• English
  • Login / Register

முன்பக்கம் மறைக்கப்படாமல் சாலையில் தென்பட்ட Tata Nexon Facelift

டாடா நிக்சன் க்காக ஆகஸ்ட் 21, 2023 08:34 pm அன்று ansh ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 207 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய ஹெட்லேம்ப் வடிவமைப்பு, ஹாரியர் EV கான்செப்ட்டில் உள்ள வடிவத்தை போலவே உள்ளது.

Tata Nexon 2023 Front Profile

  • முன்புறத்தில் எந்த மறைப்பும் இல்லாமல்  சோதனையின் போது எடுக்கப்பட்ட படம் இருக்கிறது.

  • உட்புறத்திலும் பெரிய மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் உள்ளிட்ட எதிர்பார்க்கப்பட்ட டீசல் இன்ஜின்கள் இதில் கொடுக்கப்படலாம்.

  • இந்த ஆண்டின் பிற்பகுதியில் ரூ. 8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்படலாம்.

The facelifted Tata Nexon has been under development for a while and we have been seeing multiple spy shots of the upcoming SUV. Recently, a test mule of the facelifted Nexon was spotted with the front profile undisguised, revealing some major design upgrades.
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டட் டாடா காரானது தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அதன் சோதனை தொடங்கியுள்ளதால் வரவிருக்கும் எஸ்யூவி -யின் பல ஸ்பை புகைப்படங்களை நாம் பார்த்து வருகிறோம். சமீபத்தில் ஃபேஸ்லிஃப்டட் நெக்ஸானின் சோதனை படம்  மறைக்கப்படாத காரில், சில முக்கிய வடிவமைப்பு அப்டேட்களை காட்டியது.

புதிய வடிவமைப்பு

Tata Nexon 2023 Headlamps

தற்போதைய மாடலுடன் ஒப்பிடும்போது நெக்ஸானின் புதிய முன்புற தோற்றம் பெரிதும் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்பக்கத்தில், தொடர் இன்டிகேட்டர்களுடன் கூடிய நேர்த்தியான LED DRL -கள் உள்ளன, மேலும் ஹெட்லேம்ப்கள் இப்போது பம்பரின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. 2023 ஆட்டோ எக்ஸ்போவில் ஹாரியர் EV உள்ளதை போலவே செங்குத்தாக உள்ள ஹௌசிங்குடன் இந்த ஹெட்லேம்ப்கள் காட்சியளிக்கின்றன.

Tata Nexon 2023 Front Grille

கிரில் இப்போது பெரியதாக தெரிகிறது மற்றும் பெரிய ஏர் டேமின் மையத்தின் வழியாகச் சென்று இரண்டு ஹெட்லேம்ப்களின் ஹௌசிங்குகளையும் இணைக்கும் பிளாஸ்டிக் பாகம் கொடுக்கப்பட்டுள்ளது.

பிற டிஸைன் அப்டேட்கள்

2024 Tata Nexon spied

ஃபேஸ்லிஃப்டட் நெக்ஸானின் முந்தைய படங்களில், புதிய அலாய் வீல்கள், திருத்தப்பட்ட பம்பர் வடிவமைப்பு (முன்புறம் மற்றும் பின்புறம்), மறுவடிவமைக்கப்பட்ட டெயில்கேட் மற்றும் இணைக்கப்பட்ட டெயில் லேம்ப் அமைப்பு போன்ற பிற அப்டேட் மாற்றங்களை நாங்கள் கவனித்தோம். இந்த சமீபத்திய பார்வையானது எஃகு சக்கரங்களில் இருந்ததால், குரோம் அல்லது கிளாஸ் பிளாக் கார்னிஷ் எதுவும் இல்லாததால், லோவர் வேரியன்ட்டை கொண்டதாக இருக்கலாம்.

மேலும் படிக்க: புத்தம் புதிய உட்புற வடிவமைப்பைப் பெறும் ஃபேஸ்லிஃப்டட்  டாடா நெக்ஸான் - ஸ்பை ஷாட்கள்

2023 டாடா நெக்ஸான் அப்டேட் உட்புறத்தையும் பெறும். இது ஒரு புதிய கேபின் தீம், பெரிய டச்ஸ்கிரீன் யூனிட் கொண்ட புதிய டேஷ்போர்டு, டாடா அவின்யாவிலிருந்து பெறப்பட்ட ஸ்டீயரிங் வீல் மற்றும் திருத்தப்பட்ட சென்டர் கன்சோலுடன் வரும்.

எதிர்பார்க்கப்படும் பவர்டிரெயின்கள்

டாடா 1.5 லிட்டர் டீசல் இன்ஜினை (115PS/160Nm) 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு AMT உடன் தக்க வைத்துக் கொள்ளும். ஆனால் கார் தயாரிப்பு நிறுவனம் அதன் புதிய 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட்டையும் (125PS/225Nm) வழங்க முடியும், இது DCT (டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன்) ஆட்டோமெட்டிக் ஆப்ஷனுடனும் வரலாம்.
அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு

Tata Nexon 2023

10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்  டிரைவருக்கான ஃபுல் டிஜிட்டல் டிஸ்ப்ளே, வயர்லெஸ் போன் சார்ஜிங், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் AC மற்றும் வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள் போன்ற அம்சங்களுடன் ஃபேஸ்லிஃப்டட் நெக்ஸான் வரலாம்.

மேலும் படிக்க:டைனமிக் டர்ன் இன்டிகேட்டர்ளுடன் காணப்பட்ட 2024 டாடா நெக்ஸான்

பாதுகாப்பை பொறுத்தவரை, கார் தயாரிப்பு நிறுவனம் ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் ABS , ஹில் அசிஸ்ட், ESP (எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம்) மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றை வழங்கலாம். அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS) வழங்கும் முதல் சப்காம்பாக்ட் எஸ்யூவி -யாக இது அமையும்.

அறிமுகம் & போட்டியாளர்கள்

Tata Nexon 2023

டாடா, மேம்படுத்தப்பட்ட நெக்ஸானின் ஆரம்ப விலையை ரூ.8 லட்சமாக(எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கலாம் மேலும் இது 2023 செம்டம்பரில் அறிமுகப்படுத்தப்படலாம். அது கியா சோனெட் , ஹூண்டாய் வென்யூ , மாருதி பிரெஸ்ஸா  மற்றும் மஹிந்திரா XUV300  ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

படங்களின் ஆதாரம்

மேலும் படிக்க: நெக்ஸான் AMT

was this article helpful ?

Write your Comment on Tata நிக்சன்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்Estimated
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்Estimated
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்Estimated
    ஏப், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்Estimated
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • vinfast vf3
    vinfast vf3
    Rs.10 லட்சம்Estimated
    பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience