• English
    • Login / Register

    Tata Nexon Facelift காரை இப்போது முன்பதிவு செய்து கொள்ளலாம்

    rohit ஆல் செப் 05, 2023 02:28 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 38 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் நான்கு டிரிம்களில் விற்பனைக்கு வரும்: ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டிவ் மற்றும் ஃபியர்லெஸ்.

    Tata Nexon facelift

    • செப்டம்பர் 14 ஆம் தேதி அன்று புதிய நெக்ஸானை டாடா அறிமுகப்படுத்தவுள்ளது.

    • ஆன்லைனிலும் இந்தியா முழுவதும் உள்ள டாடாவின் டீலர்ஷிப்களிலும்  முன்பதிவு செய்யலாம்.

    • கார் தயாரிப்பாளர் ஸ்டாண்டர்டு  மாடலுடன் நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்டையும் அறிமுகப்படுத்தும்.

    • வடிவமைப்பில் உள்ள மாற்றங்களில் நேர்த்தியான கிரில், அனைத்து-LED லைட்ஸ் மற்றும் கனெக்டட் டெயில்லைட்கள் ஆகியவை அடங்கும்.

    • கேபினில் இப்போது டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் மற்றும் AC கன்ட்ரோல்களுக்கான டச்-பேஸ்டு பேனல் உள்ளது.

    • புதிய சாதனங்களில் 360 டிகிரி கேமரா, ஆறு ஏர்பேக்குகள் மற்றும் முன்புற பார்க்கிங் சென்சார்கள் உள்ளன.

    • முன்பு போலவே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இதில் கொடுக்கப்படலாம்; இப்போது 7-ஸ்பீடு DCT உடன் முந்தையதை பெறுகிறது.

    • ஆரம்ப விலை ரூ.8 லட்சத்தும் மேல் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

    சமீபத்தில் முழுமையாக இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது அதன்  பின்னர், டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் செப்டம்பர் 14 ஆம் தேதி அன்று வெளியீட்டுக்கு முன்னதாக முன்பதிவு தொடங்கியுள்ளது. கார் தயாரிப்பு நிறுவனம் ஆன்லைனிலும் அதன் இந்தியா முழுவதவும் உள்ள டீலர் நெட்வொர்க்கிலும் முன்பதிவுகளை மேற்கொள்கிறது. அப்டேட்டட் எஸ்யூவி இரண்டு டிரிம்களில் விற்கப்படும்: ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டிவ் மற்றும் ஃபியர்லெஸ். அதே நாளில் ஃபேஸ்லிஃப்டட் நெக்ஸான் EVயின் விலையையும் டாடா வெளியிடும். புதிய நெக்ஸான் பற்றி இதுவரை நமக்கு தெரிந்த விவரங்கள் இங்கே:

    அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் தோற்றம்

    2023 Tata Nexon

    நெக்ஸானுக்கான மாற்றங்கள், அதன் முன்புற மற்றும் பின்புற முனைகளில் அதிக அளவில் புதிய மற்றும் நேர்த்தியான கிரில், செங்குத்தாக கொடுக்கப்பட்டுள்ள LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் மாற்றம் செய்யப்பட்ட LED DRL -கள் மற்றும் ரீடோன் பம்பர்கள் ஆகியவை அடங்கும். டாடா இதற்கு கனெக்டட் மற்றும் டாப்பர் LED டெயில்லைட்கள் மற்றும் புதிய டெயில்கேட் ஆகியவற்றை கொடுத்துள்ளது, இது பின்புறத்துக்கு ஒரு புதிய தோற்றத்தை கொடுக்கிறது.

    புதிய நெக்ஸான் EV -யின் சமீபத்தில் வெளியிடப்பட்ட டீஸர்கள் (அல்லது Nexon.ev என அழைக்கப்படும்), புதிய ஸ்டாண்டர்டு நெக்ஸான் போன்ற வடிவமைப்பு மாற்றங்களை பெறும் என்பதை காட்டுகிறது. எவ்வாறாயினும், அதன் பெரிய வடிவமைப்பு மாற்றம், முன்புற முகப்பின் அகலம் வரை கொடுக்கப்ப்ட்டுள்ள நீளமான LED DRL ஆக இருக்கும்.

    கூடுதலான பிரீமியம் கேபின் அனுபவம்

    Tata Nexon facelift cabin

    புதிய நெக்ஸானில் டேஷ்போர்டு புதிய வடிவமைப்புடன் இருக்கும் மற்றும் கர்வ்வில் உள்ளதைப் போன்ற புதிய 2-ஸ்போக் பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீலையும் இது பெறுகிறது, இதில் ஒளிரும் டாடா லோகோ உள்ளது. இது புதிய இருக்கைகளையும் கொண்டுள்ளது, இது தேர்ந்தெடுக்கப்பட்ட கார் வகை மற்றும் பெயிண்ட் ஆப்ஷனை பொறுத்து வேறுபட்ட கலர் ஸ்கீம்களை கொடுக்கிறது. டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட், கிளைமேட் கன்ட்ரோல்களுக்கு டச்-பேஸ்டு பேனலையும் பயன்படுத்தியுள்ளது, இது பேக்லிட் செட்டப்பையும் கொண்டுள்ளது.

    அம்சங்களுக்கு பஞ்சமில்லை

    Tata Nexon facelift 10.25-inch digital driver's display

    மிட்லைஃப் அப்டேட்டுடன், நெக்ஸானின் பாதுகாப்பு மற்றும் அம்சங்களின் பட்டியல் நீண்டதாக உள்ளது, டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஸ்ட்டுமென்டேஷன் -க்காக மற்றொன்று இன்ஃபோடெயின்மென்ட் -க்காக), 360-டிகிரி கேமரா, ஆறு ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு) மற்றும் முன்புற பார்க்கிங் சென்சார்கள்.  நெக்சானில்  உள்ள அனைத்து புதிய அம்சங்களையும் நாங்கள் உள்ளடக்கியுள்ளோம் , அதே நேரத்தில் அதன் கார் வகை வாரியான உபகரணப் பட்டியலையும் விவரித்துள்ளோம்.

    தேர்வுக்காக பிரிக்கப்பட்டது

    இப்போது உள்ள  மாடலுடன் ஒப்பிடும்போது வேரியன்ட்களின் வரிசை எளிமைப்படுத்தப்பட்டிருந்தாலும், வாங்குபவர்கள் தங்களுக்கு மிகவும் விருப்பமான ஒன்றைத் தேர்வுசெய்யும் வகையில் பல்வேறு இன்ஜின்-கியர்பாக்ஸ் காம்பினேஷன்களை தொடர்ந்து வழங்குவதற்கு டாடா முடிவு செய்துள்ளது:

     
    விவரக்குறிப்புகள்

     

    1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல்

     
    1.5-லிட்டர் டீசல்

     
    பவர்

    120PS

    115PS

     
    டார்க்

    170Nm

    260Nm

     
    டிரான்ஸ்மிஷன்

     
    5-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AMT, 7-ஸ்பீடு DCT

     
    6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AMT

    நெக்ஸான் இன்னும் மூன்று டிரைவ் மோடுகளை கொண்டுள்ளது (ஈகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட்ஸ்), ஆனால் இப்போது AMT மற்றும் டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுக்கு பேடில் ஷிஃப்டர்களுடன் வருகிறது. மறுபுறம், நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட்டின் பவர்டிரெய்ன் மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை.

    எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

    2023 Tata Nexon rear

    டாடா நிறுவனம், நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் விலையை 8 லட்சம் ரூபாய்க்கு மேல் (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கலாம் என்று நம்புகிறோம். கியா சோனெட் , மாருதி பிரெஸ்ஸா, , ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா  XUV300 மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ்  கிராஸ்ஓவர் போன்றவற்றுடன் இந்த எஸ்யூவி தொடர்ந்து போட்டியிடும்.

    மேலும் படிக்க:நெக்ஸான் AMT

    was this article helpful ?

    Write your Comment on Tata நிக்சன்

    2 கருத்துகள்
    1
    S
    shyam sunder y
    Sep 5, 2023, 5:49:56 PM

    Best interiors and exteriors good looking I like it

    Read More...
      பதில்
      Write a Reply
      1
      E
      endrakanti yadagiri
      Sep 5, 2023, 12:36:17 AM

      I want New facelift Nexon how many days waiting period

      Read More...
        பதில்
        Write a Reply

        ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

        புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

        கார் செய்திகள்

        • டிரெண்டிங்கில் செய்திகள்
        • சமீபத்தில் செய்திகள்

        டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

        • லேட்டஸ்ட்
        • உபகமிங்
        • பிரபலமானவை
        ×
        We need your சிட்டி to customize your experience