• English
  • Login / Register

புதிய தலைமுறை சுஸூகி ஸ்விஃப்ட் vs பழைய ஸ்விஃப்ட் மற்றும் போட்டியாளர்கள்: பவர் மற்றும் கிளைம்டு மைலேஜ் விவரங்கள் ஒப்பீடு

published on டிசம்பர் 11, 2023 12:11 pm by shreyash for மாருதி ஸ்விப்ட்

  • 117 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய தலைமுறை சுஸூகி ஸ்விஃப்ட் காரானது இப்போது விற்பனையில் உள்ள இந்தியா-ஸ்பெக் மாருதி ஸ்விஃப்ட்டை விட அதிக மைலேஜை கொடுக்கக்கூடியது.

New-gen Suzuki Swift, Maruti Swift, Hyundai Grand i10 Nios

உலகளவில் அறிமுகமான சில வாரங்களுக்குப் பிறகு, நான்காவது தலைமுறை ஜப்பான்-ஸ்பெக் சுஸூகி ஸ்விஃப்ட் காரின் பவர், டார்க் மற்றும் கிளைம்டு மைலேஜ் விவரங்களை பற்றிய தகவல் எங்களிடம் உள்ளது. இது ஒரு புதிய 3-சிலிண்டர் இன்ஜினை பெறுகிறது மற்றும் ஹைப்ரிட் மற்றும் வழக்கமான பெட்ரோல் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது. புதிய தலைமுறை ஸ்விஃப்ட் அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வர உள்ளது, அதன் இன்ஜின் விவரங்களை தற்போதுள்ள இந்திய-ஸ்பெக் மாருதி ஸ்விஃப்ட் அத்துடன் அதன் நேரடி போட்டியாளரான ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஆகிய கார்களுடன் கீழே ஒப்பிட்டு பார்த்துள்ளோம்.

விவரங்கள்

புதிய தலைமுறை சுஸூகி ஸ்விஃப்ட் (ஜப்பான்-ஸ்பெக்)

இந்தியா-ஸ்பெக் மாருதி ஸ்விஃப்ட்

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்

 

1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல்

1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல்

1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல்

பவர்

82 PS

90 PS (பெட்ரோல்) / 77.49 PS (CNG)

83 PS (பெட்ரோல்) / 69 PS (CNG)

டார்க்

108 Nm

113 Nm (பெட்ரோல்) / 98.5 Nm (CNG)

114 Nm (பெட்ரோல்) / 95.2 Nm (CNG)

டிரான்ஸ்மிஷன்

5-MT / CVT

5-MT / 5-AMT

5-MT / 5-AMT

மைலேஜ்

24.5 கிமீ/லி (மைல்ட்-ஹைப்ரிட்) / 23.4 கிமீ/லி (ரெகுலர் பெட்ரோல்) (WLTP கிளைம்டு)

22.38 கிமீ/லி (MT) / 22.56 கிமீ/லி (AMT) / 30.90 கிமீ/கிகி (CNG)

N.A.

கவனிக்கவும்: புதிய தலைமுறை ஸ்விஃப்ட்டிற்கான இந்த விவரங்கள் ஜப்பான்-ஸ்பெக் மாடலுக்கு மட்டுமே பொருந்தும். இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் போது அவற்றில் மாற்றங்கள் இருக்கலாம்.

2024 Suzuki Swift

  • புதிய தலைமுறை சுஸூகி ஸ்விஃப்ட் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை பெறுகிறது, இது இந்தியா-ஸ்பெக் மாருதி ஸ்விஃப்ட்டின் பெட்ரோல் பதிப்பை விட 8 பிஎஸ் குறைவான ஆற்றலையும் 5 Nm குறைவான டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. ஸ்விஃப்ட்டின் இரண்டு பதிப்புகளும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனை கொண்டிருந்தாலும், ஜப்பான்-ஸ்பெக் ஸ்விஃப்ட் ஒரு சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வருகிறது, அதே சமயம் ஹேட்ச்பேக்கின் இந்தியா-ஸ்பெக் பதிப்பில் 5-ஸ்பீடு AMT டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.

  • மறுபுறம் கிராண்ட் i10 நியோஸ் அதே திறன் கொண்ட 1.2-லிட்டர் 4 சிலிண்டர் இன்ஜினை பயன்படுத்துகிறது, ஆனால் இந்தியா-ஸ்பெக் மாருதி ஸ்விஃப்ட்டை விட குறைவான ஆற்றலை உருவாக்குகிறது. இருப்பினும், இந்தியா-ஸ்பெக் ஸ்விஃப்டைப் போலவே, கிராண்ட் i10 Nios ஆனது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீடு AMT என்ற ஆப்ஷனுடன் வருகிறது.

இதையும் பார்க்கவும்: கியா நிறுவனம் Sonet Facelift காரில் டீசல் மேனுவல் காம்போவை மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளது.

Hyundai Grand i10 Nios

  • மாருதி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஆகியவை அவற்றின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் சிஎன்ஜி பவர் ட்ரெயின் ஆப்ஷனையும் வழங்குகின்றன. மறுபுறம், ஜப்பான்-ஸ்பெக் சுஸூகி ஸ்விஃப்ட், CNG ஆப்ஷனுடன் வரவில்லை, இருப்பினும் அதன் புதிய 1.2-லிட்டர் 3-சிலிண்டர் இன்ஜின் ஆப்ஷனலாக 12V மைல்ட்-ஹைப்ரிட் செட்டப்பை கொண்டுள்ளது.

  • மேலும், ஜப்பானில் உள்ள ஸ்விஃப்ட், கூடுதலான மைலேஜ் -க்காக CVT உடன் ஸ்ட்ராங்-ஹைபிரிட் அமைப்பையும் கொண்டிருக்கலாம். இருப்பினும், அது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கான சாத்தியம் குறைவு.

2024 Suzuki Swift

  • இந்தியாவில் தற்போது விற்கப்படும் இரண்டு ஹேட்ச்பேக்குகளை போலல்லாமல், ஜப்பான்-ஸ்பெக் சுஸூகி ஸ்விஃப்ட் ஆல்-வீல் டிரைவ் (AWD) டிரைவ் டிரெய்னையும் வழங்குகிறது, இருப்பினும் இது இந்தியாவுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.

  • மைலேஜை பொறுத்தவரை, புதிய தலைமுறை ஸ்விஃப்ட் அதன் விரைவில் மாற்றப்படவிருக்கும் இந்தியா-ஸ்பெக் காரை விட கூடுதலான மைலேஜ் திறன் கொண்டது. புதிய ஸ்விஃப்ட் 3-சிலிண்டர் இன்ஜினை பயன்படுத்துவதாலும், மைல்டு ஹைப்ரிட் அமைப்பைக் கொண்டிருப்பதாலும் மைலேஜில் வித்தியாசம் தெரிய வருகிறது.

இதையும் பார்க்கவும்: மாருதி இவிஎக்ஸ் அடிப்படையிலான டொயோட்டா அர்பன் எஸ்யூவி கான்செப்ட் ஐரோப்பாவில் வெளியிடப்பட்டது

விலை மற்றும் போட்டியாளர்கள்

புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் ஏப்ரல் 2024 -க்குள் இந்தியாவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இதன் விலை ரூ.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கலாம். புதுப்பிக்கப்பட்ட கேபின் மற்றும் புதிய அம்சங்களுடன் வடிவமைப்பு மாற்றங்களை கொண்டுள்ளது. தற்போதுள்ள இந்திய-ஸ்பெக் மாருதி ஸ்விஃப்ட் தற்போது ரூ.5.99 லட்சம் முதல் ரூ.9.03 லட்சம் வரையிலும், ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ரூ.5.84 லட்சம் முதல் ரூ.8.51 லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் -க்கான விலை ஆகும்

மேலும் படிக்க: மாருதி ஸ்விஃப்ட் ஏஎம்டி

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Maruti ஸ்விப்ட்

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • Kia Syros
    Kia Syros
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மார, 2025
  • பிஒய்டி seagull
    பிஒய்டி seagull
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • எம்ஜி 3
    எம்ஜி 3
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
  • லேக்சஸ் lbx
    லேக்சஸ் lbx
    Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • நிசான் லீஃப்
    நிசான் லீஃப்
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
×
We need your சிட்டி to customize your experience