• English
  • Login / Register

2024 Jeep Compass Night Eagle அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

published on ஏப்ரல் 10, 2024 06:23 pm by rohit for ஜீப் காம்பஸ்

  • 82 Views
  • ஒரு கருத்தை எழுதுக

காம்பஸ் நைட் ஈகிள் ஸ்போர்ட்ஸ் காரின் எக்ஸ்ட்டீரியர் மற்றும் இன்ட்டீரியர் பிளாக் கலரில் கொடுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக சில வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

2024 Jeep Compass Night Eagle edition launched

  • இது கிரில், ஃபாக் லேம்ப்ஸ் ஹவுஸிங் மற்றும் ரூஃப் ரெயில் ஆகியவற்றுக்கு பிளாக் கலர் ஃபினிஷிங் கொடுக்கப்பட்டுள்ளது..

  • 18-இன்ச் பிளாக்-அவுட் அலாய் வீல்கள் மற்றும் 'நைட் ஈகிள்' பேட்ஜ் உடன் வருகிறது.

  • கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள வசதிகளில் முன்புற மற்றும் பின்புற டேஷ்கேம்கள் மற்றும் பின்புற இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன்கள் ஆகியவை அடங்கும்.

  • எஸ்யூவி -யின் 2-லிட்டர் டீசல் இன்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் ஜீப் காம்பஸ் காரின் நைட் ஈகிள் எடிஷன் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த லிமிடெட் எடிஷன் முதன்முதலில் 2020 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 2022 இல் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எஸ்யூவியிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. 2024 ஆம் ஆண்டில் காம்பஸ் நைட் ஈகிள் பதிப்பு உள்ளேயும் வெளியேயும் சில ஒப்பனை மாற்றங்களை மட்டுமில்லாமல் சில கூடுதல் வசதிகளையும் பெற்றுள்ளது.

வேரியன்ட் வாரியான விலை

வேரியன்ட்

நைட் ஈகிள் எடிஷனின் விலை

மேனுவல்

ரூ.25.04 லட்சம்

ஆட்டோமெட்டிக்

ரூ.27.04 லட்சம்

இவை புனே ஜீப் டீலர்ஷிப்பிலிருந்து பெறப்பட்ட எக்ஸ்-ஷோரூம் விலை விவரங்கள் ஆகும்

வெளியில் என்ன மாறியுள்ளது?

2024 Jeep Compass Night Eagle edition cabin

காம்பஸின் சமீபத்திய நைட் ஈகிள் எடிஷன் பழைய நைட் ஈகிள் மாடல்களில் இருந்ததைப் போலவே கிரில், ஃபாக் லேம்ப் ஹவுசிங் மற்றும் ரூஃப் ரெயில்களுக்கு ஒரு கிளாஸி பிளாக் பினிஷை பெறுகிறது. ஜீப் பக்கவாட்டு ஃபெண்டர்களில் பிளாக்-அவுட் மோனிகர்கள் மற்றும் 18-இன்ச் பிளாக்-அவுட் அலாய் வீல்களையும் வழங்கியுள்ளது. ஜீப் நிறுவனம் எஸ்யூவியின் நைட் ஈகிள் பதிப்பை பிளாக், வொயிட் மற்றும் ரெட் ஆகிய மூன்று எக்ஸ்ட்டீரியர் நிறங்களில் இதை வழங்குகிறது. இவை மூன்றுமே பிளாக் கலர் ரூஃப் உடன் ஸ்டாண்டர்டாக வருகின்றன.

மேலும் படிக்க: MG Hector Blackstorm எடிஷன் அறிமுகம், விலை ரூ.21.25 லட்சத்தில் தொடங்குகிறது

கேபின் மாற்றங்கள் மற்றும் வசதிகள் விவரம்

2024 ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிஷன் கதவு டிரிம்களில் பிளாக் கலர் இன்செர்ட்களுடன், ஆல் பிளாக் கேபின் தீமில் வருகிறது. முன்புற மற்றும் பின்புற டேஷ்கேம்கள், ஏர் பியூரிஃபையர், பின்புற இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன்கள் மற்றும் புளூ கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவை  புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.. லிமிடெட் காம்பஸ் வேரியன்ட்டின் மற்ற வசதிகளில் பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவை அடங்கும்.

டூயல் முன் ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் ரிவர்சிங் கேமரா போன்ற பாதுகாப்பு வசதிகளுடன் காம்பஸ் நைட் ஈகிளை ஜீப் நிறுவனம் வழங்குகிறது.

அதே டீசல் பவர்டிரெய்ன் இதில் உள்ளது

Jeep Compass 2-litre diesel engine

காம்பஸ் 2-லிட்டர் டீசல் இன்ஜினுடன் (170 PS/350 Nm), 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. நைட் ஈகிள் பதிப்பிற்கான அதே ஆப்ஷன்கள் இவை.

மேலும் பார்க்க: சோதனையின் போது படம் பிடிக்கப்பட்ட Tata Curvv, காரில் புதிய பாதுகாப்பு வசதி இருப்பது இப்போது தெரிய வந்துள்ளது

போட்டியாளர்கள்

ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எடிஷன், பிளாக்-அவுட் மிட் சைஸ் எஸ்யூவிகளான எம்ஜி ஹெக்டர் பிளாக்ஸ்டார்ம் பதிப்பு மற்றும் டாடா ஹாரியர் டார்க் வேரியன்ட்களுக்கு பிரீமியம் மாற்றாக இருக்கும். ஹூண்டாய் டுக்ஸான் மற்றும் சிட்ரோன் C5 ஏர்கிராஸ் பிரீமியம் எஸ்யூவிகளுக்கு ஸ்போர்ட்டியர் தோற்றம் கொண்ட மாற்றாகவும் இருக்கும்.

மேலும் படிக்க: காம்பஸ் டீசல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Jeep காம்பஸ்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • மஹிந்திரா போலிரோ 2024
    மஹிந்திரா போலிரோ 2024
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: நவ,2024
  • போர்டு இண்டோவர்
    போர்டு இண்டோவர்
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மார, 2025
  • ஸ்கோடா kylaq
    ஸ்கோடா kylaq
    Rs.8.50 - 15 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மார, 2025
  • க்யா ev9
    க்யா ev9
    Rs.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: அக்ோபர், 2024
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஆகஸ, 2025
×
We need your சிட்டி to customize your experience