டாடா Safari Bandipur பதிப்பின் முழுமையான விவரங்கள் இங்கே
published on ஜனவரி 17, 2025 08:13 pm by dipan for டாடா சாஃபாரி
- 27 Views
- ஒரு கருத்தை எழுதுக
இயந்திர ரீதியாக சஃபாரியில் எந்த வித மாற்றங்களும் இல்லை. மாறாக பந்திப்பூர் பதிப்பு ஒரு புதிய கலர் தீம் மற்றும் சில கலர் எலமென்ட்களை கொண்டுள்ளது.
2025 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்ட டாடா சஃபாரி பந்திப்பூர் எடிஷனை காட்சிக்கு வைத்துள்ளது. புதிய பந்திப்பூர் பதிப்பு நிறுத்தப்பட்ட காசிரங்கா பதிப்பில் இருந்து நிறைய விஷயங்களை பெற்றுள்ளது. வழக்கமான சஃபாரியின் அதே இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. டாடா சஃபாரி பந்திப்பூர் பதிப்பில் புதிதாக உள்ள அனைத்தும் இங்கே:
இதை வித்தியாசப்படுத்தி காட்டுவது எது ?
நிறுத்தப்பட்ட காசிரங்கா பதிப்பைப் போலவே சஃபாரி பந்திப்பூர் பதிப்பும் டெயில்கேட்டில் உள்ள சஃபாரி பேட்ஜில் பிளாக்-அவுட் எலமென்ட்களுடன் வருகிறது. இது முன் ஃபெண்டர்களில் பந்திப்பூர் பதிப்பு பேட்ஜ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஹலைட் ஆக பிளாக் ரூஃப் உடன் கூடிய புதிய கலர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. இது சஃபாரியின் வழக்கமான டிரிம்களுடன் கிடைக்காது.
உள்ளே சஃபாரி பந்திப்பூர் பதிப்பில் வழக்கமான சஃபாரியின் டூயல்-டோன் பிளாக் அண்ட் ஒயிட் தீமுடன் ஒப்பிடும் போது வித்தியாசமான தீமுடன் வருகிறது. இருக்கைகளும் கூடுதலாக வித்தியாசப்படுத்தி காட்டும் வகையில் பெய்ஜ் கலர் தீம் மற்றும் ஹெட்ரெஸ்ட்களில் பந்திப்பூர் எடிஷன் என்ற எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. வேறு எந்த வித மாற்றங்களும் இல்லை.
பந்திப்பூரின் சிறப்புகள் என்ன?
பந்திப்பூர் என்பது கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ஊட்டிக்கு மிக அருகில் அமைந்துள்ள ஒரு தேசிய பூங்கா ஆகும். 2018 புலிகள் கணக்கெடுப்பின்படி உத்தரகாண்டில் உள்ள ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவிற்குப் பிறகு பந்திப்பூர் தேசியப் பூங்காவில்தான் நாட்டிலேயே இரண்டாவது அதிக புலிகள் வசிக்கும் இடமாகும்.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
12.3 இன்ச் டச் ஸ்கிரீன், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 10-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவற்றுடன் இந்த காரில் எந்த புதிய வசதிகளும் செய்யப்படவில்லை. பவர்டு டெயில்கேட், டூயல் ஜோன் ஆட்டோமெட்டிக் ஏசி, பனோரமிக் சன்ரூஃப், காற்றோட்டமான முன் மற்றும் இரண்டாவது வரிசை இருக்கைகள் (6 இருக்கைகள் கொண்ட பதிப்பில்), ஏர் ஃபியூரிபையர், மெமரி மற்றும் பவர்டு ஆப்ஷன் உடன் கூடிய 6-வே பவர்-அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் சீட் பாஸ் மோடு உடன் கூடிய 4-வழி பவர்டு கோ-டிரைவர் சீட் ஆகியவை கூடுதல் வசதிகளாகும்.
பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை உள்ளன.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
டாடா சஃபாரி 2-லிட்டர் டீசல் இன்ஜின் உடன் வருகிறது. அதன் விரிவான விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் |
2 லிட்டர் டீசல் |
பவர் |
170 PS |
டார்க் |
350 என்எம் |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT / 6-ஸ்பீடு AT |
டிரைவ்டிரெய்ன் |
ஃபிரன்ட் வீல் டிரைவ் (FWD) |
எஸ்யூவி -ன் பந்திப்பூர் பதிப்பில் அதே இன்ஜின் ஆப்ஷன் உடன் வழங்கப்படுகிறது. மற்றும் வழக்கமான மாடல் அதே போல டியூனிங் செய்யப்பட்டுள்ளது.
டாடா சஃபாரி: விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா சஃபாரியின் விலை ரூ.15.49 லட்சம் முதல் ரூ.26.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், புது டெல்லி) வரை இருக்கும். பந்திப்பூர் பதிப்பு வழக்கமான மாடல்களை விட சற்று கூடுதல் விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா சஃபாரி எம்ஜி ஹெக்டர் பிளஸ், ஹூண்டாய் அல்கஸார் மற்றும் மஹிந்திரா XUV700 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.