புதிய Honda Amaze காரின் டீசர் வெளியாகியுள்ளது
published on நவ 04, 2024 09:26 pm by shreyash for ஹோண்டா அமெஸ்
- 47 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய வடிவமைப்பைத் தவிர புதிய ஜென் ஹோண்டா அமேஸ் புதிய கேபின் செட்டப் மற்றும் மேலும் சில கூடுதல் வசதிகளை கொண்டிருக்கும்.
-
புதிய ஜெனரல் அமேஸ் புதிய செய்யப்பட்ட ஹெட்லைட்கள் மற்றும் புதிய கிரில் கொண்ட ஷார்ப்பான முன் வடிவமைப்பைக் கொண்டிருக்கும்.
-
உள்ளே இது டூயல்-டோன் கேபின் தீம் கொண்ட புதிய டாஷ்போர்டு செட்டப் இருக்கலாம்.
-
பெரிய டச் ஸ்கிரீன், சிங்கிள் பேனல் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற புதிய வசதிகளை பெறும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ரியர் வியூ கேமரா ஆகியவை அடங்கும்.
-
விலை ரூ.7.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது விற்பனையில் உள்ள இரண்டாம் தலைமுறை ஹோண்டா அமேஸ் கார் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டை 2021 ஆண்டு கடைசியாக பெற்றது. இப்போது ஹோண்டாவின் சப்காம்பாக்ட் செடான் இப்போது ஒரு ஜெனரேஷன் அப்டேட்டுக்கு தயாராக உள்ளது. இது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகமாகவுள்ளது. மேலும் ஹோண்டா இப்போது புதிய தலைமுறை அமேஸின் முன் வடிவமைப்பை ஸ்கெட்ச் வடிவில் டீசர் செய்துள்ளது. இந்த புதிய அமேஸ் 2024 ஆண்டில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது 2025 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்படலாம்.
கார் எப்படி இருக்கிறது ?
புதிய தலைமுறை ஹோண்டா அமேஸின் ஷார்ப்பான வடிவமைப்பை டிசைன் ஸ்கெட்ச் சுட்டிக்காட்டுகிறது. ஹெட்லைட்கள் இப்போது நேர்த்தியாக எலிவேட்டில் உள்ளதைப் போன்ற புதிய LED DRL -களாக மாற்றப்பட்டுள்ளன. கிரில் முற்றிலும் புதியதாக தெரிகிறது. அதே நேரத்தில் ஃபாக் லைட்களின் இடம் மாறவில்லை. இந்த மாற்றங்களுடன் புதிய தலைமுறை அமேஸ் மிகவும் ஆக்ரோஷமான தோற்றத்துடன் இருக்கும்.
புதிய ஜென் அமேஸின் பக்கவாட்டு மற்றும் பின்புற தோற்றங்களை ஹோண்டா வெளியிடவில்லை. ஆனால் இது புதிய அலாய் வீல்களை பெறும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் பின்புற பம்பர் மற்றும் டெயில் லைட்களும் மாற்றியமைக்கப்படும்.
கேபின் அப்டேட்கள்
புதிய தலைமுறை அமேஸின் கேபினை ஹோண்டா இன்னும் வெளியிடவில்லை என்றாலும், புதிய டேஷ்போர்டு லேஅவுட் மற்றும் புதிய கேபின் தீம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அமேஸ் பெரிய டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் போன்ற புதிய வசதிகளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ரியர் வியூ கேமரா ஆகியவை கொடுக்கப்படலாம்.
மேலும் பார்க்க: 2024 Maruti Dzire காருக்கான முன்பதிவுகள் தொடக்கம்
அதே இன்ஜின் பயன்படுத்தப்படலாம்
தற்போதுள்ள அமேஸ் உடன் வழங்கப்படும் 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினை ஹோண்டா பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் |
1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் |
பவர் |
90 PS |
டார்க் |
110 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT, CVT* |
* CVT - கன்ட்டினியூஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன்
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் விலை ரூ.7.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது புதிய தலைமுறை மாருதி டிசையர், டாடா டிகோர், மற்றும் ஹூண்டாய் ஆரா ஆகிய கார்களுடன் போட்டியிடும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: அமேஸ் ஆட்டோமேட்டிக்
0 out of 0 found this helpful