Skoda Kylaq அறிமுகமாகவுள்ள தேதி இதுதான்
published on செப் 23, 2024 07:04 pm by shreyash for ஸ்கோடா kylaq
- 112 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவில் கைலாக் ஆனது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் இது டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வென்யூ ஆகிய கார்களுடன் போட்டியிடும்.
-
கைலாக் இந்தியாவில் ஸ்கோடாவின் என்ட்ரி லெவல் எஸ்யூவி ஆக இருக்கும் மற்றும் குஷாக்கிற்கு கீழே விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
-
இதன் வடிவமைப்பு குஷாக் போலவே இருக்கும்.
-
புதிய ஸ்பிளிட்டட் LED லைட்டிங் செட்டப் மற்றும் L-வடிவ LED டெயில் லைட்ஸ் உடன் வரலாம்.
-
உள்ளே இது ஸ்கோடாவின் 2-ஸ்போக் ஸ்டீயரிங் உடன் குஷாக் போலவே உள்ள கேபின் உடன் வரும்.
-
10.1 இன்ச் டச் ஸ்கிரீன், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் சன்ரூஃப் ஆகியவற்றுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.
-
8.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஸ்கோடா கைலாக் ஆனது ஸ்கோடாவின் திட்டமான 'இந்தியா 2.5' ன் கீழ் வெளியிடப்படவுள்ள புதிய தயாரிப்பாக இருக்கும். இந்த சப்காம்பாக்ட் எஸ்யூவி 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஸ்கோடா நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த சப்காம்பாக்ட் எஸ்யூவி -யின் பெயரை வெளியிட்டது. இப்போது ஸ்கோடா நிறுவனம் கைலாக் கார் நவம்பர் 6, 2024 அன்று அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் வரவிருக்கும் அனைத்து புதிய ஸ்கோடா காரில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பது இங்கே.
குஷாக் -ல் இருந்து ஈர்க்கப்பட்ட வடிவமைப்பு
ஸ்கோடா கைலாக் சப்-4மீ எஸ்யூவி ஆக இருந்தாலும் கூட அதன் பெரிய உடன்பிறப்பான குஷாக் உடன் இருந்து வடிவமைப்புக்காக சில விஷயங்களை கடன் வாங்கும். சில டீஸர்கள் மற்றும் சில ஸ்பை ஷாட்களின் அடிப்படையில் பார்க்கும் போது கிரில் மற்றும் சைடு விண்டோ லைன் குஷாக்கை போலவே இருக்கும். இருப்பினும், கைலாக் புதிய ஸ்பிளிட்டட் LED லைட் செட்டப் உடன் வரலாம். ஹெட்லைட்கள் LED DRL களுக்கு கீழே இருக்கும். பின்புறத்தில் இது இன்வெர்டட் எல்-வடிவ LED டெயில் லைட்கள் இருக்கும்.
மேலும் பார்க்க: புத்த சர்வதேச சர்க்யூட் (BIC) -ல் ஒரு நாள். தோற்றம்: ஸ்கோடா ஸ்லாவியா மான்டே கார்லோ
இன்ட்டீரியர் மற்றும் எதிர்பார்க்கப்படும் வசதிகள்
உள்ளே இருந்து கைலாக் எப்படி இருக்கும் என்பதை ஸ்கோடா நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. ஆனால் டாஷ்போர்டு தளவமைப்பு குஷாக் மற்றும் ஸ்லாவியா ஆகிய கார்களின் அமைப்பைப் போலவே இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஸ்கோடாவின் சப்-4எம் எஸ்யூவி 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே சப்போர்ட் உடன் 10.1 இன்ச் டச்ஸ்கிரீன் யூனிட்டுடன் வரலாம்.
கைலாக் ஆனது 8 இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஆட்டோமெட்டிக் ஏசி, வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் ஆகியவற்றைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டான), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை கொடுக்கப்படலாம்.
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன்
ஸ்கோடாவினால் கைலாக் சப்காம்பாக்ட் எஸ்யூவி -யை 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கொடுக்கும். இது 115 PS மற்றும் 178 Nm பவர் டெலிவரியை கொடுக்கலாம். ஸ்லாவியா மற்றும் குஷாக் உடன் இந்த இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டருடன் இருக்கலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
ஸ்கோடா கைலாக் காரின் விலை ரூ.8.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மற்றும் மஹிந்திரா XUV 3XO மட்டுமல்லாமல் சப்-4மீ கிராஸ்ஓவர்களான மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் ஆகியவற்றுடனும் போட்டியிடும்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
0 out of 0 found this helpful