புதிய டாஷ்போர்டு மற்றும் பெரிய டச்ஸ்கிரீன் உடன் Mahindra XUV400 Pro வேரியன்ட்கள் அறிமுகம்… விலை ரூ.15.49 லட்சத்தில் தொடங்குகிறது
published on ஜனவரி 11, 2024 05:39 pm by rohit for மஹிந்திரா xuv400 ev
- 302 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய வேரியன்ட்களின் விலை ரூ.15.49 லட்சம் முதல் ரூ.17.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி).
-
மஹிந்திரா XUV400 காரை 2023 ஜனவரி -யில் மீண்டும் அறிமுகப்படுத்தியது.
-
XUV400 இப்போது ப்ரோ வேரியண்ட் வரிசையில் மட்டுமே வருகின்றது, இது ரூ. 1.5 லட்சம் வரை குறைவான விலையில் கிடைக்கிறது.
-
கேபின் அப்டேட்களில் டூயல்-டோன் டாஷ்போர்டு மற்றும் கிளைமேட் கன்ட்ரோல் பேனல் ஆகியவை அடங்கும்.
-
போர்டில் உள்ள புதிய அம்சங்களில் டூயல் ஜோன் கிளைமேட் ஏசி மற்றும் டூயல் 10.25 இன்ச் டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும்.
-
வயர்லெஸ் போன் சார்ஜிங், 6 ஏர்பேக்குகள் மற்றும் சன்ரூஃப் ஆகிய வசதிகள் அப்படியே தொடர்கின்றன.
-
டாப்-ஸ்பெக் EL Pro வேரியன்ட் மட்டும் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை பெறுகிறது: 34.5 kWh (375 km) மற்றும் 39.4 kWh (456 km).
-
இந்த காரின் விலை ரூ.15.99 லட்சம் முதல் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) இருக்கின்றது .
மஹிந்திரா XUV400 'புரோ' என்ற பெயர் சேர்க்கப்பட்டு புதிய வேரியன்ட்களை பெற்றுள்ளது. இந்த புதிய ப்ரோ வேரியன்ட்களுடன், மின்சார எஸ்யூவி ஆனது இப்போது கூடுதலான வசதிகள் நிறைந்த ஒன்றாக மாறியுள்ளது. நிச்சயமாக விலை உயர்வுக்கேற்றபடி மற்றும் உட்புறத்தில் மிகவும் தேவையான அப்டேட்டையும் கொண்டுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட XUV400 -க்கான முன்பதிவுகள் ஜனவரி 12 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு தொடங்கும். ரூ.21,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். அதே நேரத்தில் இதன் டெலிவரி பிப்ரவரி 2024 முதல் தொடங்கும்.
புதிய ப்ரோ வேரியன்ட்களின் விலை
வேரியன்ட் |
விலை |
XUV400 EC ப்ரோ |
ரூ.15.49 லட்சம் |
XUV400 EL Pro (34.5 kWh) |
ரூ.16.74 லட்சம் |
XUV400 EL Pro (39.4 kWh) |
ரூ.17.49 லட்சம் |
இந்த அப்டேட் மூலம், XUV400 ரூ. 1.5 லட்சம் வரை மலிவு விலையில் கிடைக்கிறது, இப்போது அது Pro variant வரிசையில் மட்டுமே கிடைக்கிறது. இந்த அறிமுக விலை மே 2024 இறுதி வரை செய்யப்படும் டெலிவரிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
புதிதாக என்ன இருக்கின்றது ?
ப்ரோ வேரியண்ட் அப்டேட் மூலம், XUV400 காரின் மிக முக்கியமான வடிவமைப்பு குறைகளில் ஒன்றை ஒன்றை மஹிந்திரா நிவர்த்தி செய்துள்ளது. அதன் பழைய டேஷ்போர்டு மற்றும் கிளைமேட் கன்ட்ரோல் பேனல் வடிவமைப்பு மிகவும் நவீனமாக தோற்றமளிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டின் பயணிகள் பக்கத்தில் ஸ்டோரேஜ் பகுதிக்கு பதிலாக பியானோ பிளாக் இன்செர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கிளைமேட் கன்ட்ரோல்கள் இப்போது XUV700 மற்றும் ஸ்கார்பியோ N -ல் உள்ளதைப் போலவே உள்ளன. இதன் அப்ஹோல்ஸ்டரியும் ஆல் பிளாக் தீமில் இருந்து புரோ வேரியன்ட்களுடன் பிளாக் மற்றும் பெய்ஜ் கலருக்கு மாற்றப்பட்டுள்ளது.
XUV400 -ன் சென்ட்ரல் ஏசி வென்ட்களும் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்டிற்கு இடமளிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேலும், XUV700-லிருந்து ஸ்டீயரிங் வீலும் உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக வரவிருக்கும் ஃபேஸ்லிஃப்ட்டட் XUV300 -யிலும் அதே டேஷ்போர்டு வடிவமைப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கிறோம்.
உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு
XUV400 -யின் கேபின் பெரிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, டூயல்-ஜோன் ஏசி, பின்புற பயணிகளுக்கான Type-C USB சார்ஜர் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட பின்புற ஏசி வென்ட்கள் போன்ற ஏராளமான புதிய அம்சங்களை பெற்றுள்ளது. மேலும் , இது வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், சன்ரூஃப், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் உயரத்தை சரி செய்து கொள்ளும் வகையிலான ஓட்டுநர் இருக்கை போன்ற அம்சங்களை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளது.
மஹிந்திராவின் எலக்ட்ரிக் எஸ்யூவியின் பாதுகாப்பு வசதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இன்னும் 6 ஏர்பேக்குகள், ரிவர்சிங் கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) ஆகியவை இதில் இருக்கின்றன.
மேலும் பார்க்கவும்: சோதனை செய்யப்பட்டு வரும் Skoda Enyaq EV… இந்த ஆண்டு இந்தியாவில் வெளியாகிறதா ?
பவர்டிரெயின்
XUV400 காரின் எலக்ட்ரிக் பவர்டிரெயினில் மஹிந்திரா எந்த மாற்றமும் செய்யவில்லை. 34.5 kWh மற்றும் 39.4 kWh - முறையே 375 கிமீ மற்றும் 456 கிமீ என, இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் EV தொடர்ந்து வழங்கப்படுகிறது. இரண்டு பேட்டரி பேக்குகளும் ஒரே 150 PS/310 Nm மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளன. EL Pro வேரியன்ட் இரண்டு பேட்டரி பேக்குகளின் ஆப்ஷன்களையும் பெறுகிறது, அதே நேரத்தில் EC Pro பேஸ் பேக்கை பெறுகின்றது.
போட்டியாளர்கள்
மஹிந்திரா XUV400 காரானது டாடா நெக்ஸான் EV -யுடன் தொடர்ந்து போட்டியிடும். மேலும் MG ZS EV மற்றும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் விலை குறைவான மாற்றாகவும் இருக்கும்.
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) -க்கான விலை ஆகும்
மேலும் படிக்க: XUV400 EV ஆட்டோமெட்டிக்