Tata Tiago EV Tata Tigor EV மற்றும் Tata Nexon EV ஆகிய கார்களை மார்ச் மாதத்தில் ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான தள்ளுபடியுடன் வாங்கலாம்
published on மார்ச் 11, 2024 06:37 pm by shreyash for டாடா டியாகோ இவி
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸான் EV -யின் யூனிட்களுக்கு அதிகமான சேமிப்பு கிடைக்கிறது. ஆனால் இவை நகரத்திற்கு நகரம் மாறுபடும்.
-
டாடா டிகோர் மூலம் ரூ.1.15 லட்சம் வரை ஆஃபர்கள் கிடைக்கும்.
-
டாடா டியாகோ EV -யில் ரூ.72000 வரை சேமிக்கலாம்.
-
டாடா நெக்ஸான் EV ரூ.55000 வரை தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது.
-
டாடா பன்ச் EV உடன் எந்த தள்ளுபடியும் கிடைக்காது.
-
அனைத்து ஆஃபர்களும் மார்ச் 2024 இறுதி வரை செல்லுபடியாகும்.
நீங்கள் ஒரு டாடா இவி -யை வாங்க திட்டமிட்டால் ஒரு இந்த மார்ச் மாதத்தில் டாடா நெக்ஸான் EV-க்கு ஃபிரீ ஃபேஸ்லிப்ட்க்கு முந்தைய சில விற்கப்படாத யூனிட்களில் ரூ. 1 லட்சத்திற்கும் மேல் சேமிக்கலாம். கிடைக்கும் நன்மைகளில் கிரீன் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ், பணத் தள்ளுபடிகள் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் ஆகியவை அடங்கும். பெரும்பாலான டாடா EV -களில் அவற்றின் MY23 மாடல்கள் உட்பட புதிய டாடா பன்ச் EV ஒன்றைத் தவிர மாடல் வாரியான ஆஃபர் விவரங்களைப் பார்ப்போம்.
டாடா நெக்ஸான் EV
சலுகைகள் |
தொகை |
கிரீன் போனஸ் (MY23 மட்டும்) |
ரூ.50000 வரை |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.5000 வரை |
அதிகபட்ச பலன்கள் |
ரூ.55000 வரை |
-
மேலே குறிப்பிட்டுள்ள கிரீன் போனஸை டாடா நெக்ஸான் EV -யின் MY23 யூனிட்களுடன் மட்டுமே பெற முடியும். மேலும் இந்த போனஸ் முதல் முறையாக EV -யை வாங்குபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
-
கூடுதலாக சில டாடா டீலர்ஷிப்கள் 2023 டாடா நெக்ஸான் EV பிரைம் மற்றும் டாடா நெக்ஸான் EV மேக்ஸ் ஆகியவற்றின் பழைய யூனிட்களுக்கு கணிசமான அளவு அதிக ஆஃபரை வழங்குகின்றன. மேலும் ரூ. 2 லட்சம் அல்லது அதற்கும் அதிகமான பணத் தள்ளுபடிகள் மற்றும் ரூ. 50000 வரையிலான கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் உடன் கிடைக்கும்.
-
தற்போதைய நெக்ஸான் EV ஆனது எக்சேஞ்ச் போனஸ் உடன் வரவில்லை இருப்பினும் இது ரூ. 5000 வரை கார்ப்பரேட் தள்ளுபடியைப் பெறுகிறது. இது எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் MY23 மற்றும் MY24 ஆகிய இரண்டிற்கும் கிடைக்கும்.
-
ஃபேஸ்லிஃப்டட் டாடா நெக்ஸான் EV ஆனது ரூ.14.49 லட்சம் முதல் ரூ.19.49 லட்சம் வரையிலான விலையில் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 465 கிமீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது.
மேலும் பார்க்க: பிப்ரவரி 2024 மாத சப்-4எம் எஸ்யூவி விற்பனையில் Tata Nexon மற்றும் Kia Sonet கார்களை முறியடித்தது Maruti Brezza
டாடா டியாகோ EV
சலுகைகள் |
தொகை |
|
MY23 |
MY24 |
|
கிரீன் போனஸ் |
ரூ.50000 வரை |
ரூ.25000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் |
ரூ.15000 வரை |
ரூ.10000 வரை |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.7000 வரை |
ரூ.7000 வரை |
அதிகபட்ச பலன்கள் |
ரூ.72000 வரை |
ரூ.44000 வரை |
-
டாடா டியாகோ EV -வின் MY23 யூனிட்கள்அதிக கிரீன் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் உடன் கிடைக்கும்.
-
MY24 யூனிட்களை பொறுத்தவரையில் மேலே குறிப்பிடப்பட்ட சலுகைகள் டியாகோ EV -யின் லாங் ரேஞ்ச் (LR) வேரியன்ட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
-
எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கின் மீடியம் ரேஞ்ச் (எம்ஆர்) வேரியன்ட்களுக்கான கிரீன் போனஸ் ரூ.10000 ஆக குறையும்.
-
மேலும் MY24 மாடல்களுக்கான எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.15000 ஆக குறையும்.
-
கார்ப்பரேட் தள்ளுபடி முழுவதும் ஒரே மாதிரியாக கிடைக்கும்.
-
டாடா டியாகோ EV -யின் விலை ரூ.7.99 லட்சம் முதல் ரூ.11.89 லட்சம் வரை உள்ளது. இது அதிகபட்சமாக 315 கிமீ ரேஞ்சில் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களையும் பெறுகிறது.
மேலும் பார்க்க: சில நகரங்களில் ஒரு காம்பாக்ட் எஸ்யூவி -யை வீட்டுக்கு கொண்டு வருவதற்கு 8 மாதங்கள் வரை ஆகலாம்
டாடா டிகோர் EV
சலுகைகள் |
தொகை |
பணத் தள்ளுபடி (MY23 மட்டும்) |
ரூ.75000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் (MY23 மட்டும்) |
ரூ.30000 வரை |
கார்ப்பரேட் தள்ளுபடி |
ரூ.10000 வரை |
அதிகபட்ச பலன்கள் |
ரூ.1.15 லட்சம் வரை |
-
டாடா டிகோர் EV கிரீன் போனஸை பெறவில்லை. ஆனால் இது ரூ. 75000 பணப் பலனுடன் வருகிறது.
-
இது அதிகபட்ச எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.30000 வரையிலான கார்ப்பரேட் தள்ளுபடியையும் பெறுகிறது.
-
டிகோர் EV -க்கு குறிப்பிடப்பட்டுள்ள பணத் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் MY23 யூனிட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
-
டாடாவின் எலெக்ட்ரிக் செடான் MY23 மற்றும் MY24 ஆகிய இரண்டு யூனிட்களிலும் செல்லுபடியாகும் ரூ.10000 என்ற மிக அதிகமான கார்ப்பரேட் தள்ளுபடியைப் பெறுகிறது.
-
டாடா டிகோர் EV விலை ரூ.12.49 லட்சம் முதல் ரூ.13.75 லட்சம் வரை உள்ளது. இந்த டாடா EV ஆனது ஒரு பேட்டரி பேக்கை மட்டுமே வழங்குகிறது மேலும் இது 315 கிமீ தூரம் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்புகள்
-
தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட் மாநிலம் மற்றும் நகரத்தைப் பொறுத்து தள்ளுபடிகள் மாறுபடலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள டாடா டீலரை தொடர்பு கொள்ளவும்.
-
கார்ப்பரேட் தள்ளுபடிகள் வெவ்வேறு வேரியன்ட்களை பொறுத்து மாறுபடலாம்.
-
குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் -க்கான விலை விவரங்கள் ஆகும்.
மேலும் படிக்க: டாடா டியாகோ EV ஆட்டோமெட்டிக்