புதிய ஹோண்டா அமேஸ் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்களில் பார்க்க முடிகிறது
புதிய ஹோண்டா அமேஸின் டெஸ்ட் டிரைவ்கள் தற்போது நடைபெற்று வருகின்றன, இந்த சப்-4m செடானின் டெலிவரி ஜனவரி 2025-இல் முதல் தொடங்கவுள்ளது
-
புதிய ஹோண்டா அமேஸில் டூயல்-பாட் LED ஹெட்லைட்கள், 15 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் LED டெயில் லைட்டுகள் உள்ளன.
-
உள்ளே, சீட்களில் பீஜ் லெதரெட் அப்ஹோல்ஸ்டரியுடன் டூயல்-டோன் பிளாக் மற்றும் பீஜ் நிற தீம்மை வழங்குகிறது.
-
8 இன்ச் டச்ஸ்கிரீன், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ஆட்டோமேட்டிக் ஏசி ஆகியவை குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.
-
பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை இதில் 6 ஏர்பேக்குகள், ADAS மற்றும் லேன்வாட்ச் கேமரா ஆகியவற்றைப் பெறுகிறது.
-
இது 90 PS மற்றும் 110 NM டார்க்கை உற்பத்தி செய்யும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.
-
இதன் விலை ரூ.8 லட்சம் முதல் ரூ.10.90 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் தலைமுறை ஹோண்டா அமேஸ் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் விலை ரூ. 8 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா). சப்-4m செடானின் டெஸ்ட் டிரைவ்கள் தற்போது நடைபெற்று வருகின்றன, மேலும் புதிய அமேஸ் ஏற்கனவே பல டீலர்ஷிப்களில் இப்போது கிடைத்துவருகிறது. புதிய ஹோண்டா செடானின் சில படங்களைப் பெற்றுள்ளோம், மேலும் காட்டப்படும் மாடலில் நாம் காணக்கூடிய அனைத்து விவரங்களும் பின்வருமாறு:
இந்த மாடலில் நாம் காணக்கூடிய சிறப்பம்சங்கள் என்ன?
காட்சிப்படுத்தப்பட்ட ஹோண்டா அமேஸில் LED ஹெட்லைட்கள், LED DRL-கள் மற்றும் LED ஃபாக் லேம்ப்கள் உள்ளன. முன் கண்ணாடியில் ஒரு கேமரா யூனிட்டையும் நம்மால் காண முடிகிறது, அது அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டங்களின் (ADAS) தொகுப்பைப் பெறுகிறது.
ப்ரொபைலில், 16-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் குரோம்-ஃபினிஷ் செய்யப்பட்ட டோர் ஹேன்டில்களைக் காணலாம். பின்புறத்தில், புதிய அமேஸில் சிட்டியைப் போலவே LED டெயில் லைட் யூனிட்கள் உள்ளன. இந்த விவரங்கள் அனைத்தும் புதிய அமேஸின் ஃபுல்லி லோடெட் ZX வேரியன்ட் என்று கூறுகின்றன.
உள்ளே, அமேஸ் ZX வேரியன்டில் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் அனைத்து பயணிகளுக்கும் சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள் உள்ளன. டேஷ்போர்டில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே சப்போர்ட் உடன் 8-இன்ச் ஃப்ரீ-ஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன் மற்றும் செமி-டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே உள்ளது.
புதிய ஹோண்டா அமேஸின் கூடுதல் அம்சங்களாக வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ரியர் வென்ட்களுடன் கூடிய ஆட்டோமேட்டிக் ஏசி, ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட் மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகியவை அடங்கும். பாதுகாப்பைப் பொறுத்தவரை, ஆறு ஏர்பேக்குகள், ஸ்டாண்டர்ட், ரியர்வியூ மற்றும் லேன் வாட்ச் கேமராக்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் லேன்-கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோலை உள்ளடக்கிய அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டங்களின் (ADAS) தொகுப்புடன் வருகிறது.
மேலும் படிக்க: புதிய ஹோண்டா அமேஸ் பழைய மாடலை விட அதிக எரிபொருள் திறன் கொண்டது
பவர்டிரெயின் ஆப்ஷன்கள்
புதிய ஹோண்டா அமேஸ் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது, அதன் விவரக்குறிப்புகள் பின்வருமாறு:
இன்ஜின் |
1.2 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் |
பவர் |
90 PS |
டார்க் |
110 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீட் MT / 7-ஸ்டெப் CVT* |
கிளைம் செய்யப்படும் ரேஞ்ச் |
18.65 கி.மீ/லி (MT) / 19.46 கி.மீ/லி (CVT) |
*CVT = கன்டின்யூவெஸ்லி வேரியபில் டிரான்ஸ்மிஷன்
2024 ஹோண்டா அமேஸின் விலை மற்றும் போட்டியாளர்கள்
ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனம் புதிய ஹோண்டா அமேஸின் விலையை ரூ.8 லட்சம் முதல் ரூ.10.90 லட்சம் வரை நிர்ணயித்துள்ளது (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா). இது புதிய மாருதி டிசையர், ஹூண்டாய் ஆரா மற்றும் டாடா டிகோருடன் போட்டியிடுகிறது.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளைப் பெற கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: ஹோண்டா அமேஸின் ஆன் ரோடு விலை