• English
  • Login / Register

வெளியான படங்களில் கிடைத்த ஹூண்டாய் எக்ஸ்டர் டாஷ்போர்டின் ஃபர்ஸ்ட் லுக்

published on ஜூன் 14, 2023 06:12 pm by shreyash for ஹூண்டாய் எக்ஸ்டர்

  • 37 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இது கிராண்ட் i10 நியோஸ் மற்றும் வென்யூ போன்ற பிற ஹூண்டாய் மாடல்களின் திரைகளின் கலவையைக் கொண்டுள்ளது.

Hyundai Exter

  • ஹூண்டாய் எக்ஸ்டர் ஜூலை 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும், முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.

  • டூயல் டேஷ் கேம் செட்டப் மற்றும் சிங்கிள் பேன் சன்ரூஃப் போன்ற சில அதன் பிரிவிற்கான-முதல் அம்சங்களைப் பெறுகிறது.

  • வெளியில் கசிந்த இன்டீரியர் படங்களின் அடிப்படையில், இது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட டிரைவர்ஸ் டிஸ்பிளே (வென்யூவில் காணப்படுவது போல்) மற்றும் டச் ஸ்கிரீன் யூனிட் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

  • அது  ஐந்து கார் வேரியன்ட்களாக வழங்கப்படும் EX, S, SX, SX (O) மற்றும் SX (O) கனெக்ட்.

  • அது 1.2 லிட்டர் இன்ஜின்ன் மூலம் இயக்கப்படும், இது பெட்ரோல் மற்றும் CNG ஆப்ஷன்களில் வழங்கப்படும்.

  • ஹூண்டாய் எக்ஸ்டரின் விலை ரூ. 6 லட்சமாக (எக்ஸ் ஷோ ரூம்) நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் எக்ஸ்டரின்வெளியீட்டு தேதி நெருங்கும் இந்நேரத்தில், மைக்ரோ எஸ்யூவியின் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறுகிறோம். இப்போது, ​​​​அதன் இன்டீரியர்க் காட்சியை நாம் முதன்முதலாகப்  பெறுகிறோம், அதன் மேலும் சில அம்சங்களை உறுதிப்படுத்தும் வேரியன்ட்யில் இணையத்தில் வெளிவந்த சில கசிந்த படங்களுக்கு நன்றி. நாம் புதிதாக எதை காண முடிகிறது என்பதை இங்கு பார்ப்போம்.

கிராண்ட் i10  நியோஸ் -லிருந்து பெறப்பட்ட டாஷ்போர்டு

Our First Look At The Hyundai Exter Dashboard In Leaked Images

எக்ஸ்டர்- இன் இன்டீரியர்ம் உடனடியாக உங்களுக்கு  கிரான்ட் i10 நியோஸ் -ஐ , குறிப்பாக லேஅவுட்டை நினைவூட்டும். ஹூண்டாய் ஹேட்ச்பேக்கைப் போலவே, எக்ஸ்டரும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்  மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்கான  ஒருங்கிணைந்த ஹௌசிங் வடிவமைப்பையும், டிஸ்ப்ளேவுக்கு கீழே அதேபோன்ற தோற்றமளிக்கும் சென்ட்ரல் AC வென்ட்களையும் கொண்டுள்ளது. கசிந்த படங்களிலிருந்து கூட, டச் ஸ்கிரீன் அளவை தீர்மானிப்பது கடினம். இது கிரான்ட் i10 நியோஸ் இல் வழங்கப்பட்டுள்ள அதே 8-இன்ச் அமைப்பு அல்ல, ஆனால் i20 இல் காணப்படும் 10.25-இன்ச்ப் யூனிட்டை விட நிச்சயமாகச் சிறியது.

Our First Look At The Hyundai Exter Dashboard In Leaked Images

வென்யூ மற்றும் வெர்னா போன்ற மற்ற ஹூண்டாய் கார்களிலும் காணப்படும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட டிரைவரின் டிஸ்பிளேயை எக்ஸ்டர்  வழங்கும் என்பதை அவை உறுதிப்படுத்துகின்றன.  நமக்கு காணக் கிடைக்கும் அம்சங்களின் அடிப்படையில், எக்ஸ்டர் ஆட்டோ AC மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் உடன் வரும்.

நமக்கு  ஏற்கனவே தெரிந்த  கூடுதல் அம்சங்கள்

Hyundai Exter sunroof

ஹூண்டாய் எக்ஸ்டரின் பல அம்சங்கள் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. மைக்ரோ எஸ்யூவியில்  டூயல் டேஷ் கேம் மற்றும் வாய்ஸ் அசிஸ்டட் சிங்கிள் பேன் சன்ரூஃப் பொருத்தப்பட்டிருக்கும். மேலும், ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் அசிஸ்ட் மற்றும் 3-பாயின்ட் சீட் பெல்ட்கள் மற்றும் ஐந்து இருக்கைகளுக்கும் நினைவூட்டல்கள், பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு (TPMS) மூலம் பயணிகளின் பாதுகாப்பு கவனிக்கப்படும்.

ஹூண்டாய் தனது மைக்ரோ எஸ்யூவியை ஐந்து விதமான வேரியன்ட்களில் வழங்கும்: EX, S, SX, SX (O) மற்றும் SX (O) கனெக்ட். வேரியன்ட்கள் வாரியான விவரங்களை மாடலின் அறிமுக காலத்தில் மட்டுமே அறிய முடியும்.

மேலும் படிக்கவும்: ஹூண்டாய் எக்ஸ்டெர் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா

இன்ஜின் விவரங்கள்

Hyundai Exter Rear

எக்ஸ்டர் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது பெட்ரோலில் 5-ஸ்பீடு AMT உடன் இணைக்கப்படும். மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் அறிமுகத்தின் போது இது CNG ஆப்ஷனையும் பெறும்.

மேலும் பார்க்கவும்: முதன் முதலாக கேமராவின் கண்களுக்கு சிக்கிய, தோற்றத்தில் பொலிவு கூட்டப்பட்ட ஹூண்டாய் i20 N லைன்

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

ஹீண்டாய் எக்ஸ்டரின் ஆரம்ப விலை ரூ.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கிறோம். டாடா பன்ச், சிட்ரோன் C3, நிஸான் மேக்னைட், ரெனால்ட்-கைகர்  மற்றும் மாருதி ஃப்ரான்க்ஸ் ஆகியவற்றின் இடத்தை அறிமுகப்படுத்தப்பட்ட உடன் இது பெறும்.

படங்களின் ஆதாரம்

was this article helpful ?

Write your Comment on Hyundai எக்ஸ்டர்

2 கருத்துகள்
1
S
san
Jun 17, 2023, 10:28:05 AM

External ki tarif to sun rahe h jab dekhenge to pata chalega kitani jan hai look kaisa h

Read More...
    பதில்
    Write a Reply
    1
    S
    sachin gupta
    Jun 14, 2023, 7:25:43 PM

    Nice beautiful looking good features

    Read More...
      பதில்
      Write a Reply

      ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

      புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

      கார் செய்திகள்

      • டிரெண்டிங்கில் செய்திகள்
      • சமீபத்தில் செய்திகள்

      trending எஸ்யூவி கார்கள்

      • லேட்டஸ்ட்
      • உபகமிங்
      • பிரபலமானவை
      • டாடா சீர்ரா
        டாடா சீர்ரா
        Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
        செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
      • க்யா syros
        க்யா syros
        Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
        பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
      • பிஒய்டி sealion 7
        பிஒய்டி sealion 7
        Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
        மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
      • M ஜி Majestor
        M ஜி Majestor
        Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
        பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
      • நிசான் பாட்ரோல்
        நிசான் பாட்ரோல்
        Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
        அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
      ×
      We need your சிட்டி to customize your experience