• English
    • Login / Register

    2025 ஆண்டில் இந்தியாவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் 4 கியா கார்கள்

    க்யா சிரோஸ் க்காக டிசம்பர் 30, 2024 10:31 pm அன்று kartik ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 78 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    எதிர்வரும் 2025-ம் ஆண்டில் கியா நிறுவனம் சப்-4எம் எஸ்யூவி தொடங்கி பிரீமியம் இவி -யின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு என இந்தியாவில் கலவையான மாடல்களை அறிமுகப்படுத்தும்.

    Upcoming Kia cars 2025 

    கொரிய கார் தயாரிப்பாளரான கியா நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்கள் (EV) மற்றும் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியதால் இந்தியாவில் முக்கிய கார் தயாரிப்பாளர்களில் ஒன்றாக மாறியுள்ளது. 2025 ஆண்டிலும் கியா -வுக்கு அதே போல செயல்படும் என எதிர்பார்க்கிறோம். இது EV ஃபிளாக்ஷிப் மாடலின் புதுப்பிக்கப்பட்ட பதிப்போடு புதிய ஆல்-எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துவதன் மூலம் EV வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும். வழக்கமான வாகனங்களை விரும்புவோருக்கு இரண்டு ICE மாடல்களையும் அறிமுகப்படுத்த கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கூடுதல் விவரங்களை இங்கே பார்க்கலாம்.

    புதிய கியா சைரோஸ்

    எதிர்பார்க்கப்படும் வெளியீடு: ஜனவரி 17, 2025 

    எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.9.7 லட்சம்

    Kia Syros

    சப்-4m எஸ்யூவி -களுக்கு பிரீமியம் மாற்றாக இந்த மாத தொடக்கத்தில் கியா சைரோஸ் அறிமுகமானது. பாக்ஸி வடிவமைப்புடன் அதன் ஃபிளாக்ஷிப் ஆல்-எலக்ட்ரிக் EV9 -லிருந்து வடிவமைப்புக்கான விஷயங்களை பெறுகிறது. கியா சைரோஸ் முன்பக்கம் மற்றும் பின்பக்கமாக வென்டிலேட்டட் சீட்கள் இருக்கைகள் மற்றும் டிஜிட்டல் ஏசி கண்ட்ரோல் பேனல் போன்ற பல இந்த பிரிவில் முதல் வசதிகளுடன் வருகிறது. பவர்டிரெய்னை பொறுத்தவரையில் கியா 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் 120 PS மற்றும் 172 Nm மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் 116 PS மற்றும் 250 Nm அவுட்புட்டை கொடுக்கும் இரண்டு இன்ஜின்களுடன் சைரோஸை வழங்குகிறது:

    மேலும் படிக்க:இந்தியாவில் 2025-ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் சில எலக்ட்ரிக் கார்கள்

    புதிய கியா கேரன்ஸ் EV

    எதிர்பார்க்கப்படும் அறிமுகம்: ஏப்ரல் 2025

    எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.20 லட்சம்

    kia ev

    *படம் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது

    2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் கியா கேரன்ஸ் காரின் EV பதிப்பு  அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான கார்களைப் போலவே பெரும்பாலான வசதிகளை அதன் ICE உடன் பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். இருப்பினும் கியா இரண்டு சலுகைகளையும் பிரிக்க வடிவமைப்பு மாற்றங்களை அறிமுகப்படுத்தும். கேபினை பொறுத்தவரையில் கேரன்ஸ் தற்போது வழங்குவதை விட பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். ICE வெர்ஷனில் உள்ள அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற வசதிகளையும் கியா EV -யில் சேர்க்கும் என்று எதிர்பார்க்கலாம். பல பேட்டரி பேக்குகளுடன் EV காரை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 400 கி.மீ -க்கு மேல் கிளைம்டு ரேஞ்ச் உடன் வரலாம்.

    கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட்

    எதிர்பார்க்கப்படும் வெளியீடு: ஜூன் 2025

    எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 11 லட்சம்

    2025 kia carens spyshot

    2025 ஆண்டில் அதன் கியா கேரன்ஸ் முதல் பெரிய அப்டேட்டை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சோதனைக் கார் படம் பிடிக்கப்பட்டுள்ளது மற்றும் புதுப்பிக்கப்பட்ட முன்பக்கம் மற்றும் புதிய டெயில் லேம்ப் வடிவமைப்பு போன்ற சில வெளிப்புற மாற்றங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. கேபினை பொறுத்தவரையில் பழைய மாடலில் இருப்பதை போன்ற டூயல் 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளேகளுடன் வருகிறது (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட்டுக்காகவும் மற்றொன்று டிரைவர் இன்ஸ்ட்ரூமெண்டேஷனுக்காகவும்). இது மேம்படுத்தப்படலாம். இந்தியாவில் பிரீமியம் பாதுகாப்பு வசதிகளுடன் வராத ஒரே கியா கார் கேரன்ஸ் என்பதால் அதன் பாதுகாப்பை அதிகரிக்க கியா ADAS வசதியை அறிமுகப்படுத்தலாம். தற்போதைய மாடல் 3 பவர்டிரெய்ன் தேர்வுகளுடன் வருகிறது. மேலும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட பின்னரும் இதில் எந்த மாற்றங்களும் செய்யப்பட வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கியா EV 6 ஃபேஸ்லிஃப்ட்

    எதிர்பார்க்கப்படும் அறிமுகம்: அக்டோபர் 2025 

    எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 63 லட்சம்

    kia ev6 facelift india

    இந்தியாவில் கியாவின் முதல் ஆல்-எலக்ட்ரிக் காரான EV6  ஆனது 2025 ஆண்டில் முதல் பெரிய  அப்டேட்டை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட EV6 ஏற்கனவே உலகளவில் விற்பனைக்கு வந்து விட்டது மற்றும் முன்பக்கத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேபின் மாற்றங்களில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கான புதிய வீடுகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட 12-இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும். 84 kWh -ன் பெரிய பேட்டரி பேக் மற்றும் 494 கி.மீ தூரம் என்று கிளைம் செய்யப்பட்ட ரேஞ்ச் உடன் பவர்டிரெய்னில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது., இந்தியா-ஸ்பெக் மாடலுக்காக விவரங்கள் இன்னும் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் உலகளவில் விற்பனை செய்யப்படும் கார்களில் கிடைக்கும் அனைத்து வசதிகளுடனும் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

     

    இந்தியாவில் வேறு எந்த கியா கார்களை பார்க்க விரும்புகிறீர்கள் ? கமென்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

     

    மேலும் படிக்க: 2025 ஆண்டில் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் புதிய ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் கார்கள்

     

    ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    was this article helpful ?

    Write your Comment on Kia சிரோஸ்

    explore similar கார்கள்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience