சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

சோதனை செய்யப்படும் போது தென்பட்ட டாடா பன்ச் EV... புத்தம் புதிய விவரங்கள் தெரிய வருகின்றன

published on செப் 29, 2023 02:27 pm by ansh for டாடா பன்ச் EV

சமீபத்திய புகைப்படங்கள் மூலமாக, நெக்ஸானை போலவே பன்ச் EV -ம் புதிய 10.25 இன்ச் டச் ஸ்க்ரீனை பெற்றுள்ளதாகத் தெரிகிறது

  • அடுத்த டாடா எலெக்ட்ரிக் மாடலாக பன்ச் EV -யாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • எக்ஸ்டீரியர் எக்ஸ்டீரியர் ஸ்பை காட்சி நெக்ஸான் போன்ற ஏரோடைனமிக் அலாய் வீல்களை இருக்கலாம் என தெரிகிறது.

  • கேபின் பெரும்பாலும் பெரிய டச் ஸ்க்ரீன் மற்றும் டாடாவின் புதிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

  • இது 350km வரையிலான பயணதூர வரம்புடன் இரு பேட்டரி பேக் ஆப்ஷன்களையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது .

  • டாடா அதன் விலையை ரூ 12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் நிர்ணயிக்கலாம்.

டாடா பன்ச் EV மீண்டும் ஒருமுறை சோதனையின் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது, இன்னும் கார் மறைக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. எலெக்ட்ரிக் மைக்ரோ எஸ்யூவி சில காலமாக உற்பத்தி நிலையில் இருந்தது, மேலும் அதன் சமீபத்திய ஸ்பை ஷாட்கள் எக்ஸ்டீரியர் மற்றும் உட்புற வடிவமைப்பின் புதிய விவரங்களை வழங்குகின்றன. என்ன தெரிய வருகிறது என்பதைப் பற்றிய விவரம் இதோ உங்களுக்காக:

புதிய அலாய் வீல்கள்

முந்தைய ஸ்பை ஷாட்களில், பன்ச் EV ஐந்து-ஸ்போக் அலாய் சக்கரங்களுடன் காணப்பட்டது, ஆனால் இதில் , அலாய் வீல் வடிவமைப்பு ஃபேஸ்லிஃப்டட் டாடா நெக்ஸான் EV -யிலிருந்து பெறப்பட்டதாகத் தெரிகிறது. அந்த "எலெக்ட்ரிக் வாகன" தோற்றத்திற்காக பன்ச் EV அதன் உடன்பிறப்பிடமிருந்து இந்த ஏரோடைனமிக் அலாயை பெற்றிருக்கலாம் .

மேலும் படிக்க: டாடா டியாகோ EV முதலாம் ஆண்டு மீள்பார்வை

மீதமுள்ள வடிவமைப்பு பன்ச் -ன் ICE (இன்டர்னல் கம்பசன் என்ஜின்) வெர்ஷனை போன்றது. இது ஏற்கனவே பானெட் எட்ஜில் மெல்லிய DRL -களை பெறுகிறது, இதில் பெரிய LED முகப்பு விளக்குகள் சங்கி பம்பரில் வைக்கப்பட்டுள்ளன. இதுவரை வெளியான ஸ்பை காட்சிகளின் அடிப்படையில், இது கிரில் மற்றும் ஏர் டேமிற்கான புதிய வடிவமைப்பை பெறுவதாகத் தெரிகிறது, மேலும் டாடா சில EV -க்கான தனிப்பட்ட ப்ளூ டிஸைன் எலமென்ட்கள் சேர்க்கப்படலாம்..

பெரிய டச் ஸ்க்ரீன்

மற்றொரு சாத்தியமான கூடுதல் அம்சமாக ஒரு பெரிய டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு உள்ளது, இது ஸ்பை ஷாட்களில் இருந்து 10.25 இன்ச் யூனிட்டாஅக இருக்கும் என தெரிகிறது. பேக்லிட் டாடா லோகோவுடன் கூடிய புதிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீலையும் பன்ச் EV பெறும் என்பதை முந்தைய படங்கள் உறுதிப்படுத்தின.

செமி டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, அதிகபட்சம் 6 ஏர்பேக்குகள், EBDயுடன் கூடிய ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (ESP), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), ரியர்வியூ கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

பேட்டரி பேக் ரேன்ஜ்

டாடாவின் மற்ற EV தயாரிப்புகளைப் போலவே, பன்ச் EV -யும் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வரக்கூடும், இது சுமார் 300 கி.மீ மற்றும் 350 கி.மீ ரேன்ஜ் உடன் இருக்கலாம். இது பெரும்பாலும் மல்டி லெவல் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கை பெறும். டாடா பன்ச் EV நெக்ஸான் EV -க்கு கீழே இடம் பெற்றிருக்கும். அதன் மின்சார மோட்டார் பற்றிய விவரங்கள் இன்னும் இல்லை, ஆனால் இது பெரும்பாலும் 75PS முதல் 100PS வரை ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடும்.

விலை போட்டியாளர்கள்

டாடா பன்ச் EV இந்த ஆண்டுக்குள்ளாக அல்லது 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் மற்றும் ரூ.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது . இது டாடா டியாகோ EV மற்றும் எம்ஜி கோமெட் EV -க்கு மிகவும் பிரீமியம் மாற்றாக இருக்கும் அதே நேரத்தில் சிட்ரோன் eC3 க்கு நேரடி போட்டியாக இருக்கும்.
படங்களின் ஆதாரம்

இதையும் பாருங்கள்: பன்ச் AMT

a
வெளியிட்டவர்

ansh

  • 45 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது டாடா பன்ச் EV

Read Full News

explore மேலும் on டாடா பன்ச் ev

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.10.99 - 15.49 லட்சம்*
Rs.14.49 - 19.49 லட்சம்*
Rs.7.99 - 11.89 லட்சம்*
Rs.6.99 - 9.40 லட்சம்*
Rs.60.95 - 65.95 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை