Tata Nexon EV Facelift அதன் ICE பதிப்பை விட கூடுதலாக பெறும் விஷயங்கள்
published on செப் 11, 2023 04:34 pm by ansh for டாடா நெக்ஸன் இவி
- 37 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய எலக்ட்ரிக் நெக்ஸான் டிசைன், இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கூடுதலான வசதிகளை பெறுகிறது
ஃபேஸ்லிஃப்டட் டாடா நெக்ஸான் EV அதன் அனைத்து அம்சங்கள் மற்றும் விவரங்கள் ஆகியவை வெளியாகியுள்ளன. சமீபத்தில் வெளியிடப்பட்ட நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் போலவே டாடா இதை வடிவமைத்துள்ளது. ஆனால் EV கூடுதலாக குறிப்பிட்ட சில வசதிகளுடன் வருகிறது. இருப்பினும், புதிய ஒப்பனை மாற்றங்கள் மற்றும் பவர்டிரெய்ன் ஆகியவை மட்டுமல்ல நெக்ஸான் EV சில கூடுதல் அம்சங்களையும் பெறுகிறது.
புதிய நிறம், வித்தியாசமான முன்பக்கம்
எலெக்ட்ரிக் மற்றும் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்தான் (ICE) நெக்ஸனுக்கு இடையே உள்ள மிகப்பெரிய வேறுபாடு ஆகும், இது அவற்றை வேறுபடுத்தி சொல்வதை எளிதாக்குகிறது. இங்கே, நெக்ஸான் EV -யானது மூடிய கிரில் முழுவதும் DRL ஸ்டிரிப்பை பெறுகிறது. சார்ஜ் செய்யும் போது பிரதிபலிக்கும் வகையில் இது ஒளிரும் மற்றும் துடிக்கும்.
மேலும் படிக்க: Tata Nexon EV Facelift: வேரியன்ட்கள் வாரியான கலர் ஆப்ஷன்கள் விவரம் இங்கே
மேலும், ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட சியாரா EV கான்செப்ட்டிலிருந்து கடன் வாங்கப்பட்ட டாப்-ஸ்பெக் நெக்ஸான் EV எம்பவர்டு மாறுபாட்டிற்கான புதிய "எம்பவர்டு ஆக்சைடு" கலர் ஆப்ஷனை டாடா நிறுவனம் சேர்த்துள்ளது (டாடா அதை இப்போது ஒரு பர்சோனா என்று அழைக்கிறது).
பெரிய & சிறந்த இன்ஃபோடெயின்மென்ட்
ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் ஏற்கனவே ஒரு பெரிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை வழங்குகிறது, ஆனால் புதிய நெக்ஸான் EV ஒரு பெரிய 12.3-இன்ச் யூனிட்டை வழங்குவதன் மூலம் ஒரு படி மேலே செல்கிறது.
ஃபேஸ்லிஃப்டட் நெக்ஸானின் இன்ஃபோடெயின்மென்ட்டை போலவே, இந்த யூனிட்கள் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை ஆதரிக்கின்றன, ஆனால் நெக்ஸான்இவி ஃபேஸ்லிஃப்ட் Arcade.ev. எனப்படும் ICE நெக்ஸானில் ஒரு வசதியை பெறுகிறது. Arcade.ev என்பது, ஃபேஸ்லிஃப்டட் நெக்ஸான் EVயின் 10.25-இன்ச் மற்றும் 12.3-இன்ச் டிஸ்பிளேவில் பல்வேறு வகையான ஆப்ஸை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த உங்களை அனுமதிக்கும் ஒரு ஆப் ஸ்டோர் ஆகும். இந்த அம்சத்தை பயன்படுத்தி, நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற OTT ஆப்களின் வழியாக கேம்களை விளையாடலாம், மியூசிக் பயன்பாடுகளை பதிவிறக்கலாம் மற்றும் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யலாம். இந்தச் செயல்பாடு, எலக்ட்ரிக் எஸ்யூவி சார்ஜ் செய்யும் போது நேரத்தைப் போக்குவதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டது ஆகவே ஓட்டுநர் கவனச்சிதறல்களை தவிர்ப்பதற்காக பயணத்தின் போது இதை அணுக முடியாது.
புதிதாக சேர்க்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்
நெக்ஸான் EV மற்றும் நெக்ஸான் ICE இரண்டும் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் (EBD) உடன் கூடிய ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஹில் ஹோல்ட், மற்றும் பிளைண்ட் வியூ மானிட்டர் உடன் கூடிய 360-டிகிரி கேமரா உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களை பெறுகின்றன. ஆனால் நெக்ஸான் EV -யுடன், கூடுதல் வசதி மற்றும் பாதுகாப்பிற்காக எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகளையும் பெறுவீர்கள்.
நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியன்ட்களின் பட்டியல், பேட்டரி மற்றும் பவர்டிரெய்ன் மாற்றங்கள் பற்றி மேலும் அறிய, வெளியிடப்பட்டதிலிருந்து எங்கள் கவரேஜை பார்க்கவும்..
எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் விலை
சில நாட்கள் இடைவெளியில் வெளியிடப்பட்டாலும், இந்த இரண்டு கார்களின் விலையும் செப்டம்பர் 14-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. ஃபேஸ்லிஃப்டட் டாடா நெக்ஸான் ரூ. 8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்றும், ஃபேஸ்லிஃப்டட் நெக்ஸான் EV ரூ. 15 லட்சம் (எக்ஸ்- ஷோரூம்).என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ICE நெக்ஸான் ஆனது கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV300 and மாருதி பிரெஸ்ஸா போன்றவற்றுக்கு தொடர்ந்து போட்டியாக இருக்கும். மேலும் நெக்ஸான் EV ஆனது மஹிந்திரா XUV400 உடனான தனது போட்டியை தொடரும்.
மேலும் படிக்க: நெக்ஸான் AMT