• English
    • Login / Register

    Skoda Kylaq -ன் மீண்டும் ஒரு டீசர் வெளியாகியுள்ளது

    dipan ஆல் அக்டோபர் 14, 2024 02:21 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

    42 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    ஸ்கோடா கைலாக் சப்காம்பாக்ட் எஸ்யூவி நவம்பர் 6, 2024 அன்று உலகளவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் இதன் விலை ரூ. 8.5 லட்சத்தில் இருந்து தொடங்கும் (எக்ஸ்-ஷோரூம்) என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கைலாக்கின் சமீபத்திய டீஸர் எக்ஸ்ட்ரீயர் டிசைனை உருமறைப்புடன் காட்டியுள்ளது.

    • ஸ்ப்ளிட் ஹெட்லைட் டிசைன், ரேப்பரவுண்ட் டெயில் லைட்டுகள் மற்றும் பிளாக் அலாய் வீல் டிசைன்.

    • இது குஷாக் போன்ற கேபின், 10.1 இன்ச் டச்ஸ்கிரீன் மற்றும் சன்ரூஃப் போன்ற ஹைலைட்ஸ் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை (115 PS/178 Nm) பயன்படுத்த வாய்ப்புள்ளது.

    • விலை ரூ.8.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்கோடா கைலாக் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் வரவிருக்கும் சப்காம்பாக்ட் எஸ்யூவி-யின் மற்றொரு டீஸரை வாகன நிறுவனம் வெளியிட்டுள்ளது. சமீபத்திய டீசரில், உருமறைப்பு செய்யப்பட்ட கைலாக், ஹெட்லைட்கள், டெயில் லைட்டுகள் மற்றும் அலாய் வீல்களை காட்சிப்படுத்தும் அதன் எக்ஸ்ட்ரீயர் டிசைன் அமைப்புகளின் ஒரு பார்வையை வழங்குகிறது. ஸ்கோடா கைலாக்கின் இந்த டீசரில் வெளிப்படுத்தப்பட்ட விவரங்களை மேலும் ஆராய்வோம்.

    எதைக் காண முடிகிறது?

    Skoda Kylaq front
    Skoda Kylaq headlights

    குஷாக் மற்றும் ஸ்லாவியா போன்ற மாடல்களை நினைவூட்டும் வகையில் ஸ்கோடாவின் சிக்னேச்சர் கிரில்லைப் பெறுகிறது. இது ஸ்பிளிட்-ஹெட்லைட் டிசைனை கொண்டுள்ளது. இதில் LED DRL-கள் மற்றும் LED புரொஜெக்டர் ஹெட்லைட்கள் உள்ளன. முன் பம்பருக்கு சற்று மேலே ஹெக்சாகோனால் டிசைன் கூறுகளை உள்ளடக்கிய கீழ் கிரில்லையும் பெறுகிறது.

    Skoda Kylaq side
    Skoda Kylaq alloys

    ப்ரொபைலில் இது குஷாக் ஸ்போர்ட்லைன் வேரியன்டில் காணப்படும் 16-இன்ச் அலாய் வீல்களைப் போன்ற பிளாக்-அவுட் மல்டி-ஸ்போக் அலாய் வீல்களைக் கொண்டுள்ளது. டர்ன் இன்டிகேட்டர்கள் எக்ஸ்ட்ரீயர் ரியர்வியூ மிரர்களில் (ORVMs) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன, மேலும் இதில் நீங்கள் ரூஃப் ரெயில்களையும் காணலாம்.

    Skoda Kylaqtail light

    ரியரில் ஒரு பம்ப் டெயில்கேட் முழுவதும் ஒரு டெயில் லைட் யூனிட்டிலிருந்து மற்றொன்று வரை செல்கிறது, இது இணைக்கப்பட்ட டெயில் லைட் அமைப்பிற்கான சாத்தியம் உள்ளது என்பதை இது குறிக்கிறது. 

    மேலும் படிக்க: இந்தப் பண்டிகைக் காலத்தில் சப்காம்பாக்ட் எஸ்யூவி-யை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆறு மாதங்கள் வரை ஆகலாம்

    எதிர்பார்க்கப்படும் உட்புறம் மற்றும் வசதிகள்

    கைலாக்கின் முழு உட்புறத்தையும் ஸ்கோடா இன்னும் வெளிப்படுத்தவில்லை என்றாலும் அதன் சமீபத்திய டீஸர் பிளாக் கலர் சீட்களை பீஜ் டாப் உடன் காட்டப்படுகிறது, ஆனால் இறுதி தயாரிப்பு மாடலில் வேறுபட்ட உட்புற டிசைன் தீம்மை பெறக்கூடும். 

    Skoda Kushaq 10-inch touchscreen

    டேஷ்போர்டு லேஅவுட் ஸ்கோடா குஷாக்கிலிருந்து உத்வேகம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே சப்போர்ட் சிஸ்டத்துடன் 10.1 இன்ச் டச்ஸ்கிரீன் உள்ளது. கைலாக் 8 இன்ச் முழு டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஆட்டோமேட்டிக் ஏசி, காற்றோட்டமான முன்புற சீட்கள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் சிங்கள்-பேன் சன்ரூஃப் ஆகியவற்றை பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கைலாக்கின் பாதுகாப்புக்காக இதில் 6 ஏர்பேக்குகள் (தரநிலையாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை கொடுக்கப்படலாம்.

    எதிர்பார்க்கப்படும் பவர்டிரெயின் ஆப்ஷன்கள்

    Skoda Kylaq side

    ஸ்கோடா கைலாக் சப்காம்பாக்ட் எஸ்யூவி, குஷாக் மற்றும் ஸ்லாவியாவின் குறைந்த வேரியன்ட்களில் காணப்படும் அதே 1-லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜினுடன் பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட 115 PS பவர் மற்றும் 178 NM டார்க்கை வழங்குகிறது.

    மேலும் படிக்க: இந்திய வாகன சந்தையில் திரு. ரத்தன் டாடா -வின் பங்களிப்பை கார்தேக்கோ நினைவு கூர்கிறது

    எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

    ஸ்கோடா கைலாக் எஸ்யூவியின் விலை ரூ.8.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிஸான் மேக்னைட், டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3X0 போன்ற மற்ற சப்காம்பாக்ட் எஸ்யூவிகளுடன் போட்டியிடும். கூடுதலாக, இது மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்ஸர் போன்ற சப்-4m கிராஸ்ஓவர்களுக்கு போட்டியாக இருக்கும்.

    ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளைப் பெற கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    was this article helpful ?

    Write your Comment on Skoda கைலாக்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience