புதிய வசதிகள் பற்றிய கூடுதல் தகவல்களுடன் Tata Curvv EV காரின் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது!
published on ஜூலை 11, 2024 06:51 pm by dipan for டாடா கர்வ் இவி
- 20 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய நெக்ஸானிலிருந்து ட்ரைவரின் டிஸ்ப்ளே, பேடில் ஷிஃப்டர்கள் மற்றும் ரோட்டரி டிரைவ் மோட் செலக்டர் உள்ளிட்ட சில அம்சங்களை கர்வ் பெறக்கூடும் என்பதை இந்த புதிய டீஸர் உறுதிப்படுத்துகிறது.
-
டாடா கர்வ் இந்தியாவின் முதல் வெகுஜன சந்தை எஸ்யூவி-கூபேவாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சமீபத்திய டீஸரில், டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, பேடில் ஷிஃப்டர்கள் மற்றும் ரோட்டரி டிரைவ் மோட் செலக்டர் ஆகியவை காணப்பட்டன.
-
இது பெட்ரோல், டீசல் மற்றும் எலக்ட்ரிக் போன்ற பல பவர்டிரெயின் ஆப்ஷன்களுடன் வழங்கப்படும்.
-
டாடா கர்வ்வின் விலை ரூ.10.50 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதே சமயம் கர்வ் EV யின் விலை ரூ.20 லட்சமாக இருக்கலாம்.
-
கர்வ் EV ஆனது கர்வ்வுக்கு முன்னதாகவே அறிமுகப்படுத்தப்படும்.
EV மற்றும் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) ஆகிய இரண்டு பதிப்புகளிலும் டாடா கர்வ்வின் அறிமுகம் உடனடியாக உள்ளது, மேலும் கார் தயாரிப்பாளர் வரவிருக்கும் காரின் சில டீஸர்களை வெளியிட்டுள்ளார். சமீபத்திய டீசரில், எஸ்யூவி-கூபேயின் இரண்டு டெஸ்ட் மியூல்களை மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதைக் காண முடிந்தது, அதில் பல அம்சங்கள் காணப்பட்டன. இந்த டீஸர்களில் இருந்து நாம் அறியக்கூடிய அம்சங்களைப் பற்றிய விவரங்கள் இதோ:
டீசர்களில் மூலம் தெரிந்தது கொண்டது என்ன?
டீசர் அதன் முழு டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளேயின் ஒரு பார்வையை அளிக்கிறது, இது டாடா நெக்ஸான் EV-இல் உள்ளது போன்ற அதே 10.25-இன்ச் யூனிட் போன்று இருக்கலாம். கூடுதலாக, டிரைவர் டிஸ்ப்ளேவில் லேன் கீப் அசிஸ்ட் அம்சத்தையும் நம்மால் காண முடிந்தது, கர்வ் EV சில அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) அம்சங்களுடன் வரக்கூடும் என்பதை டீசர் உறுதிப்படுத்துகிறது, அதில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் கோலிஷன் அவாய்டன்ஸ் அசிஸ்ட் போன்ற சிறப்பம்சங்களும் இதில் இருக்கலாம்.
ஆற்றலை மீட்டெடுக்க உதவும் பெடல் ஷிஃப்டர்கள் கர்வ் EV-யில் வருகிறது, இதே அம்சம் நெக்ஸான் EV காரிலும் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, டீஸர் டிரைவ் மோட் செலக்டர் இருப்பதும் டீசர் மூலம் தெரியவந்துள்ளது. ரோட்டரி யூனிட்டின் விரிவான ஆய்வு, கர்வ் EV மூன்று டிரைவர் மோடுகளை வழங்கும் என்பதைக் குறிக்கிறது: மோட்ஸ்-ஈகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட்.
எதிர்பார்க்கப்படும் கூடுதல் வசதிகள்
டாடா கர்வ் எலக்ட்ரிக் எஸ்யூவியில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றிற்கான வயர்லெஸ் சப்போர்ட்டுடன் 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், காற்றோட்டமான முன் சீட்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பைப் பொறுத்தவரை, கர்வ் டூயோவில் ஆறு ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ஆகியவை பொருத்தப்பட்டிருக்கலாம். டாப் வேரியன்ட்களில், 360 டிகிரி கேமரா, முன் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) போன்ற கூடுதல் அம்சங்களுடன் இந்த கார் வரக்கூடும்.
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெயின் ஆப்ஷன்கள்
கர்வ் EV மற்றும் கர்வ் பவர்டிரெய்ன்களுக்கான அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், EV இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது டாடாவின் Acti.ev கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்பதால், சுமார் 500 கிமீ தூரம் வரை பயணிக்கக்கூடும்.
கர்வ் ICE -யை பொறுத்தவரை இது இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: ஒரு புதிய 1.2-லிட்டர் T-GDi டர்போ-பெட்ரோல் இன்ஜின் (125 PS/225 Nm) மற்றும் பழக்கமான Nexon-ஆதாரம் கொண்ட 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் (115 PS/260 Nm) ) டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (DCT) ஆகியவை அடங்கும்.
எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் போட்டியாளர்கள்
டாடா கர்வ் EV விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை ரூ. 20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கக்கூடும் மேலும் இது MG ZS EV மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா EV மற்றும் மாருதி சுஸுகி eVX ஆகியவற்றுடன் போட்டியிடும்.
EV -க்கு பிறகு டாடா கர்வ் ICE அறிமுகப்படுத்தப்படும், இதன் ஆரம்ப விலை ரூ. 10.50 லட்சமாக இருக்கலாம் (எக்ஸ்-ஷோரூம்) என எதிர்பார்க்கப்படுகிறது. இது வரவிருக்கும் சிட்ரோன் பசால்ட் எஸ்யூவி-கூபே மற்றும் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் குரூசர் ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் போன்ற சிறிய மாடல் எஸ்யூவிகளுடன் நேரடியாக போட்டியிடும்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
0 out of 0 found this helpful