Tata Punch EV விற்பனை 5 மாதங்களில் 10,000 -ஐ தாண்டியது மற்றும் Nexon EV விற்பனை 2020 முதல் 68,000 யூனிட்களை தாண்டியுள்ளது
published on ஜூன் 17, 2024 06:05 pm by samarth for டாடா பன்ச் EV
- 20 Views
- ஒரு கருத்தை எழுதுக
பாரத் என்சிஏபி நடத்திய சமீபத்திய கிராஷ் டெஸ்ட்களில் இரண்டு EV -களும் 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளன.
என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் முதல் அனைத்து எலக்ட்ரிக் எஸ்யூவி -கள் வரை அதிக எண்ணிக்கையிலான வெகுஜன சந்தை EV ஆப்ஷன்களை வழங்குவதில் டாடா தற்போது முன்னணியில் உள்ளது. எஸ்யூவி பிரிவில் பன்ச் EV மற்றும் நெக்ஸான் இவி என இரண்டு கார்கள் உள்ளன: EV எஸ்யூவி -களின் தேவை தற்போது அதிகரித்து வருவதால் பன்ச் EV மற்றும் நெக்ஸான் EV ஆகிய இரண்டும் அந்தந்த சந்தை அறிமுகமானது முதல் அவற்றின் தேவை அதிகமாகியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட 5 மாதங்களுக்குள் பன்ச் EV ஆனது 10,000-யூனிட் விற்பனை மைல்கல்லை தாண்டியது. அதே நேரத்தில் அதன் பெரிய உடன்பிறப்பான நெக்ஸான் EV -யானது 2020 -ம் ஆண்டில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதன் விற்பனை எண்ணிக்கை 68,000 -த்தை தாண்டியுள்ளது.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
நெக்ஸான் EV ஆனது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேயுடன் கூடிய 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 9-ஸ்பீக்கர்கள் ஜேபிஎல் சிஸ்டம், பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோமெட்டிக் ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், சன்ரூஃப் மற்றும் ஃபிரன்ட் வென்டிலேட்டட் இருக்கைகள் ஆகிய வசதிகள் உள்ளது. இதற்கிடையில், பன்ச் EV டூயல் ஸ்கிரீன் செட்டப்பை கொண்டுள்ளது (இன்ஸ்டரூமென்ட் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட்டிற்காக ஒவ்வொன்றும் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள்). ஏர் ஃபியூரிபையர், 6-ஸ்பீக்கர்கள், க்ரூஸ் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் சன்ரூஃப் ஆகிய வசதிகளும் உள்ளன.
பாதுகாப்புக்காக இரண்டு எஸ்யூவிகளிலும் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா, ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவற்றைப் பெறுகின்றன. பிளைண்ட் ஸ்பாட் வியூ மானிட்டர், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல் மற்றும் ஹில் டிசென்ட் கண்ட்ரோல் ஆகியவையும் இதில் அடங்கும். நெக்ஸான் EV ஆனது முன் பார்க்கிங் சென்சார்களையும் பெறுகிறது. சமீபத்தில் நெக்ஸான் EV மற்றும் பன்ச் EV இரண்டும் பாரத் NCAP அமைப்பால் சோதிக்கப்பட்டன. மேலும் கிராஷ் டெஸ்ட்டில் 5-நட்சத்திர மதிப்பீடுகளைப் பெற்றன.
மேலும் பார்க்க: பாரத் NCAP பாதுகாப்பிற்க்கான சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றது Tata Nexon EV
பவர்டிரெயின்கள்
இரண்டு EV -களிலும் கிடைக்கும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் பற்றிய விரிவான தகவல் இங்கே:
விவரங்கள் |
டாடா பன்ச் EV |
டாடா நெக்ஸான் EV |
பேட்டரி பேக் |
25 kWh* / 35 kWh (LR)* |
30 kWh (MR)* / 40.5 kWh (LR)* |
சக்தி |
82 PS / 122 PS |
129 PS / 144 PS |
டார்க் |
114 Nm /190 Nm |
215 Nm / 215 Nm |
கிளைம்டு ரேஞ்ச் (ARAI) |
315 கி.மீ / 421 கி.மீ |
325 கி.மீ / 465 கி.மீ |
*MR- மீடியம் ரேஞ்ச் / LR-லாங் ரேஞ்ச்
இரண்டு எஸ்யூவி -களும் இகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் மோட் என பல டிரைவ் மோடுகளை பெறுகின்றன. மேலும் மல்டி-மோட் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கின் 4 லெவல்களும் இதில் உள்ளன.
விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா பன்ச் EV ஆனது ரூ. 10.99 லட்சம் முதல் ரூ. 15.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் உள்ளது. சிட்ரோன் eC3 உடன் போட்டியிடுகிறது. மேலும் டாடா டியாகோ EV மற்றும் எம்ஜி காமெட் இவி ஆகியவற்றுக்கு பிரீமியம் மாற்றாக இருக்கும். மறுபுறம், டாடா நெக்ஸான் EV -யானது ரூ. 14.49 லட்சத்தில் இருந்து ரூ. 19.49 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு மஹிந்திரா XUV400 EV உடன் நேரடியாக போட்டியிடுகிறது. இது MG ZS EV மற்றும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் ஆகிய கார்களுக்கு ஒரு விலை குறைவான மாற்றாக இருக்கும்.
மேலும் படிக்க: பன்ச் EV ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful