மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Tata Curvv அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
published on செப் 02, 2024 05:08 pm by rohit for டாடா கர்வ்
- 58 Views
- ஒரு கருத்தை எழுதுக
4 வேரியன்ட்கள் மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் பவர் ட்ரெய்ன்களுடன் கர்வ் கிடைக்கும்.
-
காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் ஸ்டைலான எஸ்யூவி-கூபே மாற்றாக கர்வ் இருக்கும்.
-
முழு ஆட்டோமெட்டிக் வரம்பின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
-
கர்வ் க்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளது மற்றும் டெலிவரி செப்டம்பர் 12, 2024 அன்று தொடங்கவுள்ளது
-
ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டிவ் மற்றும் அக்கம்பிளிஸ்டு என நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது:.
-
டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ADAS போன்ற வசதிகள் காரில் உள்ளன.
-
இரண்டு டர்போ-பெட்ரோல் யூனிட்கள் உட்பட 3 இன்ஜின்களுடன் வருகிறது.
நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு டாடா கர்வ் ரூ. 10 லட்சத்தில் (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டிவ் மற்றும் அக்கம்பிளிஸ்டு என 4 வகையான டிரிம்களில் டாடா நிறுவனம் எஸ்யூவி-கூபேவை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. முதல் மூன்று டிரிம்கள் மேலும் பல சப் வேரியன்ட்களை கொண்டுள்ளன. இந்த எஸ்யூவி-கூபே -வுக்கான முன்பதிவு இப்போது திறக்கப்பட்டுள்ளது. டெலிவரி செப்டம்பர் 12, 2024 அன்று தொடங்கும்.
மேலும் படிக்க: டாடா கர்வ்: காரின் வேரியன்ட் வாரியான வசதிகளின் விவரங்கள்
வேரியன்ட் வாரியான விலை
டாடா கர்வ்க்கான விலை அக்டோபர் 31 வரை செய்யப்படும் அனைத்து முன்பதிவுகளுக்கும் செல்லுபடியாகும். வேரியன்ட்கள் வாரியான விலை விவரங்கள் இங்கே:
1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல்
வேரியன்ட் |
விலை |
|
6- ஸ்பீடு MT |
7- ஸ்பீடு DCT |
|
ஸ்மார்ட் |
ரூ.10 லட்சம் |
|
பியூர் பிளஸ் |
ரூ.10.99 லட்சம் |
ரூ.12.49 லட்சம் |
கிரியேட்டிவ் |
ரூ.12.19 லட்சம் |
விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை |
கிரியேட்டிவ் எஸ் |
ரூ.12.69 லட்சம் |
விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை |
கிரியேட்டிவ் பிளஸ் எஸ் |
ரூ.13.69 லட்சம் |
விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை |
அக்கம்பிளிஸ்டு எஸ் |
ரூ.14.69 லட்சம் |
விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை |
1.2 லிட்டர் TGDi டர்போ-பெட்ரோல்
வேரியன்ட் |
விலை |
|
6- ஸ்பீடு MT |
7- ஸ்பீடு DCT |
|
கிரியேட்டிவ் எஸ் |
ரூ.13.99 லட்சம் |
|
கிரியேட்டிவ் பிளஸ் எஸ் |
ரூ.14.99 லட்சம் |
ரூ.16.49 லட்சம் |
அக்கம்பிளிஸ்டு எஸ் |
ரூ.15.99 லட்சம் |
விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை |
அக்கம்பிளிஸ்டு பிளஸ் ஏ |
ரூ.17.49 லட்சம் |
விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை |
1.5 லிட்டர் டீசல்
வேரியன்ட் |
விலை |
|
6- ஸ்பீடு MT |
7- ஸ்பீடு DCT |
|
ஸ்மார்ட் |
ரூ.11.49 லட்சம் |
|
பியூர் பிளஸ் |
ரூ.12.49 லட்சம் |
ரூ.13.99 லட்சம் |
கிரியேட்டிவ் |
ரூ.13.69 லட்சம் |
விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை |
கிரியேட்டிவ் எஸ் |
ரூ.14.19 லட்சம் |
விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை |
கிரியேட்டிவ் பிளஸ் எஸ் |
ரூ.15.19 லட்சம் |
விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை |
அக்கம்பிளிஸ்டு எஸ் |
ரூ.16.19 லட்சம் |
விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை |
அக்கம்பிளிஸ்டு பிளஸ் ஏ |
ரூ.17.69 லட்சம் |
விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை |
டாடா கர்வ்: ஒரு பார்வை
டாடா கர்வ் என்பது காம்பாக்ட் எஸ்யூவி இடத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள ஒரு ஸ்டைலான எஸ்யூவி-கூபே கார் ஆகும். நெக்ஸான் மற்றும் ஹாரியர் டாடாவின் எஸ்யூவி வரிசையில் இது சாய்வான கூரை வடிவமைப்பில் கூபே ஸ்டைல் காராக இருக்கும். ஆல் LED லைட்ஸ், ஒரு ஹாரியர் போன்ற கிரில் மற்றும் 18-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் ஆகியவை வெளியில் தெரியும் இதன் ஹைலைட்ஸ் ஆகும்.
டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள், அதே சென்டர் கன்சோல் மற்றும் டிரைவ் செலக்டர் உட்பட நிறைய விஷயங்கள் நெக்ஸானில் இருப்பதை போலவே உள்ளன. இருப்பினும் 4-ஸ்போக் ஸ்டீயரிங் ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களில் உள்ளதை போல இருக்கிறது. வசதிகளைப் பொறுத்தவரை இது 12.3-இன்ச் டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன் இருக்கைகள், ஜெஸ்டர் கன்ட்ரோல்டு பவர்டு டெயில்கேட் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை உள்ளன.
6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை பாதுகாப்புக்காக உள்ளன.
பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் ஆப்ஷன்கள் உள்ளன
டாடா இரண்டு டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உடன் கர்வ் எஸ்யூவி-கூபே கிடைக்கிறது, அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
விவரங்கள் |
1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் |
1.2-லிட்டர் T-GDi டர்போ-பெட்ரோல் (புதியது) |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
120 PS |
125 PS |
118 PS |
டார்க் |
170 Nm |
225 Nm |
260 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6- ஸ்பீடு MT, 7- ஸ்பீடு DCT* |
6- ஸ்பீடு MT, 7- ஸ்பீடு DCT* |
6- ஸ்பீடு MT, 7- ஸ்பீடு DCT* |
*DCT- டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
மேலும் படிக்க: சிட்ரோன் பசால்ட் யூ மற்றும் டாடா கர்வ் ஸ்மார்ட்: எந்த பேஸ் வேரியன்ட் எஸ்யூவி-கூபே வை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்?
இது எந்த கார்களுடன் போட்டியிடுகிறது?
ஒருபுறம் நேரடியாக சிட்ரோன் பசால்ட் உடன் இது போட்டியிடும். மேலும் ஹோண்டா எலிவேட், மாருதி கிராண்ட் விட்டாரா, ஃபோக்ஸ் வேகன் டைகுன், மற்றும் ஹூண்டாய் கிரெட்டா உட்பட காம்பாக்ட் எஸ்யூவி -களுடனும் போட்டியிடும்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
0 out of 0 found this helpful