குளோபல் NCAP கிராஷ் டெஸ்டில் ஸ்விஃப்ட்-ஐ விட மாருதி ஆல்டோ K10 சிறப்பாக செயல்பட்டுள்ளது
published on ஏப்ரல் 05, 2023 09:29 pm by ansh for மாருதி ஆல்டோ கே10
- 29 Views
- ஒரு கருத்தை எழுதுக
இரண்டு நட்சத்திரங்கள் மட்டுமே கிடைத்தாலும், ஸ்விஃப்ட், இக்னிஸ் மற்றும் S-பிரஸ்ஸோ போன்றவற்றைப் போல் இல்லாமல் இதன் பாடிஷெல் உறுதித்தன்மை நிலையானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
-
இந்த என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் பெரியவர்களின் பயண பாதுகாப்பிற்காக இரண்டு நட்சத்திரங்களையும், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பூஜ்ஜிய நட்சத்திரங்களையும் பெற்றது.
-
பெரியவர்களின் பயண பாதுகாப்பிற்கு மொத்தம் 34 புள்ளிகளில் 21.67 புள்ளிகளையும், குழந்தைகள் பாதுகாப்புக்கு மொத்தம் 49 புள்ளிகளில் 3.52 புள்ளிகளையும் பெற்றது.
-
டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், EBD உடன் ABS, முன் இருக்கை பெல்ட் நினைவூட்டல்கள் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை இதன் ஸ்டாண்டர்டு பாதுகாப்புக் கிட்டில் அடங்கும்.
-
ஆல்டோ K10-க்கு இப்போது ரூ. 3.99 லட்சம் முதல் ரூ. 5.95 லட்சம் வரை (எக்ஸ் ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
#SaferCarsForIndia -ன் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் கீழ், குளோபல் NCAP இந்தியாவில் விற்கப்படும் சில புதிய மாடல்களின் கிராஷ் டெஸ்ட் முடிவுகளை வெளியிட்டது, அவற்றில் ஒன்று ஆல்டோ K10. ஹேட்ச்பேக்கின் ஒட்டுமொத்த பாதுகாப்பு மதிப்பீடுகள் பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும், கடந்த ஆண்டு சோதனை செய்யப்பட்ட ஸ்விஃப்ட், -S-பிரஸ்ஸோ மற்றும் இக்னிஸ் மற்றும் ஆல்டோ K10 உடன் சோதனை செய்யப்பட்ட வெகன் R போன்றவற்றை விட வியக்கத்தக்க வகையில் சிறந்ததாக இருந்தது.
மேலும் படிக்க: GlobalNCAP க்ராஷ் டெஸ்ட்களில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N 5-ஸ்டார் மதிப்பீட்டை அடைந்துள்ளது
இந்த சோதனைகளில் இந்தியாவின் மிகவும் விலை குறைந்த கார் எவ்வாறு செயல்பட்டது என்பதைப் பார்ப்போம்:
பெரிய பயணிகளின் பாதுகாப்பு
இந்த என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மொத்தம் 34 புள்ளிகளில் 21.67 புள்ளிகளைப் பெற்று இரண்டு நட்சத்திர பெரிய பயணிகளுக்கான பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது.
முன் பக்கத் தாக்கம்
ஃபிரண்டல் இம்பாக்ட் சோதனையில், ஓட்டுநர் மற்றும் சக பயணிகள் இருவருக்கும் தலை மற்றும் கழுத்தில் "நல்ல" பாதுகாப்பையும், மார்பில் "ஓரளவு" பாதுகாப்பையும் பெற்றது. ஓட்டுநரின் வலது தொடை மற்றும் முழங்காலுக்கு "பலவீனமான" பாதுகாப்பு கிடைத்தது மற்றும் வலது கால் முன்னெலும்புகளின் பாதுகாப்பு "ஓரளவு" என மதிப்பிடப்பட்டது. ஓட்டுநரின் இடது தொடை, முழங்கால் மற்றும் கால் முன்னெலும்புகளுக்கு "ஓரளவு" பாதுகாப்பும் கிடைத்தது.
சக-பயணிகளின் தொடைகள் மற்றும் முழங்கால்களுக்கு"ஓரளவு" பாதுகாப்பை மட்டுமே அளித்து, அதே சமயம் சக பயணிகளின் முன்னெலும்புகளுக்கான பாதுகாப்பு "போதுமானதாக" மதிப்பிடப்பட்டது.
பக்கவாட்டுத் தாக்கம்
சைடு இம்பாக்ட் சோதனையில், ஓட்டுநரின் தலை மற்றும் இடுப்புக்கு "நல்ல" பாதுகாப்பு இருந்தது. மார்புக்கான பாதுகாப்பு "பலவீனமானது" என்று மதிப்பிடப்பட்டது மற்றும் அடிவயிற்றின் பாதுகாப்பு 'போதுமானதாக' இருந்தது. ஆல்டோ K10 காரில் திரைச்சீலை மற்றும் பக்கவாட்டு ஏர்பேக்குகள் இல்லாததால், சைடு போல் இம்பாக்ட் சோதனை நடத்தப்படவில்லை.
பாடிஷெல் ஒருமைப்பாடு
இந்த தாக்கங்களுக்குப் பிறகு ஆல்டோ K10-ன் பாடிஷெல் ஒருமைப்பாடு நிலையானதாக மதிப்பிடப்பட்டது, அதாவது குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட் வேகமான 64 கிமீ வேகத்தை விட கூடுதல் சுமையைத் தாங்கும் திறன் கொண்டது.
பயணம் செய்யும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு
பயணம் செய்யும் குழந்தைகளுக்கான பாதுகாப்பைப் பொறுத்தவரை, ஆல்டோ K10 ஆனது மொத்தம் 49 புள்ளிகளில் 3.52 புள்ளிகளைப் பெற்று பூஜ்ஜிய நட்சத்திரங்களைப் பெற்றது.
மேலும் படிக்க: மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் மாருதி சுஸூகி நிறுத்தப்பட்டது
18 மாத குழந்தைக்கு, பெரியவர்களுக்கான சீட் பெல்ட்டைப் பயன்படுத்தி பின்புறத்தை பார்த்த வகையில் சைல்டு ரெஸ்ட்ரெய்ண்ட் சிஸ்டம் (CRS) நிறுவப்பட்டது, அங்கு அது தலைக்கு "நல்ல" பாதுகாப்பையும் மார்புக்கு "பலவீனமான" பாதுகாப்பையும் பெற்றது. மூன்று வயது குழந்தைக்கு, வயது வந்தோருக்கான சீட்பெல்ட்டைப் பயன்படுத்தி முன்புறத்தை பார்த்த வகையில் சைல்டு ரெஸ்ட்ரெய்ண்ட் சிஸ்டம் (CRS) நிறுவப்பட்டது. இங்கே, தலையில் தாக்கம் மற்றும் காயங்கள் அதிக ஆபத்துடையுவையாக இருந்தன.
மாருதி ISOFIX குழந்தை இருக்கை ஆங்கர்களை வழங்காததால் குழந்தை பாதுகாப்பிற்கான சைடு இம்பாக்ட் சோதனை நடத்தப்படவில்லை
பாதுகாப்பு அம்சங்கள்
டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், EBD பொருத்தப்பட்ட ABS, முன் இருக்கை பெல்ட் நினைவூட்டல்கள் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் போன்ற அம்சங்கள் ஆல்டோ K10-ல் உள்ளன. இந்த ஹேட்ச்பேக்கின் உயர் வேரியன்ட்களில் இம்பாக்ட் சென்சிங் டோர் அன்லாக், சென்ட்ரல் டோர் லாக்கிங் மற்றும் ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டோர் லாக் போன்ற அம்சங்களையும் பெற்றுள்ளன.
விலைகள் & போட்டியாளர்கள்
ரூ.3.99. லட்சத்திலிருந்து ரூ.5.95 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கக்கூடிய ஆல்டோ K10 கார், ரினால்ட் க்விட்-க்கு போட்டியாக உள்ளது அதன் விலையை ஒப்பிடும்போது மாருதி S-பிரஸ்ஸோ-க்கு மாற்றாக கருதப்படலாம் .
மேலும் படிக்கவும்: ஆல்ட்டோ K10 ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful