டிசம்பர் 14 அறிமுகமாகிறது 2024 Kia Sonet … காரில் உள்ள ADAS விவரங்கள் இங்கே
published on டிசம்பர் 11, 2023 08:18 pm by rohit for க்யா சோனெட்
- 172 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹூண்டாய் வென்யூ N லைனில் இருப்பதை போலவே இந்த புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவி -யானது ADAS அம்சங்களை கொண்டிருக்கும், இது மொத்தம் 10 அம்சங்களை பெறுகிறது.
-
சோனெட் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் டிசம்பர் 14 அன்று அறிமுகமாகும்.
-
ஹூண்டாய் வென்யூ N லைனுக்கு பிறகு ஒரு பகுதி ADAS தொகுப்பைப் பெறும் ஒரே சப்-4m எஸ்யூவி ஆக இருக்கலாம்.
-
ADAS அம்சங்களில் லேன்-கீப் அசிஸ்ட், ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் மற்றும் ஹை பீம் அசிஸ்ட் ஆகியவை அடங்கும்.
-
360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக) மற்றும் டூயல் டிஸ்ப்ளேக்கள் ஆகியவை கிடைக்கும்.
-
முன்பு இருந்த அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் வரலாம்; டீசல் 6-ஸ்பீடு MT ஆப்ஷனை மீண்டும் பெறக்கூடும்.
-
2024 -ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும், இதன் விலை ரூ 8 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபேஸ்லிஃப்ட் கியா சோனெட் காரின் அறிமுகத்திற்கு இன்னும் ஒரு வாரத்திற்கும் குறைவான காலமே உள்ளது. ஆன்லைனில் படங்களும், டீஸர்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன. அவை புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவியின் புதிய விவரங்களை வெளிப்படுத்துகின்றன. சமீபத்தில் ஆன்லைனில் வெளியான விவரங்களின்படி சோனெட்டிற்கான டீசல்-மேனுவல் ஆப்ஷனை திரும்பப் பெறும் என தெரிகிறது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) அம்சங்களையும் பெறும் என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹூண்டாய் வென்யூ N லைன் தவிர ஃபேஸ்லிஃப்டட் சோனெட் மட்டுமே இந்த பாதுகாப்பு தொழில்நுட்பத்தை பெறும் மற்றொரு சம்-4m எஸ்யூவி ஆகும்
ADAS அம்சங்கள்
வெளியான விவரங்களின்படி, ஃபேஸ்லிஃப்டட் கியா சோனெட் 10 ADAS அம்சங்களுடன் வர உள்ளது. ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங், லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங், ஹை-பீம் அசிஸ்ட், டிரைவர் கவனிப்பு அட்டென்டிவ்னெஸ் அலர்ட் மற்றும் வெஹிகிள் டிபார்ச்சர் அலர்ட் ஆகியவை இதில் அடங்கும். இவை ஹூண்டாய் வென்யூ என் லைனில் கிடைக்கும் அதே ADAS அம்சங்களின் தொகுப்பாக இது இருக்கும். இரண்டு எஸ்யூவி -களின் ADAS தொகுப்பும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மேலும் வெளியான விவரங்களின்படி 2024 சோனெட்டின் ஃபுல்லி லோடட் எக்ஸ்-லைன் டிரிமுடன் மட்டுமே கியா ADAS -ஐ வழங்கும் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். அதாவது மேட் கிரே நிறத்தில் மட்டுமே இதை நீங்கள் பெற முடியும். ஆனால் இறுதியான வெளியீட்டு மாடலில் வேறுபாடு இருக்கலாம்.
போர்டில் உள்ள மற்ற அம்சங்கள்
கியா புதிய சோனெட்டுக்கு ஆறு ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு), முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவற்றை வழங்கும்.
புதுப்பிக்கப்பட்ட கியா எஸ்யூவி -யில் 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், சன்ரூஃப் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை அடங்கும். இது இப்போதுள்ள மாடலை போலவே வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் ஆட்டோ ஏசி செயல்பாடு ஆகியவற்றைப் பெறும்.
இதையும் படிக்கவும்: ஒரு காலண்டர் ஆண்டின் இறுதியில் புதிய கார் வாங்குவதன் அனைத்து நன்மைகள் மற்றும் தீமைகள்
இன்ஜின் விவரங்கள்
புதிய சோனெட் ஒரு சிறிய மாற்றத்துடன் முன்பு இருந்த அதே இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் வரும். இது 83 PS 1.2-லிட்டர் பெட்ரோல் மற்றும் 120 PS 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் தொடரும். முந்தையது 5-ஸ்பீடு MT -யை மட்டுமே பெறும், மற்றொன்று 6-ஸ்பீடு iMT (கிளட்ச் பெடல் இல்லாமல் மேனுவல்) மற்றும் 7-ஸ்பீடு DCT தேர்வுடன் வரும்.
அதே 116 PS 1.5 லிட்டர் டீசல் யூனிட்டுடன் அதே 6-ஸ்பீடு iMT மற்றும் 6-ஸ்பீடு AT டிரான்ஸ்மிஷன்களுடன் Kia வழங்கும், ஆனால் இந்த இன்ஜினுடன் 6-ஸ்பீடு MT கியர்பாக்ஸ் ஆப்ஷனை மீண்டும் அறிமுகப்படுத்தும்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அறிமுகம்
ஃபேஸ்லிஃப்டட் கியா சோனெட் 2024 -ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என்று நாங்கள் நம்புகிறோம். கியா இதன் விலையை ரூ. 8 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV300 , ஹூண்டாய் வென்யூ, மாருதி பிரெஸ்ஸா, நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர் மற்றும் மாருதி ஃப்ரான்க்ஸ் கிராஸ் ஓவர் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
மேலும் படிக்க: சோனெட் ஆட்டோமெட்டிக்