT

ரூ.10.14 லட்சம்

சிஎன்ஜி

VXi

ரூ.8.74 லட்சம்

ZXi CNG

ரூ.9.84 லட்சம்

விலை விவரங்கள் அனைத்தும் அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா -வுக்கானவை

இந்த விலை விவரங்கள்  2024 ஆம் ஆண்டின் இறுதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்ளவும். மாருதி புதிய டிசையரை சந்தா அடிப்படையில் விற்பனை செய்யவுள்ளது. மாதத்திற்கு ரூ. 18,248 முதல் திட்டங்கள் தொடங்குகின்றன. இதில் ரிஜிஸ்ட்ரேஷன், சர்வீஸ், காப்பீடு மற்றும் ரோடு சைடு அசிஸ்ட் ஆகியவை அடங்கும்.

வடிவமைப்பு

2024 டிசையர் இப்போது அதன் ஹேட்ச்பேக் உடன்பிறப்பான ஸ்விஃப்ட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக தோற்றமளிக்கிறது. கிடைமட்ட ஸ்லேட்டுகளுடன் கூடிய கிரில், LED DRL -கள் கொண்ட புதிய ஹெட்லைட்கள் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட 15-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புறம் இப்போது Y-ஷேப்டு LED லைட்டிங் எலமென்ட்களுடன் புதிய டெயில் லைட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கேபின் மற்றும் வசதிகள்

உள்ளே புதிய டிசையரில் ஸ்விஃப்ட் போன்ற டேஷ்போர்டு செட்டப் உள்ளது. டாஷ்போர்டில் உடன் இன்செர்ட்கள் பிளாக் மற்றும் பெய்ஜ் நிற உட்புற தீம் கொடுக்கப்பட்டுள்ளது.

வசதிகளை பொறுத்தவரையில் புதிய டிசையர் 9 இன்ச் டச் ஸ்கிரீன், ஆட்டோ ஏசி, வயர்லெஸ் போன் சார்ஜர் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகளுடன் வருகிறது. சிங்கிள்ப் பேன் சன்ரூஃப் உடன் வரும் இந்தியாவின் முதல் சப்காம்பாக்ட் செடான். 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா (பிரிவில் முதலாவது), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை பாதுகாப்புக்காக உள்ளன.

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

2024 டிசையரில் புதிய 1.2 லிட்டர் 3 சிலிண்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது புதிய ஸ்விஃப்ட்டில் அறிமுகமானது. அதன் விவரங்கள் பின்வருமாறு:

இன்ஜின்

1.2 லிட்டர் 3 சிலிண்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜின்

1.2 லிட்டர் 3 சிலிண்டர் Z சீரிஸ் பெட்ரோல்-CNG

பவர்

82 PS

70 PS

டார்க்

112 Nm

102 Nm

டிரான்ஸ்மிஷன்

5-ஸ்பீடு MT, 5-ஸ்பீடு AMT

5-ஸ்பீடு MT

கிளைம்டு ரேஞ்ச்

24.79 கிமீ/லி (MT), 25.71 கிமீ/லி (AMT)

33.73 கிமீ/கிலோ

போட்டியாளர்கள்

2024 மாருதி டிசையர் ஆனது  டாடா டிகோர் மற்றும் ஹூண்டாய் ஆரா உடன் போட்டியிடும். மேலும் புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் -க்கும் போட்டியாக இருக்கும்..

கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Maruti டிசையர்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டெஸ்லா மாடல் 2
    டெஸ்லா மாடல் 2
    Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூல, 2025
  • ஆடி ஏ5
    ஆடி ஏ5
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மார, 2025
  • டொய�ோட்டா காம்ரி 2024
    டொயோட்டா காம்ரி 2024
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • வோல்க்ஸ்வேகன் id.7
    வோல்க்ஸ்வேகன் id.7
    Rs.70 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
×
We need your சிட்டி to customize your experience