• English
  • Login / Register

Kushaq காருடன் சேர்ந்து சோதனை செய்யப்பட்டு வரும் Skoda Sub-4m எஸ்யூவி காரின் ஸ்பை ஷாட்கள் வெளியாகியுள்ளன

published on ஜூன் 25, 2024 03:22 pm by dipan for ஸ்கோடா kylaq

  • 22 Views
  • ஒரு கருத்தை எழுதுக

வரவிருக்கும் ஸ்கோடா எஸ்யூவி ஆனது, டாடா நெக்ஸான் மஹிந்திரா XUV 3 3XO மற்றும் கியா சோனெட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

  • ஸ்கோடாவின் சப்-4m எஸ்யூவி குஷாக் மற்றும் ஸ்லாவியா போன்ற அதே MQ-AO-IN பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட வாய்ப்புள்ளது.

  • சுற்றிலும் LED லைட்ஸ் மற்றும் தற்போதைய ஸ்கோடா கோடியாக்கை போன்ற அலாய் வீல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

  • இது குஷாக் போன்ற ஸ்டீயரிங் 10 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் முழு டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே ஆகியவற்றைப் பெறலாம்.

  • பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை கொடுக்கப்படலாம்.

  • இது 1-லிட்டர் TSI டர்போ-பெட்ரோல் இன்ஜினை (115 PS/178 Nm) பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • ஏப்ரல் 2025 -க்குள் ரூ. 8.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இது விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.

முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையில் ஸ்கோடா சப்-4m எஸ்யூவி மீண்டும் சாலையில் தென்பட்டுள்ளது. இந்த முறை காரின் அளவு மற்றும் வடிவமைப்பைப் பற்றிய ஒரு பார்வையை தெரிந்து கொள்ள முடிகிறது. இது ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்லாவியா போன்ற அதே MQB-A0-IN பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பை ஷாட்டில் நாம் கண்டுபிடித்த விஷயங்களை பற்றி இன்னும் விரிவாகப் பார்ப்போம்:

காரில் புதிதாக என்ன கிடைக்கும் ?

ஸ்கோடாவின் வரவிருக்கும் சப்-4m எஸ்யூவி ஆனது ஸ்கோடா குஷாக் உடன் வடிவமைப்பில் பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறது. இது மற்ற ஸ்கோடா மாடல்களை போலவே செங்குத்து ஸ்லேட்டுகளுடன் கூடிய பட்டர்ஃபிளை கிரில்லை கொண்டுள்ளது. இது LED DRL -களில் இன்டெகிரேட்ட்டட் இண்டிகேட்டர்களுடன் ஸ்பிளிட்-ஹெட்லேம்ப் செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குஷாக்குடன் ஒப்பிடும் போது ​​வரவிருக்கும் சப்-4m எஸ்யூவி ஆனது புதிய வடிவிலான ஒரு ஜோடி பம்பர்களையும் கொண்டிருக்கும். இது குஷாக்கை போன்ற LED டெயில் லைட்ஸையும் பெறலாம் 

Skoda sub 4 metre SUV front fascia
Skoda sub 4 metre SUV  rear fascia

இன்ட்டீரியர்ஸ் மற்றும் வசதிகள்

கேபின் விவரங்களை காட்டும் ஸ்பை ஷாட்கள் எதுவும் இல்லை. ஆனால் மற்றும் குஷாக்கில் உள்ளதை போலவே ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஆட்டோமேட்டிக் ஏர் கண்டிஷனிங், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் 10-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் ஸ்டீயரிங் வீல் இதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இதன் பாதுகாப்புக்காக 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), 6 ஏர்பேக்குகள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை கொடுக்கப்படலாம். 

ஒரே ஒரு இன்ஜின் மட்டுமே கொடுக்கப்படலாம்

வரவிருக்கும் ஸ்கோடா எஸ்யூவி -யில் குஷாக் மற்றும் ஸ்லாவியா மாடல்களில் உள்ள சிறிய 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்படலாம். இந்த இன்ஜின் 115 PS மற்றும் 178 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. இதனுடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் கிடைக்கிறது.

Skoda sub 4 metre SUV  rear fascia

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

ஸ்கோடா சப்-4m எஸ்யூவி இந்தியாவில் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.8.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும். இது டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, மஹிந்திரா XUV 3XO, கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் மற்றும் சப்-4m கிராஸ்ஓவர்களான மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் ஆகியவற்றுடன் போட்டியிடும்.

வாகனங்கள் தொடர்பான அப்டேட்களுக்கு கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை பின்தொடருங்கள்.

மேலும் படிக்க: குஷாக் ஆன் ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Skoda kylaq

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience