• English
    • Login / Register

    Tata Punch EV -யை ஓட்டிய பிறகு அதில் உள்ள நிறை, குறைகளை பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம்

    டாடா பன்ச் EV க்காக ஜூன் 03, 2024 08:11 pm அன்று ansh ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 26 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    டாடா பன்சின் எலக்ட்ரிக் வெர்ஷன் ஏராளமான வசதிளை கொண்டுள்ளது. மகிழ்ச்சியான ஓட்டும் அனுபவத்தை வழங்குகிறது மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு போதுமான ரேஞ்சை வழங்குகிறது. இருப்பினும் இதன் விலை சற்று அதிகமாகவே தெரிகிறது.

    Tata Punch EV Pros & Cons

    புதிய Acti.ev பிளாட்ஃபார்மில் கட்டப்பட்ட டாடாவின் அறிமுக EV ஆக இந்த ஆண்டின் தொடக்கத்தில் டாடா பன்ச் EV அறிமுகப்படுத்தப்பட்டது, இது ஏராளமான சலுகைகளை வழங்குகிறது. இந்த ஆல்-எலக்ட்ரிக் பன்ச் எதிர்கால வடிவமைப்பு, சிறந்த வசதிகள் மற்றும் தேர்ந்தெடுக்க இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை காட்டுகிறது. இருப்பினும், சில வசதிகள் மேம்படுத்த வேண்டியுள்ளது. சமீபத்தில் எலெக்ட்ரிக் எஸ்யூவி-யை ஒட்டியதன் மூலம் அதன் சில நன்மைகள் மற்றும் குறைபாடுகளைப் பற்றி நாங்கள் அறிந்து கொண்டோம், அதைப் பற்றி நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்:

    நிறைகள்

    இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள்

    Tata Punch EV Battery Pack

    டாடா இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்குகிறது: 25 kWh மற்றும் 35 kWh. இதில் சிறிய பேட்டரி பேக் மாடலின் ஆன் ரோடு வரம்பு 200 கி.மீ. பெரிய பேட்டரி பேக் தோராயமாக 300 கி.மீ. ஆகும். இந்த இரண்டு புள்ளிவிவரங்களின் படி உங்களின் தினசரி நகர பயன்பாட்டிற்கு இந்த காரின் பேட்டரி செயல்திறன் போதுமானதாக இருக்கும்.

    மேலும் படிக்க: Tata Punch EV Long Range Vs Citroen EC3: எந்த எலக்ட்ரிக் கார் உண்மையில் அதிக வரம்பை அளிக்கிறது?

    நீங்கள் நகரம் மற்றும் நகரங்களுக்கு இடையேயான பயன்பாட்டிற்க்காக பன்ச் EV-ஐ வாங்க விரும்பினால், அதன் பெரிய பேட்டரி பேக் வேரியன்ட் விரும்பத்தக்கதாக இருக்கும். இருப்பினும் உங்கள் வாகனம் ஓட்டுவது கண்டிப்பாக நகர பயன்பாட்டிற்கு மட்டுமே என்றிருந்தால், சிறிய பேட்டரி பேக்கை தேர்ந்தெடுப்பது சிறிது பணத்தைச் சேமிக்க உங்களுக்கு உதவும். கூடுதலாக, இரண்டு பேட்டரி பேக்குகளும் DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும். இது பயணத்தின் போது சார்ஜ் செய்யும் போது நேரத்தைச் சேமிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

    அதிகப்படியான வசதிகள் நிறைந்தது

    Tata Punch EV Dashboard

    வசதிளைப் பொறுத்தவரை பன்ச் EV அதன் ஏராளமான வசதிளால் வாகனப்பிரியர்களை ஈர்க்கிறது. இதில் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே), வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே, ரியர் ஏசி வென்ட்களுடன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், சிங்கிள்-பேன் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் சீட்கள் மற்றும் ஏர் ப்யூரிஃபையர் ஆகியவை அடங்கும்.

    பாதுகாப்பைப் பொறுத்தவரை 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றை வழங்குவதன் மூலம் பன்ச் EV சிறந்து விளங்குகிறது. கூடுதலாக இது 360 டிகிரி கேமராவை பிளைண்ட் வியூ மானிட்டரை கொண்டுள்ளது, இந்த வசதி இந்த அளவு மற்றும் பிரிவு கார்களில் பொதுவாகக் காணப்படுவதில்லை.

    இனிமையான பயண அனுபவம்

    Tata Punch EV

    எலெக்ட்ரிக் காரின் நன்மைகளில் ஒன்று அதன் விரைவான ஆக்சலரேஷன் ஆகும், மேலும் பன்ச் EV இந்த அம்சத்தில் சிறந்து விளங்குகிறது. பயணம் முழுவதும் இனிமையாக இருப்பதற்கும் சமநிலையை பராமரிப்பதற்கும் இடையே சரியான சமநிலையை இது பராமரிக்கிறது. எலக்ட்ரிக் மோட்டார்கள் போதுமான ஆற்றலை வழங்குகின்றன. இதன் விளைவாக அதே விலை ரேஞ்சில் உள்ள ICE கார்களில் நீங்கள் பெறுவதை விட அதிக சுவாரஸ்யமாக ஓட்டும் அனுபவத்தை பன்ச் EV உங்களுக்கு வழங்குகிறது.

    122 PS எலெக்ட்ரிக் மோட்டாருடன் வரும் பன்ச் EV-யின் லோங் ரேஞ்ச் வெர்ஷன் வெறும் 9.5 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும்.

    குறைபாடுகள்

    ரியர் சீட் அனுபவம்

    Tata Punch EV Rear Seats

    பன்ச் EV ஒரு குடும்ப எஸ்யூவி என வகைப்படுத்தப்பட்டாலும், அது நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு மிகவும் பொருத்தமானது. காரின் அகலம் ரியர் சீட்டில் மூன்று பயணிகளுக்கு வசதியாக உட்கார இடமளிக்கவில்லை, அவ்வாறு செய்ய முயற்சிப்பது அனைத்து பயணிகளுக்கும் அசௌகரியத்தை ஏற்படலாம்.

    மேலும் படிக்க: Fame 3 EV மானியக் கொள்கை விரைவில் செயல்படுத்தப்படும்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 விஷயங்கள்

    உங்களுக்கு நல்ல ஹெட்ரூம் இடம் கிடைத்தாலும் உங்கள் உயரம் 6 அடியாக இருந்தால் ரூஃப் உங்கள் தலையை அழுத்துவது போன்று நீங்கள் உணரலாம். ஃப்ரன்ட் சீட்டில் உங்களின் தொடைக்கு ஆதரவு போதுமானது இருக்கும், ஆனால், ரியர் சீட்களில் உங்களுக்கு அது கிடைக்காது.

    விலை கொஞ்சம் அதிகம்

    Tata Punch EV

    உண்மையில் எலெக்ட்ரிக் கார்கள் அவற்றின் ICE எடிஷன்கள் அல்லது அதே அளவிலான ICE வாகனங்களை விட விலை அதிகமாக உள்ளது. இருப்பினும், பன்ச் EV அதன் அளவிற்கு சற்று விலை உயர்ந்ததாகத் தோன்றுகிறது, குறிப்பாக அதன் டாப்-ஸ்பெக் வேரியன்ட் ரூ. 15 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது டாடா நெக்ஸான் மற்றும் கியா சோனெட் போன்ற சப் காம்பாக்ட் எஸ்யூவி-களின் பிரிவில் இடம்பிடித்துள்ளது. கூடுதலாக, அதன் விலைக்கு ஹூண்டாய் கிரெட்டா அல்லது மாருதி கிராண்ட் விட்டாரா போன்ற காம்பாக்ட் எஸ்யூவியின் குறைந்த-ஸ்பெக் வேரியன்ட்டை தேர்வுசெய்வதையும் ஒருவர் பரிசீலிக்கலாம். இது சிறந்த வசதிகள் மிகவும் சுவாரஸ்யமாக ஓட்டும் அனுபவம் மற்றும் ஏராளமான கேபின் இடவசதி ஆகியவற்றை வழங்குகிறது.

    மேலும் படிக்க: Mahindra XUV700 எலக்ட்ரிக் டிசைன் காப்புரிமை மூன்று ஸ்கிரீன் லே அவுடையும்  புதிய ஸ்டீயரிங் வீலையும் உறுதிப்படுத்துகிறது

    பன்ச் EV ஆனது பல வசதிளைக் கொண்டிருக்கும் அதே வேளையில் அதன் விலை சற்றுக் குறைவாக இருந்திருக்கலாம். இது உண்மையிலேயே பணத்திற்கான மதிப்பாக இதை நமக்கு வழங்குகிறது.

    டாடா பன்ச் EV -யின் பலன்கள் மற்றும் குறைகள் இவை. ரூ.10.99 லட்சத்தில் இருந்து ரூ.15.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கும். இது சிட்ரோன் eC3 உடன் நேரடியாக போட்டியிடுகிறது. அதே நேரத்தில் டாடா டியாகோ EV மற்றும் MG காமெட் EV-க்கு அதிக பிரீமியம் மாற்றாகவும் செயல்படுகிறது.

    மேலும் படிக்க: பன்ச் EV ஆட்டோமேட்டிக்

    was this article helpful ?

    Write your Comment on Tata பன்ச் EV

    explore மேலும் on டாடா பன்ச் இவி

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

    • பிரபலமானவை
    • உபகமிங்
    ×
    We need your சிட்டி to customize your experience