குளோபல் NCAP-ல் மாருதி வேகன் R-ன் மற்றொரு மறக்க வேண்டிய ஃபெர்பாமன்ஸ்
published on ஏப்ரல் 05, 2023 10:07 pm by rohit for மாருதி வாகன் ஆர்
- 42 Views
- ஒரு கருத்தை எழுதுக
2023 வேகன் R-ன் ஃபுட்வெல் பகுதி மற்றும் பாடிஷெல் உறுதித்தன்மை "நிலையற்றவையாக" கருதப்பட்டது
-
இது பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் முறையே ஒரு நட்சத்திரத்தையும் பூஜ்ஜிய நட்சத்திரத்தையும் பெற்றது.
-
வேகன் R கடந்த 2019-ல் கிராஷ்-டெஸ்ட் செய்யப்பட்டது, அப்போது அது ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு நட்சத்திரங்களைப் பெற்றிருந்தது.
-
2023 வேகன் R மொத்தம் 34 புள்ளிகளில் 19.69 புள்ளிகளைப் பெற்றது.
-
அதில் பயணம் செய்யும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மதிப்பெண் மொத்தம் 49 புள்ளிகளில் 3.40 ஆக இருந்தது.
-
டுயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், EBD உடன் ABS மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை ஸ்டாண்டர்டான பாதுகாப்புத் அம்சங்களில் அடங்கும்.
தனது #SaferCarsForIndia விழிப்புணர்வு பிரச்சாரத்தின் கீழ் 2023 மாருதி வேகன் R உள்ளிட்ட புதிய கார்களை குளோபல் NCAP கிராஷ்-டெஸ்ட் செய்துள்ளது இது பெரியவர்களுக்கன பாதுகாப்பில் மோசமான ஒரு நட்சத்திர மதிப்பீட்டையும், குழந்தைகளின் பாதுகாப்பில் பூஜ்ஜியத்தையும் பெற்றது. உங்கள் நினைவூட்டுவதற்காக, இந்த ஹேட்ச்பேக் 2019-ஆம் ஆண்டிலும் சோதனை செய்யப்பட்டது, அப்போது ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு நட்சத்திரங்களைப் பெற்றுள்ளது. முன்னர் நடத்தப்பட்ட சோதனைகள் இப்போது இருப்பது போல் கடுமையாக இல்லை, சைடு இம்பாக்ட், சைடு போல் இம்பாக்ட் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டபிலிட்டி கண்ட்ரோல் (ESC) சோதனைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
2023 வேகன் R டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள் மற்றும் EBD பொருத்தப்பட்ட ABS உடன் வரும் மிக அடிப்படையான பதிப்பில் சோதனை செய்யப்பட்டது. வேகன் R காரில் பக்கவாட்டு ஏர்பேக்குகள் பொருத்தப்படாததால், அதன்மீது சைடு இம்பாக்ட் போல் பரிசோதனை செய்யப்படவில்லை. ESC சோதனையைப் பொறுத்த வரையில், கார் தயாரிப்பாளர் ஹேட்ச்பேக்கில் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP)-ஐ வழங்குவதற்கு முன்பே இது நடத்தப்பட்டதாக நாங்கள் நம்புகிறோம்.
பெரிய பயணிகளுக்கான பாதுகாப்பு
ஃபிரண்டல் இம்பாக்ட் (மணிக்கு 64 கி. மீ)
2023 வேகன் R வயது வந்தோருக்கான பாதுகாப்பில் மொத்தம் 34 புள்ளிகளில் 19.69 புள்ளிகளைப் பெற்றது (முன்பு அது மொத்தம் 17 புள்ளிகளில் 6.93 புள்ளிகளைப் பெற்றிருந்தது). ஓட்டுநரின் தலைக்கு வழங்கப்படும் பாதுகாப்பு "போதுமானதாக" இருந்தது, அதே நேரத்தில் பயணிகளுக்கும் "நல்ல" நிலையில் இருந்தது. அவர்களின் கழுத்துக்கு "நல்ல" பாதுகாப்பு கிடைத்தது. ஓட்டுநரின் மார்புக்கு வழங்கப்படும் பாதுகாப்பு "பலவீனமானது" என்று கூறப்பட்டாலும், அது பயணிகளின் மார்புக்கு "போதுமானதாக" மதிப்பிடப்பட்டது. ஓட்டுநர் மற்றும் பயணிகளின் முழங்கால்களுக்கு "ஓரளவு" பாதுகாப்பைக் காட்டின.
டிரைவரின் கால் முன்னெலும்புகளுக்கு "போதுமான மற்றும் பலவீனமான" பாதுகாப்பைக் காட்டியது, அதே நேரத்தில் பயணிகளின் முன்னெலும்புகளுக்கு "நல்ல" பாதுகாப்பைக் காட்டியது. ஹேட்ச்பேக்கின் ஃபுட்வெல் பகுதி "நிலையற்றது" என்று மதிப்பிடப்பட்டது, மேலும் பாடிஷெல் மற்றும் கார் மேலும் சுமைகளைத் தாங்கும் திறனற்றதாகக் கருதப்பட்டது.
சைடு இம்பாக்ட் (மணிக்கு 50 கி. மீ )
சைடு இம்பாக்ட் சோதனையில், தலை, வயிறு மற்றும் இடுப்புப் பகுதிக்கான பாதுகாப்பு "நல்லது" என்றும் மார்புப் பாதுகாப்பு "ஓரளவு" என்றும் குறிப்பிடப்பட்டது.
மேலும் படிக்க: குளோபல் NCAP கிராஷ் டெஸ்டில் ஸ்விஃப்டை-ஐ விட மாருதி ஆல்டோ K10 சிறப்பாக செயல்படுகிறது
குழந்தை பயணியின் பாதுகாப்பு
குழந்தைகளின் பாதுகாப்பில் வேகன் R மொத்தம் 49 புள்ளிகளில் 3.40 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 2019 கிராஷ் டெஸ்டில், இந்த ஹேட்ச்பேக் இந்தத் துறையில் இரண்டு நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது மற்றும் மொத்தம் 49 புள்ளிகளில் 16.33-ஐ பெற்றது.
ஃபிரண்டல் இம்பாக்ட் (மணிக்கு 64 கி. மீ)
மூன்று வயது குழந்தைக்கான இருக்கை முன்புறத்தை பார்த்த வகையில் நிறுவப்பட்டது, ஆனால் தாக்கத்தின் போது அதிகமாக முன்னோக்கி நகர்வதைத் தடுக்க முடியவில்லை, இதனால் தலையில் அதிக காயங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மறுபுறம், ஒன்றரை வயது டம்மி குழந்தை இருக்கை பின்புறமாக இருந்தது, இது தலைக்கு அதிக ஆபத்தையும் மார்புக்கு "பலவீனமான" பாதுகாப்பையும் காட்டியது.
வேகன் R-ன் அனைத்து இருக்கை நிலைகளிலும் மூன்று-பாயின்ட் சீட்பெல்ட்கள் இல்லாததால், பயணிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பில் பூஜ்ஜிய நட்சத்திரங்களைப் பெறுவதற்கு வழிவகுத்தது என்று பாதுகாப்பு மதிப்பீட்டு அமைப்பு கூறியது. மாருதி சுஸூகி முன்பக்க பயணிகள் நிலையில் ஒரு சைல்டு ரெஸ்ட்ரெய்ண்ட் சிஸ்டம் (CRS) நிறுவப்பட்டிருந்தால், கோ-டிரைவர் ஏர்பேக்கைத் துண்டிக்கும் வாய்ப்பை வழங்கவில்லை.
2023 மாருதி வேகன் R-ன் பாதுகாப்பு கிட்
மாருதி வேகன் R காரில் டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், EBD, ESP உடன் ABS, மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவற்றை ஸ்டான்டர்டாக பொருத்தியுள்ளது. இந்த அடிப்படை பாதுகாப்பு அம்சங்களைத் தவிர, அனைத்து பயணிகளுக்கும் ISOFIX குழந்தை இருக்கைகள் மற்றும் த்ரீ-பாயின்ட் சீட் ஆங்கரேஜ்கள் உட்பட வேறு எந்த உபகரணங்களையும் வேகன் R பெறவில்லை.
வேகன் R தற்போது நான்கு பரந்த வகைகளில் வழங்கப்படுகிறது: LXi, VXi, ZXi மற்றும் ZXi+. புதிய விலை ரூ.5.53 லட்சத்திலிருந்து ரூ. 7.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும்.
மேலும் படிக்கவும்: ஆன் ரோடு விலையில் வேகன் R
0 out of 0 found this helpful