Tata Punch EV விற்பனை நாளை தொடங்குகின்றது… எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் இங்கே !
டாடா பன்ச் EV ஆனது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் 400 கிமீ வரை ரேஞ்சை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
டாடா பன்ச் EV -க்கான முன்பதிவுகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.
-
பன்ச் EV ஆனது டாடா நெக்ஸான் EV-யை போன்ற முன்பக்க வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
-
டூயல் 10.25 இன்ச் டிஸ்ப்ளேக்கள், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற அம்சங்களை பெறுகிறது.
-
புதிய Acti.EV தளத்தை அடிப்படையாகக் கொண்ட முதல் டாடா EV -யாக பன்ச் EV உள்ளது.
-
இதன் விலை ரூ.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா பன்ச் EV அறிமுகமாகி சில நாள்கள் கடந்து விட்ட நிலையில் டாடா நிறுவனம் நாளை இதன் விலை விவரங்களை வெளியிடவுள்ளது. டாடா இந்த காரில் உள்ள புதிய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகள் பற்றிய விவரங்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளது, மேலும் இப்போது இந்த மைக்ரோ எலக்ட்ரிக் எஸ்யூ -வியின் பேட்டரி மற்றும் பவர்டிரெய்ன் விவரங்களும் எங்களுக்கு கிடைத்துள்ளன.
புதிய வெளிப்புற வடிவமைப்பு
Tata Punch EV ஆனது வழக்கமான பன்ச் -லிருந்து வேறுபட்டு தனித்துவமான ஸ்டைலிங்குடன் வரும். இது அதன் மூத்த உடன்பிறப்பான டாடா நெக்ஸான் EV -யிலிருந்து அதன் வடிவமைப்புக்கான உத்வேகத்தை பெறுகிறது. முன்பக்கத்தில் இது போனட் முழுவதும் கொடுக்கப்பட்டுள்ள்ள கனெக்டட் LED DRL -கள், செங்குத்தாக வைக்கப்பட்டுள்ள LED ஹெட்லைட்கள் மற்றும் ஒரு பெரிய பம்பர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. பக்கவாட்டில், பன்ச் EV ஆனது புதிய ஏரோடைனமிக்-பாணியில் அலாய் வீல்களை பெறுகிறது, அதே சமயம் எலக்ட்ரிக் மைக்ரோ எஸ்யூவி -யின் பின்புறம் புதிய சில்வர் ஸ்கிட் பிளேட்டை தவிர்த்து அதன் ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) கார்களை போலவே இருக்கிறது,
இதையும் பார்க்கவும்: 2024 மஹிந்திரா XUV400 Pro vs Tata Nexon EV: எதில் நல்ல கேபின் உள்ளது?
புதுப்பிக்கப்பட்ட கேபின்
வழக்கமான ICE மாடலில் பன்ச் EV இன் கேபினை டாடா புதுப்பித்துள்ளது மற்றும் டச்-பேஸ்டு கிளைமேட் கன்ட்ரோல் பேனல் கூடிய புதிய சென்டர் கன்சோல் மற்றும் ஒளிரக்கூடிய டாடா லோகோவுடன் கூடிய புதிய 2-ஸ்போக் ஸ்டீயரிங் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. பன்ச் EV ஆனது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய பெரிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவருக்கான 10.25-இன்ச் ஆல் டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஏர் ப்யூரிஃபையர், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் சிங்கிள் பேனல் சன்ரூஃப் ஆகியவற்றை இதில் டாடா கொடுத்துள்ளது.
6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
இதையும் பார்க்கவும்: 6-சீட்டர் வேரியன்ட்ஸ் மற்றும் பல அம்சங்களை பெறும் 2024 Mahindra XUV700 கார்… விலை இப்போது ரூ.13.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
பேட்டரி பேக் பவர்டிரெய்ன்
சமீபத்தில் வெளியான தகவலின் அடிப்படையில், டாடா பன்ச் EV இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்கப்படும், அவற்றின் விவரங்கள் அட்டவணையில் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:
ஒவ்வொரு பேட்டரி பேக்கிற்கான டிரைவிங் ரேஞ்ச் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இது 400 கிமீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா பன்ச் EV -யின் விலை ரூ.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சிட்ரோன் eC3 உடன் பன்ச் EV போட்டியிடும். டாடா டியாகோ EV மற்றும் எம்ஜி காமெட் இவி ஆகிய கார்களுக்கும் பிரீமியம் மாற்றாக இருக்கும்.
மேலும் படிக்க: டாடா பன்ச் AMT