பார்க்க: பயணிகள் ஏற்றப்பட்ட EV மற்றும் பயணிகள் இல்லாத EV: உண்மையில் எந்த லாங் ரேஞ்ச் டாடா நெக்ஸான் EV கார் அதிக துரம் செல்கிறது?
மலைப்பகுதிகளில் உள்ள வளைந்த சாலைகளில் உள்ள ரேஞ்ச் மதிப்பீட்டில் இரண்டு EV -களின் நகர சாலைகள் கிடைத்ததை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிக வேறுபாடு இருக்கக்கூடும்.
EV -களின் செயல்திறன் என்று வரும்போது அவை கிளைம் செய்யப்பட்ட ரேஞ்சில் பயன்படுத்தும் போது உண்மையாகவே எவ்வளவு கொடுக்கின்றன என்பதை மதிப்பிடுவதற்கு பல காரணிகள் உள்ளன. குறிப்பாக நிறைய நபர்களை காரில் ஏற்றிச் செல்லும் போது. எங்கள் சமீபத்திய இன்ஸ்டாகிராம் ரீல் ஒன்றில் நாங்கள் டாடா நெக்ஸான் EV -யின் இரண்டு வெர்ஷன்களை காட்ட முயற்சித்தோம். ஒன்று நான்கு பயணிகள் மற்றும் 35 கிலோ சுமையுடன், மற்றொன்று டிரைவரோடு மட்டும். குறைவான ஆள்களை ஏற்றுவதால் EV -யின் ரேஞ்சில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதைப் பார்க்க சோதனை செய்தோம்.
சோதனை
நாங்கள் சோதனை செய்த போது இரண்டு EV -க்களையும் ஒன்றுடன் ஒன்று இயக்கி அவற்றின் சார்ஜ் முடிவடையும் வரை சாலை நிலைமைகளில் அவற்றின் ரேஞ்ச் -களை தீர்மானிக்க முடிவு செய்தோம். உண்மையில் அவற்றின் யதார்த்தத்தை உறுதி செய்வதற்காக டாடா நெக்ஸான் EV -களை நகர மற்றும் நெடுஞ்சாலை சாலைகளில் சோதனை செய்தோம். MIDC தரநிலைகளின்படி 465 கி.மீ ரேஞ்சை கொடுப்பதாக கூறும் டாடா நெக்ஸான் EV -யின் லாங் ரேஞ்ச் வேரியன்ட்களை நாங்கள் மதிப்பீட்டுக்காக எடுத்துக் கொண்டோம்.
நாள் முடிவில் இரண்டு EV -களும் தங்கள் பணிகளை முடித்துவிட்டன, மேலும் எங்கள் கைகளில் தகவல் இருந்தது. நெக்ஸான் EV நான்கு பயணிகளுடன் 271 கி.மீ பயணித்தது பயணிகள் இல்லாமல் சோதனை செய்யப்பட்ட காரில் 299 கி.மீ வரை செல்ல முடிந்தது.
எங்கள் சோதனையின் போது இரண்டு கார்களின் ரேஞ்சிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை பார்க்க முடிந்தது. நகர சாலைகளில் வித்தியாசம் சுமார் 15-20 கி.மீ. ஆக இருந்தது. இருப்பினும் அதிகமான வளைவுகளைக் கொண்ட மலைப்பாங்கான சாலைகளில் இந்த வேறுபாடு கணிசமாக 35-40 கி.மீ வரை இருக்கலாம்.
டாடா நெக்ஸான் EV: ஒரு கண்ணோட்டம்
டாடா 2020 ஆண்டில் நெக்ஸான் EV -யை அறிமுகப்படுத்தியது, மேலும் சமீபத்தில் ஒரு புதிய வடிவமைப்பு மற்றும் பெரிய பேட்டரி பேக்குடன் அது அப்டேட் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் சோதித்த இரண்டு EV -களின் பவர்டிரெய்ன்கள் பற்றிய விரிவான தகவல் இங்கே உள்ளது.
விவரங்கள் |
டாடா நெக்ஸான் EV லாங் ரேஞ்ச் |
பேட்டரி பேக் |
40.5 kWh |
எலக்ட்ரிக் மோட்டார் எண்ணிக்கை |
1 |
பவர் |
144 PS |
டார்க் |
215 Nm |
கிளைம் செய்யப்பட்ட ரேஞ்ச் |
465 கிமீ (எம்ஐடிசி) |
நாங்கள் சோதனைக்கு எடுத்துக் கொண்ட கார்கள் நெக்ஸான் EV -கள் மாடலின் லாங் ரேஞ்ச் பதிப்புகள் ஆகும். அதே வேளையில் EV ஆனது 130 PS மற்றும் 215 Nm அவுட்புட்டை கொடுக்கும் 30 kWh பேட்டரியுடன் நடுத்தர அளவிலும் கிடைக்கிறது, இதன் MIDC-ன் கிளைம் ரேஞ்ச் 325 கி.மீ ஆக உள்ளது.
விலை மற்றும் போட்டியாளர்கள்
2024 டாடா நெக்ஸான் EV -யானது ரூ. 14.49 லட்சம் மற்றும் ரூ. 19.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் மஹிந்திரா XUV400 EV உடன் நேரடியாக போட்டியிடுகிறது. மேலும் இது MG ZS EV காருக்கு மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் மாற்றாகவும் இருக்கும்.
மேலும் படிக்க: டாடா நெக்ஸான் EV ஆட்டோமெட்டிக்