• English
  • Login / Register

வெளியீடு நெருங்குவதால் டீலர்ஷிப்களை வந்தடையும் ​​Tata Punch EV கார்கள்

டாடா பன்ச் EV க்காக ஜனவரி 12, 2024 09:20 pm அன்று ansh ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 345 Views
  • ஒரு கருத்தை எழுதுக

பன்ச் EV -யின் பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச் ஆகிய விவரங்களை டாடா வெளியிடவில்லை. இது 500 கி.மீக்கு மேல் கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கும் என தெரிகின்றது.

Tata Punch EV Reaches Dealerships

  • நெக்ஸான் EV -யை போன்றே முழு அகல LED DRL -கள், செங்குத்தாக வைக்கப்பட்டுள்ள LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் பெரிய முன்பக்க பம்பர் ஆகியவற்றைக் கொண்டதாக இந்த காரின் முன் பக்கம் இருக்கின்றது.

  • கேபினில் டூயல்-டோன் தீம், டாடாவின் புதிய ஸ்டீயரிங் வீல் ஒளிரும் லோகோ மற்றும் டச் பேஸ்டு கிளைமேட் கன்ட்ரோல் பேனல் ஆகியவற்றை பார்க்க முடிகின்றது.

  • டூயல் 10.25 இன்ச் டிஸ்ப்ளேக்கள், ஆட்டோமெட்டிக்ட் கிளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட்ட முன் இருக்கைகள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகிய வசதிகள் இதில் உள்ளன.

  • விலை ரூ.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா பன்ச் EV அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மற்றும் முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது. இப்போது, டாடா -வின் சமீபத்திய எலக்ட்ரிக் கார் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே டீலர்ஷிப்களை அடையத் தொடங்கியுள்ளது. டாடா பன்ச் EV -யை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் விஷயங்களும் இங்கே.

நவீன வடிவமைப்பு

Tata Punch EV

பன்ச் EV ஆனது டாடா பன்ச் ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் ) காரை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் அதன் வடிவமைப்பு குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டது. பன்ச் EV ஆனது டாடா நெக்ஸான் இவி -யில் இருந்து அதன் வடிவமைப்புக்கான உத்வேகத்தை பெற்றுள்ளது. இதில் போனட்-ஸ்பானிங் LED DRLகள், செங்குத்தான LED புரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் ஏரோடைனமிக் அலாய் வீல்கள் ஆகியவை அடங்கும். பின்புற பக்கம் ஒரு பெரிய பம்பர், ஸ்கிட் பிளேட் மற்றும் அதே டெயில் லைட்களுடன் பெட்ரோலில் இயங்கும் பன்ச் போன்றே உள்ளது.

மேலும் படிக்க: Tata Punch EV டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேஸ் மற்றும் புதுப்பிக்கப்பட்ட சென்டர் கன்சோலை பெறுகின்றது

 உள்ளே, பன்ச் EV ஆனது நெக்ஸான் EV போன்றே டச்களை பெறுகிறது. கேபினில் டாடாவின் புதிய ஸ்டீயரிங் வீல் இல்லுமினேட்டட் டாடா லோகோ, டச்-பேஸ்டு கிளைமேட் கன்ட்ரோல் பேனல் மற்றும் டூயல்-டோன் தீம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

வசதிகள்

Tata Punch EV Steering Wheel

டீஸர்கள் மற்றும் டீலர்ஷிப் படங்களின் அடிப்படையில், பன்ச் EV டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே), டச் பேஸ்டு பேனலுடன் ஆட்டோமெட்டிக்ட் கிளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட்ட முன் இருக்கைகள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றை பெறும். இது டாடாவின் Arcade.ev வசதியைக் கொண்டிருக்கும், இதன் மூலமாக இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளேவில் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களைப் பார்க்கலாம்.

பாதுகாப்பு அம்சங்களில் 6 ஏர்பேக்குகள், EBD உடன் ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள், பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவை உள்ளன.

பவர்டிரெய்ன் விவரங்கள்

Tata Punch EV

பன்ச் EV -யில் இரண்டு வகையான பேட்டரி பேக் அளவுகள் கொடுக்கப்படும். ஆனால் அதைப் பற்றிய சரியான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இது டாடாவின் புதிய Acti.ev கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்டது, மேலும் 500 கிமீக்கு மேல் கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கலாம். இது DC ஃபாஸ்ட் சார்ஜிங் உட்பட பல சார்ஜிங் ஆப்ஷன்களையும் கொண்டிருக்கலாம்.

விலை & போட்டியாளர்கள்

Tata Punch EV

டாடா பன்ச் EV -யின் விலை ரூ. 12 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சிட்ரோன் eC3 காருக்கு போட்டியாக இருக்கும். மேலும் இது டாடா டியாகோ EV மற்றும் எம்ஜி காமெட் இவி ஆகியவற்றுக்கு பிரீமியமான மாற்றாக இருக்கும்

பட ஆதாரம்

மேலும் படிக்க: டாடா பன்ச் AMT

was this article helpful ?

Write your Comment on Tata பன்ச் EV

explore மேலும் on டாடா பன்ச் இவி

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா xev 4e
    மஹிந்திரா xev 4e
    Rs.13 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி க்யூ6 இ-ட்ரான்
    ஆடி க்யூ6 இ-ட்ரான்
    Rs.1 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வேரியன்ட்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி e vitara
    மாருதி e vitara
    Rs.17 - 22.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience