Skoda Sub-4m எஸ்யூவி -யின் தெளிவான புதிய ஸ்பை ஷாட்கள் வெளியாகியுள்ளன
published on ஜூன் 21, 2024 02:27 pm by shreyash for ஸ்கோடா kylaq
- 61 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த ஸ்கோடா சப்காம்பாக்ட் எஸ்யூவி -யானது குஷாக்கின் உள்ளூர்மயமாக்கப்பட்ட MQB-A0-IN கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்டது.
-
சமீபத்திய ஸ்பை ஷாட் சப்காம்பாக்ட் எஸ்யூவி -யின் டெயில் லைட் கிளஸ்டரை கூர்ந்து கவனிக்க வைத்தது.
-
பிளாக் வீல் கவர்களுடன் ஸ்டீல் சக்கரங்கள் இருந்ததால் இது லோவர்-ஸ்பெக் வேரியன்ட்டாக இருக்கலாம் என தோன்றுகிறது.
-
10 இன்ச் டச் ஸ்கிரீன், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் சன்ரூஃப் ஆகிய வசதிகள் கொடுக்கப்படலாம்.
-
பாதுகாப்பைப் பொறுத்தவரை இது 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை இருக்கும்.
-
6-ஸ்பீடு MT அல்லது 6-ஸ்பீடு AT உடன் இணைக்கப்பட்ட 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை பெற வாய்ப்புள்ளது.
-
2025 -ஆம் ஆண்டுக்குள் ரூ.8.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கோடா சப்-4எம் எஸ்யூவி இந்தியாவில் ஸ்கோடா விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள கார்களில் ஒன்றாகும். இது 2025 ஆண்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியாவின் அதே MQB-A0-IN கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்டது. வரவிருக்கும் சப்காம்பாக்ட் எஸ்யூவி -யின் சோதனைக் காரை சமீபத்தில் மீண்டும் பார்க்க முடிந்தது, அதன் மூலம் தெரிய வரும் விஷயங்கள் இங்கே
குஷாக்கின் தோற்றம்
சப்காம்பாக்ட் எஸ்யூவி தற்போதுள்ள குஷாக் எஸ்யூவி -யை போன்ற வடிவத்தையும் ஸ்டைலையும் கொண்டிருக்கும் என்பதை சமீபத்திய ஸ்பை ஷாட்கள் காட்டுகின்றன. சோதனை கார் முழுவதுமாக மறைக்கப்பட்டிருந்தாலும் கூட அதன் ஸ்பிளிட் ஹெட்லைட்கள் மற்றும் LED DRLகள் இந்த தெளிவான ஸ்பை ஷாட்களில் இன்னும் கவனிக்கத்தக்கவையாக உள்ளன. குஷாக்கை போலவே, ஸ்கோடாவின் சப்காம்பாக்ட் எஸ்யூவி -யும் அதே பட்டர்ஃபிளை ஸ்கோடா கிரில்லை கொண்டுள்ளது.
சப்காம்பாக்ட் எஸ்யூவி -யின் இந்த சோதனைக் கார் ஆனது பிளாக் வீல் கவர்களுடன் ஸ்டீல் சக்கரங்களை கொண்டிருந்தது. ஸ்கோடா சப்காம்பாக்ட் எஸ்யூவி -யின் LED டெயில் லைட்கள் குஷாக்கில் இருப்பதை போலவே இருக்கும்.
மேலும் பார்க்க: எக்ஸ்க்ளூஸிவ்: இந்தியாவில் 2025 Skoda Kodiaq சோதனை செய்யப்படும் போது முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது
கேபின் மற்றும் வசதிகள்
ஸ்கோடா சப்காம்பாக்ட் எஸ்யூவியின் இன்ட்டீரியரை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், குஷாக்கில் இருக்கும் அதே இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் மற்றும் ஸ்டீயரிங் வீல் இதில் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். 10 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆல் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஆட்டோமெட்டிக் ஏசி, வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் சன்ரூஃப் ஆகிய வசதிகளை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), 360 டிகிரி கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்படலாம்.
ஒரே ஒரு பவர்டிரெய்ன் ஆப்ஷனை பெறலாம்
ஸ்கோடா இந்த சப்காம்பாக்ட் எஸ்யூவி -யை 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே வழங்க வாய்ப்புள்ளது. இது தற்போது இருக்கும் குஷாக் மற்றும் ஸ்லாவியாவுடன் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 115 PS மற்றும் 178 Nm அவுட்புட்டை உருவாக்குகிறது. மேலும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
ஸ்கோடா சப்-4m எஸ்யூவி இந்தியாவில் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.8.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும். டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, மஹிந்திரா XUV 3XO, கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ, ரெனால்ட் கைகர், மற்றும் நிசான் மேக்னைட் ஆகியவை மட்டுமில்லாமல் சப்-4மீ கிராஸ்ஓவர்களான மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் ஆகியவற்றுடனும் போட்டியிடும்.
ரெகுலர் அப்டேட்டுகள் மற்றும் விமர்சனங்களுக்கு கார்தேக்கோ வாட்ஸ்அப் சேனலை பின்தொடரவும்
0 out of 0 found this helpful