சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

பாரத் NCAP -ல் 5-ஸ்டார் மதிப்பீட்டை பெற்றது Skoda Kylaq

ஸ்கோடா kylaq க்காக ஜனவரி 15, 2025 10:12 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

பாரத் என்சிஏபி -யால் கிராஷ்-டெஸ்ட் செய்யப்பட்ட ஸ்கோடா - வின் முதல் கார் ஸ்கோடா கைலாக் ஆகும்.

  • இது 30.88/32 மதிப்பெண்களைப் பெற்றது. எனவே பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்காக 5 நட்சத்திர மதிப்பீடு கொடுக்கப்பட்டது .

  • குழந்தைகளுக்கான பாதுகாப்பில் அது 45/49 மதிப்பெண்களைப் பெற்றது. அதற்காகவும் 5 நட்சத்திரங்களையும் பெற்றது.

  • இது 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் ஒரு ADAS தொகுப்புடன் வருகிறது.

  • கைலாக் காரின் விலை ரூ.7.89 லட்சம் முதல் ரூ.14.40 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது.

இந்தியாவில் ஸ்கோடாவின் மிக சமீபத்தில் விற்பனைக்கு வந்த காரான ஸ்கோடா கைலாக் சமீபத்திய சோதனைகளில் பாரத் NCAP -லிருந்து 5-ஸ்டார் கிராஷ் டெஸ்ட் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இது பெரியவர்களுக்கான பாதுகாப்பில் (AOP) 30.88/32 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் (COP) சோதனைகளில் 45/49 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இந்த முடிவுகள் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் முழுமையான நட்சத்திர மதிப்பீடுகளைப் பெற உதவியது.

கிராஷ் டெஸ்ட் சோதனைகளை விரிவாக பார்ப்போம்.

பெரியவர்களுக்கான பாதுகாப்பு (AOP)

ஃபிரன்டல் ஆஃப்செட் டிமாஃர்பிள் பேரியர் டெஸ்ட்: 15.04/16 புள்ளிகள்

சைடு டிமாஃர்பிள் பேரியர் டெஸ்ட்: 15.84/16 புள்ளிகள்

பெரியவர்களுக்கான முன்பக்க தாக்க சோதனையில் ஸ்கோடா கைலாக் கோ டிரைவரின் அனைத்து பகுதிகளுக்கும், ஓட்டுநரின் மார்பு மற்றும் இடது கால் முன்னெலும்பு தவிர டிரைவரின் அனைத்து பகுதிகளுக்கும் 'நல்ல' பாதுகாப்பு கிடைத்தது. பாதுகாப்பு 'போதுமானதாக' மதிப்பிடப்பட்டது.

பக்கவாட்டு முன்பக்க ஆஃப்செட் டிமாஃர்பிள் பேரியர் சோதனையில் பெரியவர்களுக்கான போலி பொம்மையின் மார்பு ‘போதுமான’ பாதுகாப்பைப் பெற்றது. அதே சமயம் தலை, வயிறு மற்றும் இடுப்புப் பகுதிக்கான பாதுகாப்பு ‘நல்லது’ என மதிப்பிடப்பட்டது. சைடு போல் இம்பாக்ட் (போல்) சோதனையில் அனைத்து பாகங்களும் 'நல்ல' பாதுகாப்பு பெற்றன.

குழந்தைகளுக்கான பாதுகாப்பு (COP)

டைனமிக் மதிப்பெண்: 24/24 புள்ளிகள்

சைல்டு ரீஸ்ட்டிரெயின்ட் சிஸ்டம் (CRS) இன்ஸ்டாலேஷன் மதிப்பெண்: 12/12 புள்ளிகள்

வாகன மதிப்பீட்டு மதிப்பெண்: 9/13 புள்ளிகள்

குழந்தைகளுக்கான பாதுகாப்பைப் பொறுத்தவரையில் சைல்டு ரீஸ்ட்டிரெயின்ட் சிஸ்டம் பயன்படுத்தி டைனமிக் சோதனையில் முழுப் புள்ளிகளைப் (24 -க்கு 24) பெற்றது. 18 மாத மற்றும் 3 வயதுடைய டம்மியின் முன் மற்றும் பக்க பாதுகாப்பு இரண்டிற்கும், டைனமிக் மதிப்பெண் முறையே 8 -க்கு 8 மற்றும் 4 -க்கு 4 ஆகும்.

மேலும் படிக்க: மஹிந்திரா XEV 7e (XUV700 EV) வடிவமைப்பு அறிமுகத்திற்கு இணையத்தில் வெளியானது

ஸ்கோடா கைலாக்: பாதுகாப்பு வசதிகள்

ஸ்கோடா கைலாக் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), பின்புற பார்க்கிங் கேமரா, மல்டி-கோலிஷன்-பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) போன்றவற்றுடன் வலுவான பாதுகாப்பு தொகுப்புடன் வருகிறது.

ஸ்கோடா கைலாக்: பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

ஸ்கோடா கைலாக் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. அதன் விவரங்கள் இங்கே:

இன்ஜின்

1-லிட்டர் டர்போ-பெட்ரோல்

பவர்

115 PS

டார்க்

178 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT*

*AT = டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

ஸ்கோடா கைலாக்: விலை மற்றும் போட்டியாளர்கள்

ஸ்கோடா கைலாக் காரின் விலை ரூ.7.89 லட்சம் முதல் ரூ.14.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது. இது மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், சோனெட் மற்றும் ஹூண்டாய் வென்யூ போன்ற பிற சப்-4m எஸ்யூவி -களுக்கு போட்டியாக உள்ளது.

கைலாக்கின் கிராஷ் டெஸ்ட் முடிவுகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கீழே உள்ள கமென்ட் பகுதியில் எங்களிடம் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on Skoda kylaq

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
எலக்ட்ரிக்
Rs.48.90 - 54.90 லட்சம்*
பேஸ்லிப்ட்
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.18.90 - 26.90 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.21.90 - 30.50 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை