• English
  • Login / Register

2023 Tata Nexon: முன்பை விட சற்று கூடுதல் மைலேஜை கொடுக்கிறது

published on செப் 22, 2023 05:05 pm by ansh for டாடா நிக்சன்

  • 84 Views
  • ஒரு கருத்தை எழுதுக

 அப்டேட்டட் சப்காம்பாக்ட் எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது மற்றும் நான்கு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களையும் பெறுகிறது

 

2023 Tata Nexon

  • 120பிஎஸ், 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 115பிஎஸ், 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் வருகிறது.

  • டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் மேனுவல்  டிரான்ஸ்மிஷன் (AMT)  மற்றும் 7-ஸ்பீடு இரட்டை கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT) ஆகியவை அடங்கும்.

  • 10.25-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

  • ரூ.8.10 லட்சம் முதல் ரூ.15.50 லட்சம் வரை (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம்) வரை காரின் விலை இருக்கும்

நீண்ட நாட்கள் காத்திருப்புக்கு பின் டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் அதன் அனைத்து விவரங்களும் சில காலமாகவே வெளியாகி வந்தன. அதன் மாற்றங்கள் மற்றும் அம்ச மேம்பாடுகளை பற்றி ஏற்கனவே எங்களுக்குத் தெரியும் என்றாலும், டாடா சமீபத்தில் அதன் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுக்கும் உரிமை கோரப்பட்ட மைலேஜ் புள்ளிவிவரங்களை வெளிப்படுத்தியுள்ளது. ஃபேஸ்லிஃப்ட்-க்கு முந்தைய நெக்ஸானுடன் ஒப்பிடும்போது அதன் மைலேஜ் திறன் புள்ளிவிவரங்கள் எவ்வாறு உள்ளன என்பதைப் பார்ப்போம்.

சற்று அதிக மைலேஜ் கொண்டது

2023 Tata Nexon



 

 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்

     

 

டிரான்ஸ்மிஷன்

 

2023 நெக்ஸான் 

 

ஃபேஸ்லிஃப்ட்-க்கு முந்தைய நெக்ஸான்

 

வித்தியாசம்

 

5-ஸ்பீடு MT

 

லிட்டருக்கு 17.44கிமீ

-

-

 

6-ஸ்பீடு MT

 

லிட்டருக்கு 17.44கிமீ

 

லிட்டருக்கு 17.33கிமீஎல்

 

+0.11கிமீ லிட்டருக்கு

 

6- ஸ்பீடு AMT 

 

லிட்டருக்கு 17.8கிமீ

 

லிட்டருக்கு17.05கிமீ

 

+.0.13 கிமீ லிட்டருக்கு

 

7- ஸ்பீடு DCT 

 

லிட்டருக்கு 17.01 கிமீ

-

-

 

 

1.5 லிட்டர் டீசல் இன்ஜின் 

     

 

டிரான்ஸ்மிஷன் 

 

2023 நெக்ஸான் 

 

ஃபேஸ்லிஃப்ட்-க்கு முந்தைய நெக்ஸான் 

 

வித்தியாசம் 

 

6-ஸ்பீடு MT

 

லிட்டருக்கு  23.23 கிமீ 

 

லிட்டருக்கு  23.22கிமீ

 

+0.11கிமீ லிட்டருக்கு

 

6- ஸ்பீடு AMT 

 

லிட்டருக்கு  24.08 கிமீ 

 

லிட்டருக்கு  24.07கிமீ

 

+0.01கிமீ லிட்டருக்கு

புதிய நெக்ஸான் அதன் ஃபேஸ்லிஃப்ட்-க்கு முந்தைய பதிப்பின் அதே இன்ஜின் ஆப்ஷன்களை பெறுகிறது, ஆனால் அதன் டர்போ-பெட்ரோல் இன்ஜினுக்கான இரண்டு புதிய டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வருகிறது. ஒப்பிடும் போது, பெட்ரோல் இன்ஜின் சற்று அதிக மைலேஜ் தருகிறது, ஆனால் டீசல் இன்ஜினுக்கான மைலேஜ் திறனில் உள்ள வித்தியாசம் மிகக் குறைவு.

 இதையும் பார்க்கவும்: டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் பியூர் வேரியன்ட் 10 படங்களில் விளக்கப்பட்டுள்ளது

டர்போ-பெட்ரோல் யூனிட் 120PS/170Nm மற்றும் டீசல் மில் 115PS/260Nm அவுட்புட்டை வெளியே அனுப்புகிறது.  இந்த இரண்டு இன்ஜின்களும் பிஎஸ்6 2 ஆம் கட்ட விதிமுறைகளுக்கு இணங்குகின்றன மேலும் நான்கு மற்றும் இரண்டு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை பெறுகின்றன.

அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு 

2023 Tata Nexon Cabin

இந்த அப்டேட் மூலம், டாடா புதிய அம்சங்களின் தொகுப்புடன் நெக்ஸானை கொடுத்துள்ளது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேயுடன் கூடிய 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, பேடில் ஷிஃப்டர்கள் மற்றும் டச் கன்ட்ரோல்டு கிளைமேட் கன்ட்ரோல் பேனல் ஆகியவற்றை இது பெறுகிறது. வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் போன்ற பிற அம்சங்கள் முன்-பேஸ்லிஃப்ட் நெக்ஸனில் இருந்து தக்க வைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் வாகனம் கியா சோனெட்டை விட 7 அம்சங்களை அதிகமாக பெற்றுள்ளது

பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது 6 ஸ்டாண்டர்டு ஏர்பேக்ஸ்,  ABS வித் EBD எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் ஒரு பிளைண்ட் வியூ மானிட்டர் கொண்ட 360 டிகிரி கேமரா ஆகியவற்றைப் பெறுகிறது.

விலை & போட்டியாளர்கள் 

2023 Tata Nexon

2023 டாடா நெக்ஸான் ரூ. 8.10 லட்சம் முதல் ரூ. 15.50 லட்சம் (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம்) ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கியா சோனெட், ஹுண்டாய் வென்யூ, மாருதி பிரெஸ்ஸா மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 க்கு போட்டியாக இருக்கும்.

மேலும் படிக்க: டாடா நெக்ஸான் AMT

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Tata நிக்சன்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience