அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை செய்யப்பட்டு வரும் Skoda Kylaq கார்
published on அக்டோபர் 22, 2024 08:04 pm by shreyash for ஸ்கோடா kylaq
- 39 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஸ்கோடா கைலாக் இந்தியாவில் ஸ்கோடா -வின் 'இந்தியா 2.5' திட்டத்தின் கீழ் அறிமுகமாகவுள்ள ஒரு புதிய காராக இருக்கும். மேலும் இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் எஸ்யூவி காராக இருக்கும்.
-
ஸ்கோடா கைலாக் என்பது MQB-A0-IN தளத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சப்-4m எஸ்யூவி ஆகும். இந்த தளம் ஏற்கெனவே ஸ்லாவியா மற்றும் குஷாக் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
-
ஆல் LED லைட்டிங் செட்டப் மற்றும் ஒரு சிக்னேச்சர் ஸ்கோடா கிரில் ஆகியவற்றை வெளியில் பார்க்க முடியும்.
-
வென்டிலேஷன் ஃபங்ஷன் கொண்ட 6 வே அட்ஜெஸ்ட்டபிள் முன் இருக்கைகள் போன்ற வசதிகள் கிடைக்கும்.
-
6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக கொடுக்கப்படும்.
-
1 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் 115 பிஎஸ் ஆற்றலுடன் இருக்கும்.
-
ரூ.8.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் வரும் நவம்பர் 6 2024 அன்று செக் கார் தயாரிப்பாளரான ஸ்கோடாவின் என்ட்ரி-லெவல் தயாரிப்பாக ஸ்கோடா கைலாக் அறிமுகமாக உள்ளது. அதன் உலகளாவிய அறிமுகத்துக்கு முன்னதாக வெளிப்புறம் முற்றிலும் மறைக்கப்பட்ட கைலாக்கின் சோதனைக் கார்களில் ஒன்று போட்டோவில் சிக்கியுள்ளது.
பார்க்க முடிந்த விஷயங்கள் என்ன ?
புதிய ஸ்பை ஷாட்கள் கைலாக்கின் பக்கமும் பின்புறமும் எப்படி இருக்கும் என்பதைத் தெளிவாக நமக்கு காட்டுகின்றன. இந்தக் குறிப்பிட்ட சோதனைக் காரில் பிளாக்டு அவுட் அலாய் வீல்களை பார்க்க முடிந்தது. மேலும் அது ஒரு முரட்டுத்தனமான தோற்றத்தைக் கொடுக்கும் சில்வர் கலரில் ஃபினிஷ் செய்யப்பட்ட ரூஃப் ரெயில்களும் இருந்தன. பின்புறத்தில் உள்ள டெயில் லைட்ஸ் இன்னும் மூடப்பட்டிருந்தாலும், எங்கள் கணிப்பின்படி மற்றும் முந்தைய பார்வைகளின் அடிப்படையில் இது இன்வெர்ட்டட் எல்-வடிவ LED டெயில் லைட்களை கொண்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஸ்கோடா சமீபத்தில் கைலாக் அறிமுகத்திற்கு முன்னதாக அதன் அளவுகள் உட்பட சில விவரங்களை வெளியிட்டது. கைலாக் 3,995 மி.மீ நீளம் மற்றும் 189 மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன் 2,566 மி.மீ வீல்பேஸை கொண்டுள்ளது.
மேலும் பார்க்க: Maruti Brezza -வை விட Skoda Kylaq கூடுதலாக 5 வசதிகளுடன் வரலாம்
இன்ட்டீரியர் மற்றும் எதிர்பார்க்கப்படும் வசதிகள்
ஸ்கோடா குஷாக் டச் ஸ்கிரீன் படம் எடுத்துக்காட்டுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது
கைலாக் உட்புறத்தில் எப்படி இருக்கும் என்பதை ஸ்கோடா இன்னும் காட்டவில்லை. ஆனால் டாஷ்போர்டு அமைப்பு குஷாக்கை போலவே இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இது 10.1-இன்ச் டச் ஸ்கிரீன், 8-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் ஆகியவற்றுடன் வரும். இது 6 வே அட்ஜெஸ்ட்டபிள் முன்பக்க சீட் வென்டிலேஷன் ஃபங்ஷனை பெறும்.
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக) இருக்கும், அதே சமயம் இது எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் 360-டிகிரி கேமராவையும் கொண்டிருக்கும்.
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன்
ஸ்கோடா 115 PS மற்றும் 178 Nm பவர் அவுட்புட்டை வழங்கும் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் கைலாக் சப்காம்பாக்ட் எஸ்யூவியை வழங்கும். இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டருடன் இணைக்கப்படும்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
இதன் விலை ரூ.8.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV 3XO உடன் மட்டுமில்லாமல் சப்-4மீ கிராஸ்ஓவர் கார்களான மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் போன்றவற்றுக்கும் போட்டியாக இருக்கும்.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.