2024 Maruti Dzire காருக்கான முன்பதிவுகள் தொடக்கம்
published on நவ 04, 2024 08:32 pm by dipan for மாருதி டிசையர்
- 50 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய தலைமுறை மாருதி டிசையர் 2024 ஸ்விஃப்ட்டின் அதே கேபின் செட்டப்பை கொண்டிருக்கும். ஆனால் தற்போதைய ஜென் மாடலை போலவே பெய்ஜ் மற்றும் பிளாக் கேபின் தீம் உடன் வரும்.
-
ரூ.11,000 டோக்கன் தொகைக்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
-
ஸ்பை ஷாட்கள் மற்றும் பிளாக் மற்றும் பெய்ஜ் நிற உட்புற தீம் கொண்ட ஸ்விஃப்ட் போன்ற டாஷ்போர்டு வடிவமைப்பை காட்டுகின்றன.
-
இந்த ஸ்பை ஷாட்களில் சிங்கிள் பேன் சன்ரூஃப் இருப்பது தெரிய வருகிறது.
-
9 இன்ச் டச் ஸ்கிரீன், ஆட்டோ ஏசி மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இது 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக) மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) ஆகியவற்றைப் பெறலாம்.
-
ஸ்விஃப்ட் (82 PS/112 Nm) போன்ற அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
முந்தைய ஸ்பை ஷாட்கள் மூலமாக வெளிப்புற வடிவமைப்பை பார்க்க முடிந்தது. மாருதி ஸ்விஃப்ட்டின் வடிவமைப்பு மிகவும் வித்தியாசமானதாக இருந்தது
-
விலை ரூ.6.70 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் எனத் தெரிகிறது.
புதிய ஜெனரேஷன் மாருதி டிசையர் கார் வரும் நவம்பர் 11 -ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. மேலும் சப்-4m செடானுக்கான முன்பதிவுகள் டோக்கன் தொகையான ரூ.11,000 -க்கு ஏற்கனவே தொடங்கியுள்ளது. மாருதியின் இணையதளம் அல்லது அரினா டீலர்ஷிப்களில் முன்பதிவை செய்யலாம்.
சமீபத்தில் சப்காம்பாக்ட் செடானின் இன்ட்டீரியரின் படங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன. வசதிகள் மற்றும் கேபின் செட்டப்பை இந்த படங்கள் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது. புதிய தலைமுறை மாருதி டிசையர் என்ன வழங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ள இந்தப் படங்களைக் கூர்ந்து கவனிப்போம்.
உள்ளே எதை பார்க்க முடிகிறது ?
புதிய தலைமுறை ஸ்விஃப்ட் ஆனது 2024 மாருதி டிசையரின் வெளிப்புற வடிவமைப்பு வேறுபட்டாலும் உட்புறம் அதே கேபின் செட்டப்பை கொண்டுள்ளது. மேலும் கேபின் தீம் மட்டுமே வித்தியாசம் உள்ளது. ஸ்விஃப்ட் போலல்லாமல் முற்றிலும் பிளாக் கலர் கேபினை பெறுகிறது. புதிய டிசையர் தற்போதைய மாடலை நினைவூட்டும் வகையில் டூயல்-டோன் பிளாக் மற்றும் பெய்ஜ் இன்டீரியர் தீம் இருக்கும். டேஷ்போர்டில் உள்ள வுடன் டிரிம் அப்படியே உள்ளது. இப்போது அதன் கீழே சில்வர் டிரிம் உள்ளது.
புதிய டிசையர் காரில் ஸ்விஃப்ட்டில் காணப்படும் அதே 9-இன்ச் யூனிட், அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் ஃப்ரீ-ஸ்டாண்டிங் டச்ஸ்கிரீனை கொண்டுள்ளது. இது பின்புற வென்ட்கள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் கொண்ட ஆட்டோமெட்டிக் ஏசி பேனல் ஆகியவை இருக்கும்.
கூடுதலாக இந்த ஸ்பை படங்களில் சிங்கிள் பேன் சன்ரூஃப் காணப்படலாம்.
மேலும் படிக்க: 2024 மாருதி டிசையரை பற்றி எங்களின் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்கள் இந்த விஷயத்தைப் பற்றி மிகவும் ஆர்வமாக உள்ளனர்
இதுவரை நமக்கு தெரிந்த மற்ற விஷயங்கள்
2024 மாருதி டிசையரின் வெளிப்புற வடிவமைப்பை சமீபத்தில் பார்க்க முடிந்தது. மற்றும் அதன் ஹேட்ச்பேக் உடன்பிறப்பான ஸ்விஃப்ட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. இது ஒரு பரந்த கிரில் மற்றும் புதிய LED ஹெட்லைட்கள் மற்றும் கிடைமட்ட DRL -களுடன் Y- வடிவ LED டெயில் லைட்கள் உள்ளன.
தற்போதைய மாடலில் இருந்து எடுத்துச் செல்லக்கூடிய உயரம் சரி செய்து கொள்ளக்கூடிய டிரைவர் இருக்கை மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன. பாதுகாப்பைப் பொறுத்தவரையில் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக (புதிய ஸ்விஃப்டை போன்றது), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் ஆகிய வசதிகளை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
புதிய மாருதி டிசையர் 2024 ஸ்விஃப்ட் 82 PS மற்றும் 112 Nm அவுட்புட்டை கொடுக்கும் அதே 1.2-லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 5-ஸ்பீடு AMT (ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) உடன் இணைக்கப்படும். கூடுதலாக மாருதி ஒரு சிஎன்ஜி ஆப்ஷனை டிசையருக்கு ஒரு பிந்தைய கட்டத்தில் அறிமுகப்படுத்தலாம்.
மேலும் படிக்க: 2024 மாருதி டிசையர்: அறிமுகத்திற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
விலை மற்றும் போட்டியாளர்கள்
2024 மாருதி டிசையர் ஆரம்ப விலை ரூ.6.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கலாம். இது ஹூண்டாய் ஆரா, டாடா டிகோர் மற்றும் வரவிருக்கும் புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் போன்ற மற்ற சப்காம்பாக்ட் செடான்களுடன் போட்டியிடும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
0 out of 0 found this helpful