Tata Punch EV டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேஸ் மற்றும் புதுப்பிக்கப்பட்ட சென்டர் கன்சோலை பெறுகின்றது
published on ஜனவரி 12, 2024 04:52 pm by anonymous for டாடா பன்ச் EV
- 37 Views
- ஒரு கருத்தை எழுதுக
பன்ச் EV ஆனது நெக்ஸான் EV -யிலிருந்து சில அம்சங்களைப் பெற்றுள்ளது.
டாடா பன்ச் EV அறிமுகம் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே டாடா காரின் மேலும் சில படங்களை வெளியிட்டுள்ளது. இவை கேபினை பற்றிய ஒரு பார்வையை அளித்துள்ளன. முதல் படத்தொகுப்பில் இருந்து, புதிய வடிவிலான டாஷ்போர்டையும், பெரிய 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தையும் பார்க்கலாம். புதிய நெக்ஸானிலிருந்து பெறப்பட்ட புதிய டச்-சென்ஸிட்டிவ் ஏசி கண்ட்ரோல் பேனலுடன் புதுப்பிக்கப்பட்ட சென்டர் கன்சோலையும் படங்கள் காட்டுகின்றன. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா நெக்ஸான் EV-யை போலவே, இது புதிய 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீலையும், ஒளிரும் டாடா லோகோவுடன், சில செயல்பாடுகளுக்கான டச்-பேஸ்டு கன்ட்ரோல்களையும் கொண்டுள்ளது.
படங்கள் பன்ச் EV -யின் புதிய டூயல்-டோன் செட்டப்பை காட்டுகின்றன. இருப்பினும், நெக்ஸானை போலவே, தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்டின் அடிப்படையில் டாடா வெவ்வேறு இன்ட்டீரியர் தீம்களை வழங்கக்கூடும்.
மேலும் பார்க்கவும்: புதிய டாஷ்போர்டு மற்றும் பெரிய டச்ஸ்கிரீன் உடன் Mahindra XUV400 Pro வேரியன்ட்கள் அறிமுகம்… விலை ரூ.15.49 லட்சத்தில் தொடங்குகிறது
அதிகாரப்பூர்வமான இந்த காரின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், பன்ச் EV ஆனது புதிய Acti.EV இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது நமக்கு தெரிந்த விஷயம். மேலும் விவரங்களுக்கு, எங்கள் முந்தைய கட்டுரையை பாருங்கள்.
டாடா பன்ச் EV ஜனவரி 2024 இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம், இதன் விலை சுமார் ரூ.12 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும். இது சிட்ரோன் eC3 -க்கு போட்டியாக இருக்கும். மேலும் அதன் உடன்பிறப்புகளான டாடா டிகோர் / டியாகோ இவி ஆகிய கார்களுக்கு மாற்றாக இருக்கும்.
மேலும் படிக்க: டாடா பன்ச் AMT