10 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை மீண்டும் பெறும் ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஸ்கோடா குஷாக் ஸ்டைல் வேரியன்ட்கள்
published on அக்டோபர் 16, 2023 06:52 pm by shreyash for ஸ்கோடா ஸ்லாவியா
- 35 Views
- ஒரு கருத்தை எழுதுக
செக் கார் தயாரிப்பு நிறுவனம் ஸ்கோடா குஷாக்கின் ஸ்டைல் வேரியன்ட்டில் அலாய் வீல்களை மாற்றியுள்ளது
-
ஸ்லாவியா மற்றும் குஷாக் கார்கள் சந்தையில் அறிமுகமானபோது பெரிய 10 இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப் வழங்கப்பட்டது, ஆனால் சப்ளை செயினில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக அது திரும்ப பெறப்பட்டது.
-
இது ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் குஷாக் ஆகிய இரண்டின் டாப்-ஸ்பெக் ஸ்டைல் வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கிறது.
-
இந்த இரண்டு மாடல்களிலும் எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்டபிள் முன்புற இருக்கைகள் மற்றும் ல்லுமினேட்டட் ஃபுட்வெல்லும் உள்ளன.
-
இருப்பினும், 10 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம் ஏற்கனவே ஸ்கோடா குஷாக்கின் மான்டே கார்லோ எடிஷனில் கிடைக்கிறது.
-
ஸ்லாவியா மற்றும் குஷாக் ஆகிய இரண்டு மாடல்களின் விலையும் ரூ.10.89 லட்சத்தில் தொடங்குகிறது (எக்ஸ்ஷோரூம் இந்தியா முழுவதும்)
செமிகண்டக்டர் சிப்கள் பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக கிடைக்காமல் இருந்த ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஸ்கோடா குஷாக் கார்களில் 10 இன்ச் டச் ஸ்கிரீன்இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இரண்டு மாடல்களின் டாப்-ஸ்பெக் ஸ்டைல் வேரியன்ட்களில் கிடைக்கிறது. இருப்பினும், பெரிய டச் ஸ்கிரீன் அமைப்பு ஏற்கனவே குஷாக்கின் மான்டே கார்லோ பதிப்புடன் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கோடா நிறுவனம் சமீபத்தில் இரண்டு கார்களுக்கான விலை பட்டியலையும் மாற்றியமைத்து, அவற்றின் விலையை குறிப்பிட்ட காலத்திற்கு குறைத்துள்ளது. வேரியன்ட்கள் வாரியாக திருத்தப்பட்ட விலைகளைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
காரில் உள்ள கூடுதல் அம்சங்கள்
பெரிய 10 இன்ச் டச் ஸ்கிரீன் அமைப்பைத் தவிர, ஸ்டைல் வேரியன்ட்க் காரில் உள்ள இரண்டு மாடல்களும் இப்போது மின்சார ரீதியாக சரிசெய்யக்கூடிய முன்புற இருக்கைகள் மற்றும் ஃபுட்வெல் வெளிச்சத்தையும் பெறுகின்றன. ஸ்லாவியா மற்றும் குஷாக் இரண்டிலும் உள்ள பிற பொதுவான அம்சங்கள் 8 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள் ஆகியவை அடங்கும். கூடுதலாக, ஸ்லாவியாவின் ஆம்பிஷன் பிளஸ் காரில் உள்ளமைக்கப்பட்ட டாஷ்கேம் உள்ளது.
பாதுகாப்பை பொறுத்தவரை, இரண்டு கார்களிலும் அதிகபட்சம் ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா ஆகியவை உள்ளன.
இதையும் பாருங்கள் : ஸ்கோடா ஸ்லாவியா மேட் பதிப்பு ரூ.15.52 லட்சம் தொடக்க விலையில் வெளியிடப்படுகிறது.
குஷாக்கில் வித்தியாசமான அலாய் வீல்கள்
முன்னதாக, ஸ்கோடா குஷாக் காரின் ஸ்டைல் வேரியன்ட்டில் டூயல் டோன் 17 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால், தற்போது அதற்கு பதிலாக எளிமையாக தோற்றமளிக்கும் அதே அளவிலான சில்வர் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. மறுபக்கம் குஷாக்கின் மான்டே கார்லோ பதிப்பில் 5-ஸ்போக் டூயல்-டோன் 17 இன்ச் சக்கரங்கள் உள்ளன. குறிப்புக்காக, ஸ்கோடா இரண்டு சக்கர வடிவமைப்புகளையும் வேகா என்ற ஒரே பெயரில் லேபிள் செய்கிறது.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
ஸ்கோடா மற்றும் குஷாக் இரண்டு மாடல்களும் ஒரே மாதிரியான இன்ஜின் ஆப்ஷன்களை பெறுகின்றன: 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (115PS மற்றும் 178Nm) மற்றும் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட் (150PS மற்றும் 250Nm). இரண்டு இன்ஜின்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டாக இருக்கும், ஆனால் முந்தைய மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் மற்றும் பிந்தையது 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT) ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
விலை & போட்டியாளர்கள்
ஸ்கோடா இரண்டு கார்களின் அடிப்படை விலையையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குறைத்துள்ளதால், ஸ்லாவியா மற்றும் குஷாக்கின் விலை இப்போது ரூ .10.89 லட்சத்திலிருந்து தொடங்குகின்றன. ஸ்லாவியா ரூ.19.12 லட்சமாகவும், குஷாக் ரூ.20.01 லட்சமாகவும் உயர்ந்துள்ளது.
ஹோண்டா சிட்டி, ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ், ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சியாஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக ஸ்லாவியா கார் களமிறக்கப்படுகிறது. ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், MG ஆஸ்டர், ஹோண்டா எலிவேட், டொயோட்டா ஹைரைடர், மாருதி கிராண்ட் விட்டாரா, ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆகிய கார்களுடன் ஸ்கோடா குஷாக் போட்டி போடுகிறது.
விலை அனைத்தும் இந்தியா முழுவதற்குமான எக்ஸ்-ஷோரூம். -க்கானவை
மேலும் படிக்க: ஸ்லாவியா ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful