அறிமுகத்திற்கு முன்னதாகவே இணையத்தில் Mahindra XEV 7e (XUV700 EV) காரின் வடிவமைப்பு வெளியானது
published on ஜனவரி 15, 2025 11:06 pm by shreyash for மஹிந்திரா xev இ8
- 1 View
- ஒரு கருத்தை எழுதுக
XEV 7e ஆனது XUV700 போன்ற அதே வடிவமைப்பை தக்க வைத்துக் கொண்டிருந்தாலும் கூட முன்பக்கம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட XEV 9e எலக்ட்ரிக் எஸ்யூவி-கூபேயிலிருந்து நிறைய ஈர்க்கப்பட்டது போலத் தெரிகிறது.
-
XEV 7e அல்லது XUV700 EV மஹிந்திராவின் புதிய XEV சப் பிராண்டில் 9e -க்கு பிறகு வெளியாகவுள்ள இரண்டாவது மாடலாக இருக்கும்.
-
இன்வெர்டட் L-வடிவ கனெக்டட் LED DRLகள் மற்றும் ஸ்பிளிட்டட் ஹெட்லைட் செட்டப் ஆகியவை இருக்கின்றன.
-
வொயிட் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் டூயல்-டோன் பிளாக் மற்றும் வொயிட் இன்ட்டீரியர் தீம் கொடுக்கப்படலாம்.
-
டிரிபிள் ஸ்கிரீன் செட்டப், மல்டி-சோன் ஏசி மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
59 kWh மற்றும் 79 kWh பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வர வாய்ப்புள்ளது. இது சுமார் 650 கிமீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கிறது.
-
விலை ரூ.20.9 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா XUV700 காரின் எலக்ட்ரிக் வெர்ஷன் விரைவில் வெளியாக உள்ளது. இது 'XEV 7e’ என்று அழைக்கப்படும். இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி ஆனது XEV 9e எஸ்யூவி-கூபே வுக்கு எஸ்யூவி இணையாக இருக்கும். XEV 7e இன் தயாரிப்பு-ஸ்பெக் பதிப்பின் வடிவமைப்பு ஆன்லைனில் வெளியானது. மேலும் முழுமையான வெளிப்புற வடிவமைப்பும் தெரிய வந்துள்ளது.
தோற்றம் XUV700 போலவே உள்ளது
ஆல்-எலக்ட்ரிக் XEV 7e-ன் ஒட்டுமொத்த தோற்றமும் அதன் ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) இணையான XUV700 போன்றது. அதன் ஜன்னல் லைன்ஸ் மற்றும் LED டெயில் லைட்கள் உள்ளன. இருப்பினும், முன்புறம் XEV 9e போலவே உள்ளது. இதில் தலைகீழ் L- வடிவ கனெக்டட் LED DRLகள் மற்றும் ஸ்பிளிட்டட் ஹெட்லைட் அமைப்பு உள்ளது. மற்றொரு EV என்பதை காட்டும் மாற்றத்தில் பக்கவாட்டில் ஏரோடைனமிக்ஸ் முறையில் வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் உள்ளன.
XEV 7e -ன் இன்ட்டீரியரை பற்றிய ஒரு பார்வையும் கிடைத்தது. மேலும் இது வெள்ளை கலர் சீட் செட்டப்போடு பிளாக் மற்றும் வொயிட் கேபின் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. இது XEV 9e -ன் உள்ளே காணப்படுவது போல் இல்லுமினேட்டட் 'இன்ஃபினிட்டி' லோகோவுடன் 2-ஸ்போக் ஸ்டீயரிங் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க: ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் வரவுள்ள புதிய எஸ்யூவி -கள்
எதிர்பார்க்கப்படும் வசதிகள்
மஹிந்திரா இந்த காரில் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் பயணிகள் பக்கத்துக்கு 3 ஸ்கிரீன் செட்டப் (ஒருவேளை ஒவ்வொன்றும் 12.3-இன்ச்) போன்ற வசதிகளுடன் வழங்கலாம். இது மல்டி-ஜோன் ஏசி, பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், மெமரி ஃபங்ஷன்களுடன் கூடிய பவர்டு மற்றும் வென்டிலேஷன் கொண்ட முன் இருக்கைகள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்புக்காக லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) இருக்கும். அதே நேரத்தில் XEV 9e -ல் காணப்படுவது போல் 7 ஏர்பேக்குகள் மற்றும் 360-டிகிரி கேமராவுடன் பொருத்தப்பட்டிருக்கும்.
எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் விவரங்கள்
XEV 7e -ன் பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் விவரங்கள் பற்றிய எந்த விவரங்களையும் மஹிந்திரா வெளியிடவில்லை. இருப்பினும் இது XEV 9e உடன் வழங்கப்படும் அதே பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் இது வரலாம் என்று எதிர்பார்க்கிறோம். விரிவான விவரங்கள் பின்வருமாறு:
பேட்டரி பேக் |
59 kWh |
79 kWh |
கிளைம்டு ரேஞ்ச் (MIDC கட்டம் I+II) |
542 கி.மீ |
656 கி.மீ |
எலக்ட்ரிக் மோட்டார் எண்ணிக்கை |
1 |
1 |
பவர் |
231 PS |
286 PS |
டார்க் |
380 Nm |
380 Nm |
டிரைவ் டைப் |
RWD |
RWD |
மஹிந்திரா ஆல்-எலக்ட்ரிக் XUV700 உடன் ஆல்-வீல்-டிரைவ் (AWD) டிரைவ் டிரெய்னின் ஆப்ஷனையும் வழங்க முடியும். ஏனெனில் இது ஏற்கனவே அதன் ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) பதிப்பில் கிடைக்கிறது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா XEV 7e காரின் விலை ரூ.20.9 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம். இது டாடா சஃபாரி EV -க்கு க்கு இது நேரடி போட்டியாக இருக்கும் மேலும் XEV 9e க்கு ஒரு எஸ்யூவி மாற்றாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.