ஸ்கோடா ஸ்லாவியா மேட் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டது... ரூ 15.52 லட்சமாக விலை நிர்ணயம்

published on அக்டோபர் 10, 2023 10:29 pm by shreyash for ஸ்கோடா ஸ்லாவியா

 • 56 பார்வைகள்
 • ஒரு கருத்தை எழுதுக

மேட் எடிஷன் ஸ்கோடா ஸ்லாவியா-வின் டாப்-ஸ்பெக் ஸ்டைல் ​​வேரியன்ட்டை அடிப்படையாக கொண்டது

Skoda Slavia Matte Edition Launched At Rs 15.52 Lakh

 • ஸ்கோடா ஸ்லாவியா மேட் எடிஷன் 1-லிட்டர் மற்றும் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.

 • ஸ்லாவியாவின் மேட் பெயிண்ட் ஆப்ஷனுக்கு வாடிக்கையாளர்கள் ரூ.40,000 அதிகமாக செலுத்த வேண்டும்.

 • உள்ளே, ஸ்லாவியாவின் டாப்-ஸ்பெக் ஸ்டைல் வேரியன்ட்கள் இப்போது பெரிய 10-இன்ச் டச் ஸ்கிரீன் அமைப்பைப் பெறுகின்றன.

 • ஃபுட்வெல் இல்லுமினேஷன் உடன் எலக்ட்ரிக்கல் டிரைவர் மற்றும் கோ-டிரைவரின் இருக்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மூன்று மாதங்களுக்கு முன்பு ஸ்கோடா குஷாக் -கின் மேட் எடிஷனை அறிமுகப்படுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து ஸ்கோடா நிறுவனம் இப்போது ஸ்கோடா ஸ்லாவியா -வுக்கும் அதே போன்ற மேட் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. செடானின் இந்த மேட் எடிஷன் டாப்-ஸ்பெக் ஸ்டைல் வேரியன்ட் அடிப்படையிலானது. கூடுதலாக, ஸ்கோடா ஸ்லாவியாவின் ஸ்டைல் வேரியன்ட்டில் பல புதிய அம்சங்களை இணைத்துள்ளது. மாற்றங்களை பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னால், செடானின் மேட் பதிப்பின் விலையைப் பாருங்கள்.

வேரியன்ட்கள்

வழக்கமான விலை

மேட் எடிஷன் எடிஷன் விலை

வித்தியாசம்

ஸ்டைல் 1-லிட்டர் TSI MT

ரூ.15.12 லட்சம்

ரூ.15.52 லட்சம்

+ ரூ 40,000

ஸ்டைல் 1-லிட்டர் TSI AT

ரூ.16.32 லட்சம்

ரூ.16.72 லட்சம்

+ ரூ 40,000

ஸ்டைல் 1.5 லிட்டர் TSI MT

ரூ.17.32 லட்சம்

ரூ.17.72 லட்சம்

+ ரூ 40,000

ஸ்டைல் 1.5 லிட்டர் TSI DSG

ரூ.18.72 லட்சம்

ரூ.19.12 லட்சம்

+ ரூ 40,000

ஸ்கோடா ஸ்லாவியாவின் மேட் எடிஷனுக்கு, செடானின் டாப்-ஸ்பெக் ஸ்டைல் ​​வேரியன்ட்களுக்கு வாடிக்கையாளர்கள் ரூ.40,000 அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும்.

கார்பன் ஸ்டீல் மேட் கிரே ஷேட்

ஸ்கோடா குஷாக்கைப் போலவே, ஸ்லாவியாவின் மேட் எடிஷன்ம் கார்பன் ஸ்டீல் மேட் கிரே என்ற நிறத்தில் கிடைக்கிறது. அதன் மேட் பெயிண்ட் பூச்சு இருந்தபோதிலும், டோர் ஹேண்டில்கள் மற்றும் பெல்ட்லைன் ஒரு குரோம் ஃபினிஷைத் தக்கவைத்துக் கொள்கின்றன. இந்த வெளிப்புற வண்ண ஆப்ஷனை தவிர, ஸ்கோடா ஸ்லாவியாவின் மேட் பதிப்பில் குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மாற்றங்கள் எதுவும் இல்லை.

இதையும் பார்க்கவும்: ஸ்கோடா குஷாக் லிமிடெட் எடிஷன் மேட் கலர் ஆப்ஷனை பெறுகிறது

புதிய அம்சங்கள்

Skoda Slavia Matte Edition Launched At Rs 15.52 Lakh

ஸ்கோடா ஸ்லாவியாவின் மேட் எடிஷன் அதே பிளாக் மற்றும் பெய்ஜ் கலர் டேஷ்போர்டைக் கொண்டுள்ளது. ஸ்கோடா இப்போது ஸ்லாவியாவில் 10 இன்ச் டச் ஸ்கிரீன் அமைப்பை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது, இது செமிகன்டக்டர் பற்றாக்குறையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. செடானின் டாப்-ஸ்பெக் ஸ்டைல் வேரியன்ட் இப்போது எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் மற்றும் கோ-டிரைவரின் இருக்கைகளையும், கால்வெல் இல்லுமினேஷனையும் வழங்குகிறது.

Skoda Slavia Matte Edition Launched At Rs 15.52 Lakh

ஸ்லாவியாவில் உள்ள மற்ற அம்சங்களில் 8-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, சிங்கிள்-பேன் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவை அடங்கும். ஆறு ஏர்பேக்குகள், ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.

இதையும் பார்க்கவும்: ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் மற்றும் டைகுன் புதிய அம்சங்களைப் பெறுகின்றன மற்றும் இந்த பண்டிகைக் காலத்தின் சலுகைகளை பெறுகின்றன

பவர்டிரெயின்கள்

ஸ்லாவியாவின் மேட் எடிஷன் 1-லிட்டர் (115PS/178Nm) மற்றும் 1.5-லிட்டர் யூனிட் (150PS/250Nm) டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. இரண்டு யூனிட்களும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வழங்கப்படுகின்றன, முந்தையது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனின் ஆப்ஷனை பெறுகிறது, மேலும் மற்றொன்று 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT) ஆப்ஷனை பெறுகிறது.

விலை & போட்டியாளர்கள்

ஸ்கோடா ஸ்லாவியா இப்போது ரூ 10.89 லட்சம் முதல் ரூ 19.12 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) விலையில் உள்ளது. இது ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, மற்றும் மாருதி சுஸூகி சியாஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது.

ஸ்கோடா சமீபத்தில் ஸ்லாவியா மற்றும் குஷாக்கின் பேஸ்-ஸ்பெக் வேரியன்ட்களின் விலையை குறிப்பிட்ட காலத்திற்கு குறைத்துள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த கட்டுரையை பார்க்கலாம்.

மேலும் படிக்க: ஸ்லாவியாவி ஆன் ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஸ்கோடா ஸ்லாவியா

Read Full News
Used Cars Big Savings Banner

found ஏ car you want க்கு buy?

Save upto 40% on Used Cars
 • quality பயன்படுத்திய கார்கள்
 • affordable prices
 • trusted sellers
view used ஸ்லாவியா in புது டெல்லி

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

 • டிரெண்டிங்கில் செய்திகள்
 • சமீபத்தில் செய்திகள்

trendingசேடன் கார்கள்

 • லேட்டஸ்ட்
 • உபகமிங்
 • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience