2024 -க்கான அப்டேட்டை கார்களுக்கு கொடுத்த ரெனால்ட் நிறுவனம் … புதிய வசதிகள் கிடைக்கும், விலையும் குறைந்துள்ளது !
published on ஜனவரி 10, 2024 03:42 pm by rohit for ரெனால்ட் க்விட்
- 423 Views
- ஒரு கருத்தை எழுதுக
க்விட் மற்றும் ட்ரைபர் புதிய ஸ்கிரீன்களை பெறுகின்றன, அதே நேரத்தில் கைகர் காரின் கேபின் கூடுதலான பிரீமியமாக தோற்றத்தை பெறும் வகையில் அப்டேட் செய்யப்படும்.
-
க்விட் இப்போது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றை கொண்ட விலை குறைவான வேரியன்ட்டாக இருக்கின்றது.
-
ட்ரைபரில் உள்ள புதிய அம்சங்களில் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும்.
-
கைகர் இப்போது செமி-லெதரெட் இருக்கைகள், டூயல்-டோன் கேபின் தீம் மற்றும் லோவர் வேரியன்ட்களில் ஆட்டோ ஏசி ஆகியவற்றுடன் வருகிறது.
-
க்விட் காரின் விலை இப்போது ரூ. 4.70 லட்சத்தில் இருந்து ரூ.6.12 லட்சமாக உள்ளது.
-
ரெனால்ட் இப்போது ட்ரைபரை ரூ.6 லட்சம் முதல் ரூ.8.75 லட்சம் வரை விற்பனை செய்கிறது.
-
கைகரின் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரை இருக்கின்றது.
ஒவ்வொரு ஆண்டின் முதல் பகுதியிலும் கார் நிறுவனங்கள் சந்தையில் உள்ள போட்டியை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் கார்களுக்கு MY (மாடல் இயர்) அப்டேட்டை வழங்குகிறார்கள். இப்போது, ரெனால்ட் இந்தியா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் மூன்று மாடல்களிலும் அப்டேட்டை கொடுத்துள்ளது, அதே நேரத்தில் சில வேரியன்ட்களின் விலையையும் குறைத்துள்ளது. அதைப் பற்றிய தகவல்களை இங்கே விரிவாகப் பார்ப்போம்:
க்விட்
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
RX |
ரூ.4.70 லட்சம் |
ரூ.4.70 லட்சம் |
எந்த மாற்றமும் இல்லை |
RXL |
ரூ.5 லட்சம் |
நிறுத்தப்பட்டது |
– |
RXL (O) |
ரூ.5.21 லட்சம் |
ரூ.5 லட்சம் |
(ரூ.21,000) |
RXL (O) AMT [புதியது] |
– |
ரூ.5.45 லட்சம் |
– |
RXT |
ரூ.5.67 லட்சம் |
ரூ.5.50 லட்சம் |
(ரூ 17,000) |
RXT AMT |
ரூ.6.12 லட்சம் |
ரூ.5.95 லட்சம் |
(ரூ 17,000) |
கிளைம்பர் |
ரூ.5.88 லட்சம் |
ரூ.5.88 லட்சம் |
எந்த மாற்றமும் இல்லை |
கிளைம்பர் AMT |
ரூ.6.33 லட்சம் |
ரூ.6.12 லட்சம் |
(ரூ 21,000) |
ரெனால்ட் க்விட் காரில் கொடுக்கப்பட்டுள்ள அப்டேட்கள் குறைவானது என்றாலும் கூட அவை குறிப்பிடத்தக்கவை. ரெனால்ட் அனைத்து வேரியன்ட்களிலும் பின்புற சீட்பெல்ட் ரிமைண்டர் -களை கொடுத்துள்ளது. கூடுதலாக, டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹையர் RXT மற்றும் க்ளைம்பர் டிரிம்களுக்கு மட்டுமே இருந்தது, இப்போது குறைந்த RXL (O) வேரியன்ட்லிருந்து கிடைக்கிறது. இந்த அப்டேட் மூலம், க்விட் ஒரு டச் ஸ்க்ரீன் யூனிட் -டை பெறும் விலை குறைவான கார்களில் ஒன்றாக மாறுகிறது.
ரெனால்ட் 5-ஸ்பீடு AMT -யை மிட்-ஸ்பெக் RXL (O) வேரியன்ட்டில் வழங்க முடிவு செய்துள்ளது, இது பட்ஜெட்டில் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை விரும்புவோருக்கு ஏற்ற ஒன்றாக உள்ளது.
ட்ரைபர்
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
RX |
ரூ.6.34 லட்சம் |
ரூ.6 லட்சம் |
(ரூ.34,000) |
RXL |
ரூ.7.05 லட்சம் |
ரூ.6.80 லட்சம் |
(RS.25,000) |
RXT |
ரூ.7.61 லட்சம் |
ரூ.7.61 லட்சம் |
எந்த மாற்றமும் இல்லை |
RXT AMT |
ரூ.8.13 லட்சம் |
ரூ.8.13 லட்சம் |
எந்த மாற்றமும் இல்லை |
RXZ |
ரூ.8.23 லட்சம் |
ரூ.8.23 லட்சம் |
எந்த மாற்றமும் இல்லை |
RXZ AMT |
ரூ.8.75 லட்சம் |
ரூ.8.75 லட்சம் |
எந்த மாற்றமும் இல்லை |
ரெனால்ட் ட்ரைபர் இப்போது புதிய ஸ்டெல்த் பிளாக் நிறத்திலும் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி, ட்ரைபரின் ஒவ்வொரு வேரியன்ட்டிலும் சில புதிய அம்சங்களை ரெனால்ட் வழங்கியுள்ளது:
-
RXE- டில்ட்-அட்ஜஸ்ட்டபிள் ஸ்டீயரிங் மற்றும் மேனுவலி அட்ஜஸ்ட்டபிள் ORVM -கள்
-
RXL- பின்புற ஏசி வென்ட்கள்
-
RXT- ரிவர்சிங் கேமரா, பின்புற வைப்பர், 12V பவர் சாக்கெட் மற்றும் ஒரு PM2.5 ஏர் பியூரிஃபையர்.
-
RXZ- ஒரு 7-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், டிரைவர்-சீட் ஆர்ம்ரெஸ்ட், எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் ORVM -கள் மற்றும் ஒரு PM2.5 ஏர் பியூரிஃபையர்.
சப்-4m கிராஸ்ஓவர் MPV -யின் அனைத்து வேரியன்ட்களும் இப்போது பின்புற சீட்பெல்ட் ரிமைண்டர் மற்றும் LED கேபின் லைட்களுடன் வருகின்றன.
இதையும் பாருங்கள்: டிசம்பர் 2023ல் அதிகம் விற்பனையான டாப் 15 கார்களை பாருங்கள்
கைகர்
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
RX |
ரூ.6.50 லட்சம் |
ரூ.6 லட்சம் |
(ரூ.50,000) |
RXL (புதியது) |
– |
ரூ.6.60 லட்சம் |
– |
RXL AMT (புதியது) |
– |
ரூ.7.10 லட்சம் |
– |
RXT |
ரூ.7.92 லட்சம் |
ரூ.7.50 லட்சம் |
(ரூ.42,000) |
RXT (O) |
ரூ.8.25 லட்சம் |
ரூ.8 லட்சம் |
(ரூ.25,000) |
RXT AMT |
ரூ.8.47 லட்சம் |
ரூ.8 லட்சம் |
(ரூ.47,000) |
RXT AMT (O) |
ரூ.8.80 லட்சம் |
ரூ.8.50 லட்சம் |
(ரூ.30,000) |
RXZ |
ரூ.8.80 லட்சம் |
ரூ.8.80 லட்சம் |
எந்த மாற்றமும் இல்லை |
RXZ AMT |
ரூ.9.35 லட்சம் |
ரூ.9.30 லட்சம் |
(ரூ.5,000) |
RXT (O) டர்போ [புதியது] |
– |
ரூ.9.30 லட்சம் |
– |
RXT (O) டர்போ AMT [புதியது] |
– |
ரூ.10.30 லட்சம் |
– |
RXZ டர்போ |
ரூ.10 லட்சம் |
ரூ.10 லட்சம் |
எந்த மாற்றமும் இல்லை |
RXZ டர்போ CVT |
ரூ.11 லட்சம் |
ரூ.11 லட்சம் |
எந்த மாற்றமும் இல்லை |
ரெனால்ட்டின் மூன்று கார்களிலும் ரெனால்ட் கைகர் விரிவான அப்டேட்களுடன் தனித்து நிற்கிறது. அதன் ஒப்பனை மேம்பாடுகளில் ரெட் கலர் பிரேக் காலிப்பர்கள் மற்றும் பிளாக் மற்றும் ரெட் கலர் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை அடங்கும். இது புத்துணர்ச்சியூட்டும் தோற்றத்தை அளிக்கிறது. ரெனால்ட் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுக்கான புதிய மிட்-ஸ்பெக் RXL வேரியன்ட்டையும், டர்போ-பெட்ரோல் இன்ஜினுக்கான RXT (O) மாறுபாட்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது, இவை இரண்டும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் வழங்கப்படுகின்றன. அதெல்லாம் இல்லை, ரெனால்ட் கைகரின் அனைத்து வேரியன்ட்களும் இப்போது கீழே குறிப்பிடப்பட்டுள்ள புதிய அம்சங்களுடன் வருகின்றன:
-
RXT (O) - ஆட்டோ ஏசி, எலக்ட்ரிக்கலி ஃபோல்டபிள் ORVM -கள், செமி லெதரெட் அப்ஹோல்ஸ்டரி
-
RXZ - ஆட்டோ ஃபோல்டபிள் ORVM -கள், ஆட்டோ-டிம்மிங் IRVM, செமி-லெதரெட் அப்ஹோல்ஸ்டரி, லெதரெட் ஸ்டீயரிங் வீல் கவர், க்ரூஸ் கண்ட்ரோல் (N.A இன்ஜினுடன்) மற்றும் ரெட் பிரேக் காலிப்பர்கள் (டர்போ வேரியன்ட்கள் மட்டும்)
இந்த அம்சங்களைத் தவிர, சப்-4m எஸ்யூவி ஆனது பின்புற சீட்பெல்ட் ரிமைண்டர்டர்கள் மற்றும் LED கேபின் லைட் ஆகியவற்றை ஸ்டாண்டர்டாக பெறுகிறது.
ரெனால்ட்டின் 2024 -ம் ஆண்டுக்கான அப்டேட்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?. மூன்று கார்களில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? கமென்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) -க்கான விலை ஆகும்
மேலும் படிக்க: க்விட் AMT
0 out of 0 found this helpful