Nissan Magnite ஃபேஸ்லிஃப்ட் காரின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது
published on செப் 24, 2024 06:10 pm by dipan for நிசான் மக்னிதே
- 118 Views
- ஒரு கருத்தை எழுதுக
நிஸான் மேக்னைட்டின் இந்த டீசரில் காரிலுள்ள புதிய அலாய் வீல் வடிவமைப்பை பார்க்க முடிகிறது.
-
நிஸான் மேக்னைட் 2020 ஆண்டு விற்பனைக்கு வந்தது. அதன் பின்னர் இப்போதுதான் முதல் பெரிய அப்டேட்டை பெறவுள்ளது.
-
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எஸ்யூவி அக்டோபர் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
-
அப்டேட்டட் பம்பர், ஹெட்லைட்கள் மற்றும் டெயில் லைட்களுடன் இது புதிய கிரில்லையும் பெறலாம்.
-
புதிய இன்டீரியர் டிரிம்கள் மற்றும் சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் சன்ரூஃப் உடன் வரலாம்.
-
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் செட்டப் (TPMS) ஆகியவை அடங்கும்.
-
அதே 1-லிட்டர் N/A பெட்ரோல் மற்றும் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வரலாம்.
-
விலை ரூ.6.30 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான நிஸான் இந்த ஆண்டில் நிஸான் மேக்னைட் காருக்கு ஒரு அப்டேட்டை கொடுக்க முடிவு செய்திருந்தது. வரும் அக்டோபரில் இந்த அப்டேட்டட் கார் அறிமுக செய்யபடுவதற்கு முன்னால் அதன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரில் நாம் பார்க்க முடிந்த விவரங்கள் இங்கே:
டீசரில் என்ன பார்க்க முடிகிறது ?
2024 மேக்னைட் காரில் அலாய் வீல்கள் புதிய டிஸைனில் இருக்கும் என்பதை டீஸர் உறுதிப்படுத்துகிறது. இது புதிய 6-ஸ்போக் டூயல்-டோன் அலாய் வீல்களுடன் இது வரும். இது எஸ்யூவியின் ஒட்டுமொத்த ஸ்டைலிங் அளவை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த புதிய அலாய் வீல்களின் அளவு, தற்போதைய-ஸ்பெக் ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அளவு 16 இன்ச் அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 நிஸான் கிராண்ட்: வெளிப்புறம்
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நிஸான் மேக்னைட் பாரத் என்சிஏபி (புதிய கார் அசெஸ்மென்ட் புரோகிராம்) சோதனையின் போது படம் பிடிக்கப்பட்டிருந்தது. இது தற்போதைய-ஸ்பெக் மாடலுடன் ஒப்பிடுகையில் காரில் வடிவமைப்பில் சில மாற்றங்கள் இருக்கும் என்பதை காட்டியது. படம் பிடிக்கப்பட்ட மாடல் புதிய ஹெட்லைட் ஹவுசிங்ஸுடன், புதிய கிரில் மற்றும் முன்பக்க பம்பர் வடிவமைப்பைக் கொண்டிருந்தது. எல்-வடிவ LED DRLகள் டெயில் லைட்களும் மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024 நிஸான் மேக்னைட்: இன்ட்டீரியர் மற்றும் வசதிகள்
உள்ளே 2024 நிஸான் மேக்னைட் அதே கேபின் தளவமைப்புடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் உட்புற டிரிம்களில் வேறு கலர் மற்றும் இருக்கைகளில் புதிய ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி உடன் வரலாம். அதன் பெரும்பாலான போட்டி கார்களில் இருப்பதால் புதிய மேக்னைட் சிங்கிள்-பேன் சன்ரூஃப் உடன் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
9 இன்ச் டச் ஸ்கிரீன் (மேக்னைட் கெசா பதிப்பில் உள்ளது), 7 இன்ச் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற வசதிகள் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடலிலும் கொடுக்கப்படலாம்.
மேலும் படிக்க: Skoda Kylaq அறிமுகமாகவுள்ள தேதி இதுதான்
2024 நிஸான் மேக்னைட் பவர்டிரெயின் ஆப்ஷன்கள்
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடல்களில் உள்ளதை போலவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் ஆப்ஷன் |
1-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
பவர் |
72 PS |
100 PS |
டார்க் |
96 Nm |
160 Nm வரை |
டிரான்ஸ்மிஷன்* |
5-ஸ்பீடு MT, 5-ஸ்பீடு AMT |
5-ஸ்பீடு MT, CVT |
*எம்டி = மேனுவல் டிரான்ஸ்மிஷன், ஏஎம்டி = ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன், சிவிடி = கன்டினியூஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன்
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
தற்போதைய ஸ்பெக் நிஸான் மேக்னைட் விலை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.10.66 லட்சம் வரை உள்ளது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மேக்னைட் ரூ.6.30 லட்சத்தில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கிறோம்.
இது ரெனால்ட் கைகர், டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வென்யூ போன்ற மற்ற சப்காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கு போட்டியாக இது இருக்கும். மேலும் மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் ஆகிய சப்-4 மீ கிராஸ்ஓவர்களுடனும் போட்டியிடும்.
விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை ( பான்-இந்தியா )
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: நிஸான் மேக்னைட் ஏஎம்டி