சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

மொரிஷியஸில் Tiago EV, Punch EV And Nexon EV கார்களை அறிமுகம் செய்யும் டாடா நிறுவனம்

kartik ஆல் மார்ச் 28, 2025 07:32 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொகுப்பின் பட்டியல் இந்திய மாடல்களை போலவே இருந்தாலும் பவர்டிரெயினில் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மொரிசியஷில் அதன் டியாகோ இவி, பன்ச் இவி மற்றும் நெக்ஸான் இவி ஆகிய மூன்று கார்களை விற்பனை செய்ய அல்லைட் மோட்டார்ஸ் (அதன் உள்ளூர் பங்குதாரர்) உடன் இணைந்துள்ளது. சார்க் பிராந்தியத்திற்கு வெளியே டாடா தனது EV -களை வெளியிட்ட முதல் நாடு மொரீஷியஸ் ஆகும். கடைசியாக இலங்கையில் ஐசிஇ மற்றும் இவி மாடல்களை டாடா அறிமுகப்படுத்தியது. மொரிஷியஸில் அறிமுகப்படுத்தப்பட்ட டியாகோ, பன்ச் மற்றும் நெக்ஸான் இவி -கள் பற்றிய விரைவான பார்வை இங்கே.

மொரிஷியஸில் களமிறங்கும் டாடா இவி -கள்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ இவி, பன்ச் EV மற்றும் நெக்ஸான் இவி என்ற மூன்று EV -களை மொரிஷியஷில் விற்பனை செய்யவுள்ளது.இவை இந்திய-ஸ்பெக் பதிப்புகளில் வழங்கப்படும் பெரிய பேட்டரி பேக்குடன் மட்டுமே வருகின்றன. ஒவ்வொன்றின் தொழில்நுட்ப விவரங்கள் இங்கே:

மாடல்

டாடா டியாகோ EV

டாடா பன்ச் EV

டாடா நெக்ஸான் EV

பேட்டரி பேக்

24 kWh

35 kWh

45 kWh

பவர்

75 PS

122 PS

144 PS

டார்க்

114 Nm

190 Nm

215 Nm

கிளைம்டு ரேஞ்ச் (C75)

190-210 கி.மீ

270-290 கி.மீ

350-375 கி.மீ

மொரிஷியஸ்-ஸ்பெக் மாடல்களுக்கான டாடா டியாகோ இவி -யின் கிளைம்டு ரேஞ்ச் இந்திய மாடல்களை விட 5 கி.மீ விட சற்று அதிகம். மற்ற இரண்டு இவி -கள் இந்திய மாடல்களை போலவே கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளன. பவர்டிரெய்னில் உள்ள வேறுபாடுகளை தவிர மூன்று மாடல்களிலும் வேறு எதுவும் பெரிதாக மாறவில்லை.

டாடா இந்தியாவில் கர்வ் இவி மற்றும் டிகோர் இவி என இரண்டு மாடல்களை விற்பனையில் செய்கிறது. இவை இன்னும் மொரிஷியஸில் வெளியிடப்படவில்லை.

மேலும் படிக்க: Kushaq மற்றும் Slavia கார்களை அசெம்பிள் செய்ய வியட்நாமில் புதிய தொழிற்சாலையை அமைக்கும் ஸ்கோடா

இந்தியாவில் இவி -களுக்கான டாடாவின் எதிர்கால திட்டங்கள்

5 கார்களுடன் டாடா நிறுவனம் ஹாரியர் இவி மற்றும் சியரா இவி ஆகிய கார்களை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. கடைசியாக ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் இவை காட்சிக்கு வைக்கப்பட்டன. டாடா மிக விரைவில் சஃபாரி -யின் ஆல் எலக்ட்ரிக் பதிப்பையும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அதன் ஃபிளாக்ஷிப் இவி மாடலாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on Tata Tia கோ EV

explore similar கார்கள்

டாடா டியாகோ இவி

4.4281 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்

டாடா பன்ச் இவி

4.4120 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்

டாடா நெக்ஸன் இவி

4.4191 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை