Tata Punch: புதிய வேரியன்ட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன
published on செப் 17, 2024 07:03 pm by dipan for டாடா பன்ச்
- 67 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ரியர் ஏசி வென்ட்கள் ஆகியவை இந்த புதிய அப்டேட் மூலமாக பன்ச் -ல் சேர்க்கப்பட்டுள்ளன.
-
2024 டாடா பன்ச் ரூ.6.13 லட்சம் முதல் ரூ.9.90 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
இது மிட்-ஸ்பெக் ப்யூர்(O), அட்வென்ச்சர் எஸ் மற்றும் அட்வென்ச்சர் பிளஸ் எஸ் போன்ற புதிய வேரியன்ட்களை அறிமுகப்படுத்துகிறது.
-
பியூர் ரிதம், அக்கம்பிளிஸ்டு, அக்கம்பிளிஸ்டு S மற்றும் கிரியேட்டிவ் ஃபிளாக்ஷிப் வேரியன்ட்கள் இப்போது விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளன.
-
ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் 17-இன்ச் அலாய் வீல்களுடன் எக்ஸ்ட்டீரியர் வடிவமைப்பு அப்படியே உள்ளது.
-
இது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களுடன் அதே 1.2 லிட்டர் இன்ஜினுடன் வழங்கப்படுகிறது.
2024 டாடா பன்ச் கார் ஆனது இந்தியாவில் ரூ.6.13 லட்சம் முதல் ரூ.9.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டட் மாடல் புதிய வேரியன்ட்களை அறிமுகப்படுத்துகிறது மற்றும் சில பழைய வேரியன்ட்கள் விற்பனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அப்டேட்டட் விலை பட்டியல் பின்வருமாறு:
வேரியன்ட்கள் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
1.2-லிட்டர் N/A பெட்ரோல் உடன் 5-ஸ்பீடு MT |
|||
பியூர் |
ரூ.6 லட்சம் |
ரூ.6.13 லட்சம் |
+ரூ. 13,000 |
பியூர் ரிதம் |
ரூ.6.38 லட்சம் |
நிறுத்தப்பட்டது |
– |
பியூர்(O) |
– |
ரூ.6.70 லட்சம் |
புதிய வேரியன்ட் |
அட்வென்ச்சர் |
ரூ.7 லட்சம் |
ரூ.7 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
அட்வென்ச்சர் ரிதம் |
ரூ.7.35 லட்சம் |
ரூ.7.35 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
அட்வென்ச்சர் எஸ் |
– |
ரூ.7.60 லட்சம் |
புதிய வேரியன்ட் |
அட்வென்ச்சர் பிளஸ் எஸ் |
– |
ரூ.8.10 லட்சம் |
புதிய வேரியன்ட் |
அக்கம்பிளிஸ்டு |
ரூ.7.85 லட்சம் |
நிறுத்தப்பட்டது |
– |
அக்கம்பிளிஸ்டு பிளஸ் |
ரூ. 8.25 லட்சம் (முன்பு அக்கம்பிளிஸ்டு டாசில் என்று அழைக்கப்பட்டது) |
ரூ.8.30 லட்சம் |
+ரூ. 5,000 |
அக்கம்பிளிஸ்டு எஸ் |
ரூ.8.35 லட்சம் |
நிறுத்தப்பட்டது |
– |
அக்கம்பிளிஸ்டு பிளஸ் எஸ் |
ரூ. 8.75 லட்சம் (முன்பு அக்கம்பிளிஸ்டு டாசில் எஸ் என்று அழைக்கப்பட்டது) |
ரூ.8.80 லட்சம் |
+ரூ. 5,000 |
கிரியேட்டிவ் பிளஸ் |
ரூ. 8.85 லட்சம் (முன்பு கிரியேட்டிவ் என்று அழைக்கப்பட்டது) |
ரூ.9 லட்சம் |
+ரூ. 15,000 |
கிரியேட்டிவ் பிளஸ் எஸ் |
ரூ. 9.30 லட்சம் (முன்பு கிரியேட்டிவ் எஸ் என்று அழைக்கப்பட்டது) |
ரூ.9.45 லட்சம் |
+ரூ. 15,000 |
கிரியேட்டிவ் ஃபிளாக்ஷிப் |
ரூ.9.60 லட்சம் |
நிறுத்தப்பட்டது |
– |
5-ஸ்பீடு AMT உடன் 1.2-லிட்டர் N/A பெட்ரோல் |
|||
அட்வென்ச்சர் |
ரூ.7.60 லட்சம் |
ரூ.7.60 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
அட்வென்ச்சர் ரிதம் |
ரூ.7.95 லட்சம் |
ரூ.7.95 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
அட்வென்ச்சர் எஸ் |
– |
ரூ.8.20 லட்சம் |
புதிய வேரியன்ட் |
அட்வென்ச்சர் பிளஸ் எஸ் |
– |
ரூ.8.70 லட்சம் |
புதிய வேரியன்ட் |
அக்கம்பிளிஸ்டு |
ரூ.8.45 லட்சம் |
நிறுத்தப்பட்டது |
– |
அக்கம்பிளிஸ்டு பிளஸ் |
ரூ. 8.85 லட்சம் (முன்பு அக்கம்பிளிஸ்டு டாசில் என்று அழைக்கப்பட்டது) |
ரூ.8.90 லட்சம் |
+ரூ. 5,000 |
அக்கம்பிளிஸ்டு எஸ் |
ரூ.8.95 லட்சம் |
நிறுத்தப்பட்டது |
– |
அக்கம்பிளிஸ்டு பிளஸ் எஸ் |
ரூ. 9.35 லட்சம் (முன்பு அக்கம்பிளிஸ்டு டாசில் எஸ் என்று அழைக்கப்பட்டது) |
ரூ.9.40 லட்சம் |
+ரூ. 5,000 |
கிரியேட்டிவ் பிளஸ் |
ரூ. 9.45 லட்சம் (முன்பு கிரியேட்டிவ் என்று அழைக்கப்பட்டது) |
ரூ.9.60 லட்சம் |
+ரூ. 15,000 |
கிரியேட்டிவ் பிளஸ் எஸ் |
ரூ.9.90 லட்சம் (முன்பு கிரியேட்டிவ் எஸ் என்று அழைக்கப்பட்டது) |
ரூ.10 லட்சம் |
+ரூ. 10,000 |
கிரியேட்டிவ் ஃபிளாக்ஷிப் |
ரூ.10.20 லட்சம் |
நிறுத்தப்பட்டது |
– |
1.2-லிட்டர் N/A பெட்ரோல்+CNG உடன் 5-ஸ்பீடு MT |
|||
பியூர் |
ரூ.7.23 லட்சம் |
ரூ.7.23 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
அட்வென்ச்சர் |
ரூ.7.95 லட்சம் |
ரூ.7.95 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
அட்வென்ச்சர் ரிதம் |
ரூ.8.30 லட்சம் |
ரூ.8.30 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
அட்வென்ச்சர் எஸ் |
– |
ரூ.8.55 லட்சம் |
புதிய வேரியன்ட் |
அட்வென்ச்சர் பிளஸ் எஸ் |
– |
ரூ.9.05 லட்சம் |
புதிய வேரியன்ட் |
அக்கம்பிளிஸ்டு |
ரூ.8.95 லட்சம் |
நிறுத்தப்பட்டது |
– |
அக்கம்பிளிஸ்டு பிளஸ் |
– |
ரூ.9.40 லட்சம் |
புதிய வேரியன்ட் |
அக்கம்பிளிஸ்டு பிளஸ் எஸ் |
ரூ. 9.85 லட்சம் (முன்பு அக்கம்பிளிஸ்டு டாசில் எஸ் என்று அழைக்கப்பட்டது) |
ரூ.9.90 லட்சம் |
+ரூ. 5,000 |
பன்ச் -ன் AMT மற்றும் CNG வேரியன்ட்களின் பேஸ் வேரியன்ட்டின் விலையில் மாற்றமில்லை. இருப்பினும் மற்ற வேரியன்ட்களுக்கு ரூ.15,000 வரை விலை உயர்வு உள்ளது. மாறாக பெட்ரோல்-மேனுவல் ரேஞ்சின் பேஸ் வேரியன்ட் ரூ.13,000 உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற வேரியன்ட்களின் விலை ரூ.15,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
2024 டாடா பன்ச்: புதியது என்ன?
2024 டாடா பன்ச் -ன் அப்டேட்டில் பல்வேறு புதிய விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய மாடலில் முன்னர் இருந்த 7-இன்ச் ஸ்கிரீன்கள் பதிலாக இப்போது பெரிய 10.25-இன்ச் டச் ஸ்க்ரீன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜர் மற்றும் பின்புற ஏசி வென்ட்களுடன் வருகிறது. கூடுதலாக ஒரு புதிய சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்ட் சேர்க்கப்பட்டுள்ளது.
ஏசி வென்ட்களை சுற்றியுள்ள பாடி கலர்டு டிரிம் சில்வர் நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. சீட்களில் இன்னும் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி இருந்தாலும் ஃபேப்ரிக் டிஸைன் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.
அட்டாமிக் ஆரஞ்சு எக்ஸ்ட்டீரியர் கலர் ஆப்ஷன்கள் மற்றும் எர்த்லி ப்ரோன்ஸ் நிறத்தின் டூயல்-டோன் இட்டரேஷன்கள் விற்பனையில் நிறுத்தப்பட்டுள்ளன. கலிப்சோ ரெட் கலர் இப்போது பாடி கலர்டு ஷேடு உடன் ஒரே ஒரு கலர் ஷேடில் கிடைக்கிறது. முன்னர் வழங்கப்பட்ட பிற வெளிப்புற ஷேடுகளில் பன்ச் -ன் பிளேட்டில் மாறாமல் இருக்கும்.
வேரியன்ட் வரிசையும் மாற்றப்பட்டுள்ளது. புதிய மிட்-ஸ்பெக் ப்யூர்(O), அட்வென்ச்சர் எஸ் மற்றும் அட்வென்ச்சர் பிளஸ் எஸ் வேரியன்ட்கள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும், முந்தைய பியூர் ரிதம், அக்கம்பிளிஸ்டு, அக்கம்பிளிஸ்டு S மற்றும் கிரியேட்டிவ் ஃபிளாக்ஷிப் வேரியன்ட்கள் இனி கிடைக்காது.
மேலும் படிக்க: வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சில டாடா கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது
2024 டாடா பன்ச்: பிற வசதிகள் மற்றும் பாதுகாப்பு
2024 டாடா பன்ச் பல எளிமையான வசதிகளுடன் வருகிறது. உள்ளே, இது 7-இன்ச் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோமேட்டிக் ஏர் கண்டிஷனிங் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், ரெயின் சென்ஸிங் வைப்பர்கள், கனெக்டட் கார் டெக்னாலஜி மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
பாதுகாப்பிற்காக பன்ச் டூயல் முன் ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ரோல் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 2021 ஆண்டில் குளோபல் NCAP (புதிய கார் மதிப்பீட்டு திட்டம்) மூலம் பன்ச் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டது. அங்கு அது 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது.
2024 டாடா பன்ச்: வெளிப்புறம்
2024 டாடா பன்ச் முன்பு இருந்த அதே வெளிப்புற வடிவமைப்பை பராமரிக்கிறது. இது ஆலசன் புரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் ஃபாக் லைட்ஸ், கனெக்டட் LED DRL -களுடன் தொடர்கிறது. கீழ் பம்பர் டிரைஸ்டார் எலமென்ட்களுடன் பிளாக் நிற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பக்கவாட்டில் நீங்கள் பெரிய டோர் ஹேண்டில்கள் மற்றும் அதே 17-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்களை பார்க்க முடியும். இது ஹாலோஜன் டெயில் லைட்ஸ் மற்றும் பின்புற வைப்பர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க: இவை ஆகஸ்ட் 2024 -ல் சிறந்த விற்பனையான முதல் 10 கார்களின் பிராண்டுகளாகும்
2024 டாடா பன்ச்: பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
டாடா பன்ச் 86 PS மற்றும் 113 Nm அவுட்புட்டை கொடுக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT (ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) உடன் இருக்கலாம். சிஎன்ஜி பதிப்பும் கிடைக்கும். ஆனால் இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வருகிறது.
2024 டாடா பன்ச்: போட்டியாளர்கள்
2024 டாடா பன்ச் ஆனது ஹூண்டாய் எக்ஸ்டர், சிட்ரோன் சி3, மற்றும் மாருதி இக்னிஸ் ஆகிய கார்களுடன் உடன் போட்டியிடுகிறது. இதன் விலை காரணமாக நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: டாடா பன்ச் ஏஎம்டி
0 out of 0 found this helpful